திரு மணியணின் கருத்தே அனைவரும் ஏற்கத்தக்க உண்மையான கருத்து. பொதுவுடைமைவாதிகள் தாய்மொழிக்கல்வி வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இந்தி வேண்டும் என்பார்கள். எனவேதான் கருத்து எதுவும் பதிய மனமில்லை. நாட்டில் அறிஞர்களும் அறிவியலாளர்களும் தொழில் முனைவோர்களும் கலை வல்லுநர்களும் பெருக வேண்டுமெனில் தாய்மொழியாம் தமிழிலேயே கல்வி தேவை. ஆனால், அரசியல்வாதிகள் ஆங்கிலவழிப் பள்ளியை நடத்துவதால் இதற்கு எதிராக உள்ளனர்.
ஆன்றோர்கள் ஒன்றுபட்டுப் போராடி அனைத்துநிலையிலும் தமிழ்வழியிலான கல்வி அமையவும் பாகுபாடின்றி அனைவருக்கும் கட்டணமில்லாக் கல்விவழங்கவும் ஆவன செய்ய வேண்டும்.
ஆன்றோர்கள் ஒன்றுபட்டுப் போராடி அனைத்துநிலையிலும் தமிழ்வழியிலான கல்வி அமையவும் பாகுபாடின்றி அனைவருக்கும் கட்டணமில்லாக் கல்விவழங்கவும் ஆவன செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தாய்மொழியில் மட்டுமே கல்வி: சங்கரய்யா வலியுறுத்தல்
First Published : 11 May 2011 02:46:02 AM IST

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை கோரும் மாநாட்டில் வெளியிடப்பட்டபொதுக்கல்வி என்ற புத்தகத்துடன் மூத்த கம்யூனிஸ்ட் தலைவ
சென்னை, மே 10: தாய்மொழியையே பாடமொழியாகக் கொண்டு கல்வி வழங்க வேண்டும் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா வலியுறுத்தினார். பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை கோரும் மக்கள் இயக்கத்தை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது: அவரவர் தாய்மொழியைப் பாடமொழியாகக் கொண்டு கல்வி வழங்க வேண்டும். மருத்துவம் உள்பட அனைத்துப் படிப்புகளும் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்ப்பதே, உண்மையான மாநில சுயாட்சியாக இருக்கும். சமச்சீர் கல்வி சரியில்லை என்று குறை சொல்லுகிறார்கள். அதை தவிர்த்து, அந்தக் கல்வி முறையை சீரமைக்க ஆலோசனைகளைத் தர வேண்டும். அதேபோல், அந்தக் கல்விமுறையை ஆண்டுக்கொரு முறை செழுமைப்படுத்த வேண்டும் என்றார் சங்கரய்யா. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளையும் ஒரே இயக்ககத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் துணைவேந்தர்கள் வே. வசந்திதேவி, ச.முத்துக்குமரன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் ஐ.பி. கனகசுந்தரம், பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துகள்


By PS Manian
5/11/2011 8:16:00 AM
5/11/2011 8:16:00 AM