செவ்வாய், 8 மே, 2012

வடக்கில் தமிழர்கள் மீது திணிக்கப்படும் சிங்கள மரபு

வடக்கில் தமிழர்கள் மீது திணிக்கப்படும் சிங்கள மரபு – ஜப்பானிய பிரதிப் பிரதமருக்கு வெற்றிலை கொடுத்து மரியாதை

japan-DPM-2
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சிறிலங்கா வந்த ஜப்பானிய பிரதிப் பிரதமர் கட்சுயா ஒகாடா, வடபகுதிக்குச் சென்றிருந்தார்.
அங்கு ஜப்பானிய நிதியுடதவியுடன் மேற்கொள்ளப்படும் உதவித் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
ஜப்பானிய உதவியுடன் 350 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் அக்கராயன்குள புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்ட அவர் பின்னர், சாந்தபுரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வுக்கும் சென்றிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் வேலணையில் கருவாடு பதனிடும் தொழில் நிலையம் மற்றும் அச்சுவேலியில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணை ஆகிய இடங்களுக்கும் ஜப்பானிய பிரதி பிரதமர் சென்று பார்வையிட்டார்.
ஜப்பானிய பிரதிப் பிரதமரை அச்சுவேலியில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெற்றிலை கொடுத்து வரவேற்றார்.
அதேவேளை கிளிநொச்சி சாந்தபுரத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வுக்குச் சென்ற போதும், அவருக்கு தாய் ஒருவரும், சிறுவன் ஒருவனும் வெற்றிலை கொடுத்து வரவேற்றதைக் காணமுடிந்தது.
தமிழரின் பண்பாட்டு மரபில் வெற்றிலை கொடுத்து வரவேற்கும் வழக்கம் இல்லை.
சிங்களவர்களின் இந்த மரபு இந்த நிகழ்வுகளின் போது, சிறிலங்கா அரசினால் தமிழர்களிடம் திணிக்கப்பட்டுள்ளது.
இரு மாவட்டங்களிலும் இவ்வாறு ஒரே மாதிரியாக வெற்றிலை கொடுத்து வரவேற்கப்பட்டதால், சிறிலங்கா அரசின் நேரடி உத்தரவின் பேரிலேயே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக