சனி, 12 மே, 2012

நான் தூதுவன்

 சொல்கிறார்கள்ஏழைகளுக்கு உதவி செய்யும் தேசிங்கு: காது கேட்காத, வாய் பேச முடியாத ஐந்து வயது குழந்தையின் சிகிச்சைக்காக, உதவி கேட்டு எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதற்காக ஏழு லட்சம் ரூபாய் நிதி திரட்டும் முயற்சியில் இப்போது இறங்கி யிருக்கிறோம். இது போல், என்னிடம் உதவி கேட்டு வரும் கடிதத்தின் உண்மைத் தன்மையை முதலில் விசாரிப்போம். பின், அதை ஜெராக்ஸ் எடுத்து என் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்புவேன். சில தொண்டு நிறுவனங்களிடம் உதவி கேட்பேன். இதைத் தவிர, நான் தனியாக எந்த அமைப்பையும் நடத்தவில்லை. எந்த தொண்டு நிறுவனத்திலும் உறுப்பினராகவும் இல்லை. என்னிடம் வரும் நிதியை சரியான முறையில், சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு போய் சேர்க்கிறேன். இது தவிர, அரசு தரும் நிதியை வாங்கித் தருவதற்கும் உதவி செய்கிறேன். இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண தூதுவன். உதவிகள் கேட்டு வரும் விண்ணப்பத்துடன் சிலரைப் போய் பார்க்கிறேன், கேட்கிறேன், கிடைக்கிறது. அவர்கள் எதிர்பார்த்த உதவியை செய்கிறேன் அவ்வளவு தான். என் சம்பளத்தின் சிறு பகுதியையும், தெரிந்தவர்கள் தரும் பணத்தையும் வைத்து, சிறிய அளவில் கல்வி உதவிகளைச் செய்கிறேன். இன்னும் கூடுதலாக என்ன உதவிகள் செய்யலாம் என்று யோசித்த போது தோன்றியது தான் மருத்துவ உதவி சிகிச்சை. கடந்த, 2005ல் தான் இந்த உதவியை செய்யத் துவங்கினேன். இந்த ஏழு ஆண்டில், 20 பேருக்கு இதய நோய் சிகிச்சைக்காக உதவி செய்திருக்கிறோம். நெல்லை, வேலூர், காஞ்சி, கடலூர், சிவகங்கை, போரூர் என, பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன் பெற்றுள்ளனர். எப்போது போய் கேட்டாலும், உதவி செய்யும் சில நல்ல உள்ளங்களுக்கு, நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக