சனி, 14 மே, 2011

Thanks for giving rest - kalaignar: ஓய்வு கொடுத்ததற்கு நன்றி: கருணாநிதி

ஓயாமல் உழைப்பவர்  என்பதை இவரை எதிர்ப்பவர்களும் ஒத்துக் கொள்வர்.இலக்கியங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தியதிலும் தன் உரையாடலைப் பேசிப் பழகியே பல கலைஞர்கள் உருவாகும் திறம் படைத்தவர் என்பதையும் யாவரும் உணர்வர். எனவே, தனிப்பட்ட முறையில் வெற்றி கண்டு்ள்ளார். இருப்பினும் கொள்கையில் தடம்புரண்டு காங். உறவிற்காக அமைதி காத்து ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்குத் தானும் காரணமாக இருந்தவர்  என்ற வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களால் விரட்டப்பட்ட காங். கிடம் அடிமையாகக் கிடந்தவர் என்ற முறையில் இனமானப்  பேராசிரியரை ஒதுக்கித் தன் குடு்ம்பத்தினர்களையே முன்னிலைப் படுத்தியவர்  என்ற நிலையில் கட்சியைத் தவறாக வழி நடத்திக் கட்சியின் தோல்விக்கும் தோழமைக் கட்சிகளின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்து விட்டார். வெற்றியும் தோல்வியும் இயற்கை என்று எண்ணாமல் தோல்விக்குக்காரணமான சறுக்குப் பாதையில் இருந்து நல்ல பாதைக்குச் செல்ல வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


ஓய்வு கொடுத்ததற்கு நன்றி: கருணாநிதி

First Published : 14 May 2011 04:27:20 AM IST


சென்னை, மே 13: தமிழக மக்கள் எனக்கு நல்ல ஓய்வை அளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி என முதல்வர் கருணாநிதி கூறினார்.தேர்தல் முடிவு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அவர், இவ்வாறு கருத்து தெரிவித்தார். தி.மு.க. கூட்டணி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும், திருவாரூர் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார்.12-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், 6-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக