திங்கள், 9 ஜூலை, 2012

பல்லைக் கவனியுங்கள்!


"பல்லை க் கவனிங்க!' 


பல் சீரமைப்பு நிபுணர் டாக்டர் உதயராஜா: பற்களில் வரும் முக்கால் பங்கு நோய்களை அது வராமலேயே, முன்கூட்டியே தவிர்க்க முடியும். தானாக வரும் நோய்கள், பற்களைப் பொறுத்தமட்டில், குறைவு தான். தினம் இரண்டு முறை பல் துலக்கும் பழக்கத்தையும், சாப்பிட்டவுடன் வாயை நன்றாகக் கொப்பளிப்பதும் மிகவும் முக்கியம். பற்களை அரை மணி நேரத்திற்கும் மேலாக தேய்த்தால், பற்களில் உள்ள எனாமல் தேய்ந்துவிடும். பற்களுக்கு, எனாமல் தான் மிக முக்கியம். நாம் சாப்பிடும் உணவு அப்படியே பற்களில் தங்கி விடுவதால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அவற்றை அமிலங்களாக மாற்றி, பல் சொத்தைக்கு வழி ஏற்படுத்திவிடும். பல் சொத்தை ஏற்பட்டால், அதற்கு உடனடித் தீர்வு, பல் பிடுங்குவது கிடையாது. சொத்தைப் பல்லை அடைத்தல், அதைச் சுற்றி, "கேப்' போடுவது, "ரூட் கேனால்' போன்றவை மூலம், பற்களைப் பாதுகாக்கலாம். குழந்தைகளுக்கு இரவில் பால், சர்க்கரை சேர்த்த பால், சாக்லெட், பிஸ்கட் போன்றவற்றை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி சாப்பிட்டால், வாயைக் கழுவாமல், பல் துலக்காமல் படுக்கக் கூடாது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். "சீலேன்ட்' என்ற ஒரு கோட்டிங் போட்டுக் கொண்டால், 90 சதவீத பல் சொத்தையைக் குறைத்துவிடலாம். பற்களோ, தாடையோ சீராக சரியான வடிவத்தில் வளர்ச்சி பெறாமல் இருந்தால், அதை சிறு வயதிலேயே கவனித்து, கட்டுப்படுத்தி முக அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும். பொதுவாகவே, அதிக அளவு சாக்லெட், ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சிட்ரிக் ஜூஸ்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வெள்ளை வெளேரென்று, இருந்தால் தான் அவை அழகான, ஆரோக்கியமான பற்கள் என்பதில்லை. லேசான பழுப்பு நிறத்துடனும் பற்கள் இருக்கும். பற்களைப் பொறுத்தவரை, அனைத்து விதமான சிகிச்சைகளும் இருந்தாலும், சில சிறிய வழிமுறைகளை மேற்கொண்டு, பற்களை ஆரோக்கிமாக, அழகாக நம்மால் பராமரித்துக் கொள்ள முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக