செவ்வாய், 8 மே, 2012

நில நடுக்க அச்சம் தமிழ்நாட்டில் வேண்டா

சொல்கிறார்கள்
பயம் வேண்டாம்!


நிலநடுக்க ஆய்வு மைய இயக்குனர் கோபால்: இந்தியாவில் எங்கெல்லாம் நிலநடுக்கப் பாதிப்பு ஏற்படும் என்று, புவியியல் ஆய்வு நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து வரையறுத்துள்ளனர். அதில், தமிழகத்தில் எந்தப் பகுதியுமே இல்லை என்பதால், நம் மாநிலத்தில் பூகம்பம் வராது என்று உறுதியாகவே சொல்ல முடியும்.சமீபத்தில், லேசான பூமி அதிர்ச்சியைத் தான் நாம் உணர்ந்தோம்; அதுவும், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிகழ்வின் தாக்கம் தான். நம் மாநிலத்தில், கட்டடங்கள் இடிந்து விழும் அளவிற்கு பூகம்பம் ஏற்படாது. எனவே, மக்கள் கட்டடத்தை விட்டு வெளியே ஓடிப் போய், சாலையில் பதட்டத்தை ஏற்படுத்துவதெல்லாம் தேவையற்றது.பூகம்பம் ஏற்படுவதற்கும், அந்நேரத்தில் மொபைல் போன்கள் வேலை செய்யாமல் போவதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனாலும், பதட்டப்படும் மக்கள் அனைவரும், அந்நேரங்களில் உறவினர்கள், நண்பர்கள் என, யாரையாவது தொடர்பு கொள்ள முயற்சி செய்வர். இப்படி, அனைவரும் ஒரே நேரத்தில் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால், ஏற்படும் சிக்னல் ஜாம் தான் இதற்குக் காரணம்.பூகம்பம் வரும் முன், அதைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் உலகளவிலேயே இன்னமும் வரவில்லை. ஆனால், சுனாமி வருவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன், கண்டுபிடித்து சொல்ல முடியும். சுனாமியும், நேரடியாக நம் நாட்டில் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு.வெளிநாட்டில் எங்காவது சுனாமி ஏற்பட்டால், இங்கு கடற்கரையோரங்களில் பாதிப்பு வரலாம். ஆனாலும், முன்கூட்டியே சுனாமி எச்சரிக்கை கொடுப்பதால், மக்கள் பாதுகாப்பாக வெளியேறி, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.புதிதாக கட்டடம் கட்டுவோர், நிலநடுக்கம் ஏற்பட்டால், பாதிக்காத வகையில், உறுதியாக அஸ்திவாரம் போட்டு, தரமான கட்டுமானப் பொருட் களைக் கொண்டு கட்டினால், பூகம்பம் பற்றிய கவலையே வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக