வியாழன், 12 ஜூலை, 2012

கிணற்றில் தவறி விழுந்த சிறுவனைக் காப்பாற்றிய 11அகவை மாணவன்!

 


பாலக்காடு:கேரளாவில், கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனை, தன் உயிரை துச்சமென மதித்து காப்பாற்றினான், 11 வயது மாணவன். அவனது துணிச்சலை பொதுமக்கள் பாராட்டினர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் அடுத்த புதுப்பரம்பு கிராமத்தில் வசிப்பவர் சம்சுதீன். இவரது மகன் ஷிபின் 5, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, வீட்டுக்கு அருகேயுள்ள தோப்பில் விளையாடிக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாக, அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்தான்.தற்செயலாக அந்த வழியே வந்து கொண்டிருந்த சிறுவன் அர்ஷாத், 11, இதை பார்த்துள்ளான். உடனடியாக கிணற்றில் குதித்து, மூழ்கிய சிறுவனின் தலைமுடியை கெட்டியாக பிடித்து கொண்டு கிணற்றின் ஓரமாக கொண்டு வந்து சேர்த்தான். அதற்குள், சத்தம் கேட்டு அங்கு திரண்ட ஊர் மக்கள், இருவரையும் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, முதலுதவி சிகிச்சை தரப்பட்டது.

ஞாரைத்தடம் பாராபரம்பில் கிராமத்தை சேர்ந்த அஷ்ரபின் மகன் அர்ஷாத், கோட்டக்கல் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். தன்னுயிர் பற்றி கொஞ்சமும் பயப்படாமல், மற்றொரு உயிரை காப்பாற்றிய அர்ஷாத்தை உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக