செவ்வாய், 10 மே, 2011

thamizh words for phones

 
 பேசியும் இசைப்பியும்
phone என்பது ஒலி்யைக் குறிக்கும். இது வெளிப்படுத்தும் ஒலியாகவும் இருக்கலாம்; உணரும் ஒலியாகவும் இருக்கலாம். முதலில் டெலபோன் என்னும் பொழுது பேசி எனக்கையாளப்பட்டதால் போன் என்றாலேயே பேசி எனக் கருதிப் பலர் தவறான சொல்லாக்கங்களுக்கு முயல்கின்றனர். எட்போன் என்பதும் இயர் போன் என்பதும் பேசப்பய்ன்படுவன அல்ல. உச்சித்தலை வழியாகச் செவிகளில் பொருத்திக் கேட்கவும் நேரடியாகச் செவிகளில் பொருத்திக் கேட்கவும் பயன்படுவனவே. எனவே, இத்தகைய நேர்வுகளில்,
சொல்லி, கேட்பி,ஒலிப்பி, இசைப்பி என்பன ஏற்றனவாக அமையும். ஒலி என்பது  இசையொலியையும குறிக்கும்; இசை என்பதும் ஒலியையும் குறிக்கும். எனவே, நாம் நண்பர்கள் கேட்டுள்ள சொற்களுக்குப் பின்வருமாறு சொல்லாக்கங்கள் மேற்கொள்வதே சிறப்புடைத்து:
head-phone -உச்சி இசைப்பி / முகட்டு இசைப்பி
ear-phone - செவி இசைப்பி
cell-phone - அலை பேசி
cordless phone - கைப்பேசி
walk-man -நடை இசைப்பி
walk-talky / walki talkie- - நடைபேசி
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக