புதன், 11 மே, 2011

which was needed for 2g licence? : உரிமம் பெற உடல் வலிமையே அவசியமாக இருந்தது:ம.பு.து.(சிபிஐ)

உண்மையிலேயே முண்டியடித்துக் கொண்டு ஓடிச் சென்றிருந்தார்கள் எனில் உடல் வலிமை எனலாம். ஆனால், உண்மையில் மேலிடத்தின் வலிமையான பண உறவு கொண்டிருந்த குறுக்கு மூளைக்காரர்களுக்கே உரிமம் தரப்பட்டுள்ளது.எனவே, கிண்டலாகச் சொல்லி இருந்தாலும் உவமை தவறு. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



ஜி உரிமம் பெற உடல் வலிமையே அவசியமாக இருந்தது: சிபிஐ

First Published : 11 May 2011 03:14:27 AM IST


புதுதில்லி, மே 10: உடல் வலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே 2ஜி அலைக்கற்றை உரிமம் பெறுவதில் முன்னுரிமை கிடைத்திருக்கிறது என்று சிபிஐ சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாதிடப்பட்டது.  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மேம்பாட்டாளர் சாஹித் உஸ்மான் பல்வா சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எந்தத் தவறும் செய்யாத என்னை குறிவைத்து சிபிஐ தாக்குகிறது என்று அந்த மனுவில் பல்வா குறிப்பிட்டிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. சிபிஐ சார்பில் மூத்த வழக்கறிஞர் யூ.யூ.லலித் ஆஜரானார்.  பல்வாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அவர், "2ஜி உரிமம் பெறுவதற்கான முன்னுரிமை என்பது விண்ணப்பித்த நாளை வைத்து முடிவு செய்யப்படவில்லை. மாறாக தொலைத் தொடர்பு அலுவலக கவுன்டர்களை நோக்கி எவ்வளவு வேகமாக முண்டியடித்துக் கொண்டு செல்ல முடிந்தது என்பதைப் பொறுத்துத்தான் முன்னுரிமை முடிவு செய்யப்பட்டது' என்றார்.  ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு உரிமம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது என்றும் லலித் வாதிட்டார்.  2ஜி உரிமம் வழங்கப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் முன்னரே ஸ்வான் டெலிகாம் சார்பில் உரிமத்தொகைக்கான ரூ.1,658 கோடி வங்கி வரைவோலை எடுக்கப்பட்டிருந்ததையும் லலித் சுட்டிக்காட்டினார்.  இந்த ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த நிறுவனம், கலைஞர் டி.வி.க்கு லஞ்சமாக ரூ.200 கோடி வழங்கியிருக்கிறார்கள். அதுபற்றி ஊடகங்களில் செய்தி வெளியாகத் தொடங்கியதும், வழக்குப் பதிவான பிறகு அந்தத் தொகை திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது என்று லலித் வாதிட்டார்.  வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக