சொல்கிறார்கள்
"நாங்கள் சகோதரிகள் இல்லை!'
கர்நாடக இசைப்பாடகி, குடந்தை சகோதரி மஞ்சுளா: நான் சின்ன வயதிலேயே என் அம்மாவை குருவாக ஏற்றுக் கொண்டேன். இசை கற்றுக் கொடுப்பதில் என் தாய் கண்டிப்பானவர். எக்காரணம் கொண்டும் நோட்டில் எழுதி வைத்துப் பாடக் கூடாது என்பார். காரணம் நாம் பாடுவது அனைத்தும், மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும் என வலியுறுத்துவார். இப்படி கண்டிப்பான வகுப்புகள் இருந்ததால் தான் 18 வயதிலேயே இசை வகுப்பு எடுக்கும் அளவிற்கு என்னால், முன்னேற முடிந்தது.ஒன்பது வயதிலேயே, என் அம்மாவுடன் மேடையேறிப் பாடிவிட்டேன். பின், அவருடனேயே தமிழகம் முழுவதும் கச்சேரிகளில் பாடத் துவங்கினேன். அம்மாவும், பொண்ணுமாகப் பாடினாலும், நிறைய பேருக்கு எங்களைப் பார்த்தால் சகோதரிகள் மாதிரி தான் தெரியும். அந்தளவிற்கு என் அம்மா இளமையாக இருப்பார். நாளடைவில், இசை ரசிகர்கள் எங்களை "குடந்தை சகோதரிகள்' என அழைத்தனர். என் அம்மா இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரின் மரணம் எனக்கு பெரிய இழப்பு. அவர் நினைவாக வீட்டிலேயே இசை வகுப்பு நடத்துகிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் என்று ஐந்து மொழிகளில் மேடைகளில் பாடுகிறேன். இசைப் பேருரைகள் செய்கிறேன். நிறைய வெளிநாடுகளுக்கும் சென்று வந்தாச்சு, விருதுகள், பட்டங்களும் கிடைத்துவிட்டன.சமீபத்தில் ஒரு கலைக் கல்லூரியில் "இசைப்பேரொளி' என்று பட்டம் கொடுத்தனர். அந்தப் பட்டத்துடன், மலேசியா முருகன் கோவிலுக்குச் சென்று கச்சேரி பண்ணிவிட்டு வந்ததைப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். இசையில் டாக்டரேட் வாங்கவேண்டும் என்பது தான் என் இலக்கு. என் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் என் அம்மா வின் ஆசிர்வாத்தினால் தான் நடக்கின்றன. அவரின் ஆசியால், விரைவில் என் இலக்கையும் எட்டிவிடுவேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக