கழுத்தைச் சுற்றிய பொருள் என்னும் இந்நூல் பெண் எழுத்தாளர் சிமமந்தா கோழி அடிச்சி (Chimamanda Ngozi Adichie) என்பவரால் எழுதப் பெற்ற சிறையறை 1 (செல் one)முதலான 12 சிறுகதைகளின் தொகுப்பு. முதல் கதை சிறைக்கு அனுப்பபட்டு அங்கேயே வாழ்வு முடிந்த இருவர் பற்றிய கதை. ௧௧ ஆவது கதை நாளை வெகு தொலைவில் (Tomorrow Is Too Far) என்னும் கதையாகும்.கழுத்தைச் சுற்றித் தண்டனை வளையம் இறுகினாலும் தன்னம்பிக்கையுடன் இருப்பதற்காகப் படிக்கலாம்.வருங்காலம் வெகு தொலைவில் உள்ளதோ என்னும் ஐயப்பாட்டாலும் படிக்கலாம். எப்படியோ படித்துப் பொழுது போக்குவது நல்ல செயல்தானே! பெண் படைப்பாளி மற்றொரு பெண் படைப்பாளியின் படைப்புகளைப் படிப்பதும்நன்றுதானே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து கனிமொழிக்கு விலக்கு
First Published : 10 May 2011 12:42:57 PM IST
Last Updated : 10 May 2011 03:14:21 PM IST

புதுதில்லி, மே.10: நீதிமன்றத்தில் ஆஜரவாதில் இருந்து அடுத்த இருநாட்களுக்கு கனிமொழிக்கு விலக்கு அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.2ஜி வழக்கு தொடர்பாக திமுக எம்பி கனிமொழியும், சினியுக் பிலிம்ஸ் இயக்குநர் கரீம் மொரானியும் தில்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.முன்னதாக 2ஜி வழக்கில் சிபிஐ தன்னைக் கைது செய்யாமல் இருக்க கனிமொழி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், அதன்மீதான தீர்ப்பை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி கனிமொழி இன்று அவரது கணவர் அரவிந்தனுடன் நீதிமன்றம் வந்தார். அவர்களுடன் தூத்துக்குடி எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரை உடன் வந்திருந்தார். இதில், மே 12 மற்றும் 13 ஆகிய இருநாட்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்தது.நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழி தன்கையில் The Thing Around Your Neck என்ற புத்தகத்தை வைத்திருந்தார். அது நைஜீரிய எழுத்தாளரால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாகும். இதில் 12 சிறுகதைகள் உள்ளன. அவரது கணவர் அரவிந்தன் கையில் டெல்லிவாலா என்ற புத்தகம் இருந்தது.மருத்துவக் காரணங்களுக்காக மே 7-ம் தேதி ஆஜராகாத சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் மொரானியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கருத்துகள்


By pinky george
5/10/2011 8:58:00 PM
5/10/2011 8:58:00 PM


By valipokkan
5/10/2011 8:22:00 PM
5/10/2011 8:22:00 PM


By sbm
5/10/2011 8:09:00 PM
5/10/2011 8:09:00 PM


By Kovaikkaran
5/10/2011 6:54:00 PM
5/10/2011 6:54:00 PM


By skveni
5/10/2011 6:30:00 PM
5/10/2011 6:30:00 PM


By SPR
5/10/2011 6:15:00 PM
5/10/2011 6:15:00 PM


By vikas
5/10/2011 5:26:00 PM
5/10/2011 5:26:00 PM


By vikas
5/10/2011 5:26:00 PM
5/10/2011 5:26:00 PM


By Karthik
5/10/2011 5:23:00 PM
5/10/2011 5:23:00 PM


By gowtham
5/10/2011 5:12:00 PM
5/10/2011 5:12:00 PM


By gowtham
5/10/2011 5:12:00 PM
5/10/2011 5:12:00 PM


By nambi
5/10/2011 5:03:00 PM
5/10/2011 5:03:00 PM


By ஹரிநாராயணன்
5/10/2011 4:53:00 PM
5/10/2011 4:53:00 PM


By kusumban
5/10/2011 4:34:00 PM
5/10/2011 4:34:00 PM


By Tamilian
5/10/2011 4:11:00 PM
5/10/2011 4:11:00 PM


By Rasappaa
5/10/2011 4:10:00 PM
5/10/2011 4:10:00 PM


By செந்தில்முருகன்
5/10/2011 3:51:00 PM
5/10/2011 3:51:00 PM


By இராமசாமி சேகர்
5/10/2011 2:53:00 PM
5/10/2011 2:53:00 PM


By narayanan
5/10/2011 2:47:00 PM
5/10/2011 2:47:00 PM


By shameed
5/10/2011 2:46:00 PM
5/10/2011 2:46:00 PM


By பாஜ்ருடீன்
5/10/2011 2:29:00 PM
5/10/2011 2:29:00 PM


By rajasji
5/10/2011 1:51:00 PM
5/10/2011 1:51:00 PM


By a.ajithkumar
5/10/2011 1:34:00 PM
5/10/2011 1:34:00 PM


By rajasji
5/10/2011 1:23:00 PM
5/10/2011 1:23:00 PM


By பி.டி.முருகன் திருச்சி
5/10/2011 1:06:00 PM
5/10/2011 1:06:00 PM


By Abdul Rahman - Dubai
5/10/2011 1:06:00 PM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5/10/2011 1:06:00 PM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து
கனிமொழிக்கு தளர்வு
First Published : 11 May 2011 12:34:59 AM IST

புதுதில்லி, மே 10: 2 ஜி வழக்கில் தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தினமும் நேரில் ஆஜராவதிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு மே 12, 13 ஆகிய தேதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் மே 14 ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.