சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் 200 போர்க்குற்றவாளிகள் லண்டனில் புகலிடம்
பதியப்பட்ட நாள்May 9th, 2012 நேரம்: 10:29
ஐரோப்பாவின் மனிதஉரிமைச் சட்டங்களே அதற்குக் காரணம்.
இவ்வாறு லண்டனில் புகலிடம் தேடியுள்ள
போர்க்குற்றவாளிகளில் சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், ருவாண்டா,
சியாராலியோன், சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்
முக்கியமானவர்களாவர்.
கடந்த 18 மாதங்களில் இவ்வாறான 207
சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவின் எல்லை
முகவரகம் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் அவர்களில் 12 பேர் மட்டுமே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
போர்க்குற்றவாளிகள் பிரித்தானியாவை
பாதுகாப்பான புகலிடமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இன்னும் வலுவான
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று லண்டனைத் தளமாக கொண்ட அமைப்பு ஒன்று
வலியுறுத்தியுள்ளதாகவும் ‘தி சன்‘ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் போர்க்குற்றங்களை இழைத்ததாக
குற்றம்சாட்டப்படும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் உள்ள சிறிலங்கா
தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 18 மாதங்களாகப்
பணியாற்றியிருந்தார்.
இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுப்பதற்கு வசதியாக, இராஜதந்திர விலக்குரிமையை விலக்கிக் கொள்ளுமாறு
பிரித்தானிய அரசிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதும், அதனை பிரித்தானிய
வெளிவிவகார அமைச்சு செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள்நாயகம்பேசும் கொலைவெறியர்களைத்தண்டிப்பது யார்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
பதிலளிநீக்கு