காங்.அமைச்சர் இதைப் பேசுகிறார் என்னும் பொழுது விந்தையாகத்தான் இருக்கிறது. எனவே, பேச்சுடன் நிற்காமல் புதுச்சேரியில் தமிழே ஆட்சிமொழியாக நிலைக்க ஆவன செய்ய வேண்டும். தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக ஆக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வாகை சூட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
புதுவையில் அலுவல் மொழியாக தமிழ் வரவேண்டும்
First Published : 09 May 2011 04:10:43 AM IST
Last Updated : 09 May 2011 04:14:01 AM IST
கம்பன் விழாவில் பேசுகிறார் மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி. (இடது படம்) விழாவில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர்.
புதுச்சேரி, மே 8: புதுச்சேரியில் அலுவல் மொழியாக தமிழ் வரவேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி விருப்பம் தெரிவித்தார். புதுச்சேரி கம்பன் விழாவில் பங்கேற்ற பல்வேறு நாடுகள், ஊர்களில் இருந்து வந்திருக்கும் கம்பன் கழக பிரதிநிதிகளை கெüரவிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி பங்கேற்று அனைவரையும் கெüரவித்தார்.பின்னர் நாராயணசாமி பேசியது:45 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு தமிழக முதல்வர் கருணாநிதியின் பெரு முயற்சியால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒத்துழைப்புடன், மன்மோகன் சிங் ஆசியில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. இது தமிழுக்கு கிடைத்த முத்திரை. சில தினங்களுக்கு முன்பு தமிழ் அறிஞர்களுக்கு செம்மொழி விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கி சிறப்பித்துள்ளார்.புதுச்சேரியில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் நீதிமன்றத்திலும், அரசு அலுவலகங்களிலும் ஆங்கிலம் குறையவில்லை. புதுச்சேரியில் அலுவல் மொழியாக தமிழ் வர வேண்டும். இதற்கான மனப்பக்குவம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு வர வேண்டும். அதற்கு ஆட்சியாளர்களுக்கு தமிழ் அறிஞர்கள் உறுதுணையாக இருந்து, தமிழை அலுவல் மொழியாக மாற்ற வேண்டும். தமிழ் கற்றால் முன்னேற முடியும் என்ற நிலையை புதுச்சேரியில் உருவாக்க வேண்டும். என்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பாலாஜி உடனிருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக