புதன், 9 மே, 2012

தூக்கத்திலும் விண்வெளி ப் பயணம்:

சொல்கிறார்கள்

தூக்கத்திலும் விண்வெளி ப் பயணம்:


உலக அளவில் நாசா நடத்திய விண்வெளி பற்றிய குறும்படப் போட்டியில் தேர்வாகியிருக்கும் பிளஸ் 2 மாணவி ஸ்ரீசங்கரி: நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது, என் ஆசிரியர் வகுப்பில் முதல் முறையாக விண்வெளிப் பாடத்தை நடத்தியபோது, எனக்கு அதில் ஆச்சர்யமும், ஆசையும் ஏற்பட்டது. அதிலிருந்து, எப்பவும் என் மனதில் நிலவு, சூரியன், நட்சத்திரங்கள் விண்வெளிப் பாடம் தான். தூக்கத்தில் கூட, விமானத்திலும், ராக்கெட்டிலும் போவது போலத் தான் எனக்கு கனவு வரும். "நாசா' நிறுவனம் உலகளவில் நடத்தும் குறும்படப் போட்டி பற்றி செய்தித்தாளில் பார்த்தபோது, இதில் நான் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். "விண்வெளியில் புரதச் செல் தயாரிப்பது எப்படி?' என்பது தான், குறும்படத்திற்கு நான் எடுத்துக் கொண்ட தலைப்பு. தற்போது, விண்வெளியில் புரதச் செல் குறைந்து, பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இது இன்னும் அதிகமானால், விண்வெளி மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். அந்த பாக்டீரியாக்களைத் தடுத்து நிறுத்தும் விதமாக புரதச் செல்களை அதிகமாக்குவது தான், என் கான்செப்ட். குறும்படம் எடுக்கும் தொழில் நுட்பங்களை கொஞ்சம் கொஞ்சமாக நானே கற்றுக் கொண்டேன். பண உதவியை என் அப்பா செய்தார். குறும்படத்தை, இரண்டு நிமிட நேரத்திற்குள் முடிப்பது போல் தயாரிக்க வேண்டும். நான் ஒன்றரை நிமிடத்திலேயே முடித்துக் கொண்டாலும், அதை மிகவும் திருப்தியுடன், தன்னம்பிக்கையுடன் நாசாவிற்கு அனுப்பி வைத்தேன். உலக அளவில் நடத்தப்படும் போட்டியில், 2,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 60 போட்டியாளர்களில், நானும் ஒருத்தி. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பள்ளியில் பாராட்டு விழா நடத்தி, என்னை கவுரவப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக