அம்பேத்கார் கையிலும் சாட்டைஉள்ளது. எனவே, அவர் முன்பக்கம் சாட்டை கொண்டு நத்தையை விரைவுபடுததுகிறார். நேரு பின்பக்கம் இருந்து நத்தையை விரைவு படுத்த சாட்டையைக் கையில் எடுத்துள்ளார் என்றே தெரிகின்றது. அவரது பார்வை யும் நத்தையை நோக்கித்தான் உள்ளது.அம்பேத்காருக்கு எதிராக இருந்தது என்றால் அப்போதே எதிர்ப்பு இருந்திருக்கும். மேலும் நேருவும் உடன்பட்டிருக்கமாட்டார். அரசமைப்பு வரைவின் மெதுவான செயல்பாட்டிற்கு எதிரானதை அம்பேத்காருக்கு எதிராக இன்றைய சூழலில் கருதி விட்டனர். இருப்பினும் தவறான எண்ணம் விளைவித்து விட்டதால் இதைப் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியது பாராட்டிற்குரியது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
அம்பேத்கர் கார்ட்டூன் நீக்கப்படும்: கபில்சிபல்
First Published : 11 May 2012 03:18:13 PM IST
தினமணி Last Updated :
11 May 2012 03:56:32 PM IST
புதுதில்லி,
மே.11: என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பிஆர்.அம்பேத்கரின்
கார்ட்டூன் வெளியானது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
கபில் சிபல் வருத்தம் தெரிவித்தார்.முன்னதாக அந்த கார்ட்டூன் அம்பேத்கரை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று கூறி மக்களவையில் தலித் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்து
கருத்து தெரிவித்த கபில்சிபல், அந்த கார்ட்டூன் இனிமேல்
விநியோகிக்கப்படாது. அம்பேத்கரை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அவரது புகழை
களங்கப்படுத்த முடியாது என்றார்.இது அரசியல் விவகாரம் அல்ல. அந்த
கார்ட்டூன் புத்தகங்களில் வெளிவந்த 2006-ல் நான் மனிதவள மேம்பாட்டுத் துறை
அமைச்சராக இல்லெயனினும் இந்த விவகாரத்துக்காக தனிப்பட்ட முறையில் நான்
மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்த சமுதாயத்தையும் இழிபடுத்தும் நோக்கம்
எங்களுக்கில்லை என்றார் அவர்.அந்த கார்ட்டூனை என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களின் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கபில் சிபல் தெரிவித்தார்,
++++++++++++++++++++++++++++++++++++++++++
First Published : 12 May 2012 01:43:19 AM IST
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக