கட்சிக் கண்ணோட்த்திலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையிலும் இதனைக் காணக் கூடாது. பெருமுயற்சி ஒரு கட்டத்தில் நிறைவுற்றுள்ளது. இருப்பினும் உரிய இயக்ககத்தை மூடிவிடக்கூடாது. விடுபட்ட சொற்களைச் சேர்க்கவும் மேலும் செம்மையாக்கவும் இவ்வியக்ககம் தேவை. மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பணியைத் தொடர்ந்து பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தமிழ்மொழி தொன்மையை வெளிப்படுத்தும் பேரகரமுதலி தொகுப்பை கருணாநிதி வெளியிட்டார்; 37 ஆண்டு பணி முடிந்தது
Chennai செவ்வாய்க்கிழமை, மே 10, 4:11 PM IST
சென்னை, மே.10-
செம்மொழியாம் தமிழ் மொழியின் தனித் தன்மையையும், தொன்மையையும், மேன்மையையும் புலப்படுத்தும் நோக்கில் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகரமுதலி ஒன்றை உருவாக்கும் திட்டம், 8-5-1974 அன்று தி.மு. கழக அரசு பொறுப்பிலே இருந்த போது மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டு, அந்தப் பணியை முனைவர் இரா.மதிவாணன் பின்னர் பொறுப்பேற்றுத் தொடர்ந்து பணியாற்றி, அகர முதலியின் மடலங்களை வரிசையாக அச்சியற்றி வெளியிட்டதோடு, அதன் இறுதி மடலமாகிய 12-ம் ஆண்டு மடலத்தினை திட்டத்தின் 31-வது வெளியீடாக தயாரித்து, இன்று முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட அதன் முதல் பிரதியை நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்கள். 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மாபெரும் பணி இத்துடன் முடிவுறுகிறது.
இந்த பன்னிரெண்டாம் மடலம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வெளியிடும் போது இதன் மதிப்புறு இயக்குநர் முனைவர் இரா.மதிவாணன் உடன் இருந்தார்.
ஐயோ இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலா சாமி .....
செம்மொழியாம் தமிழ் மொழி kani moli யின் தனித் தன்மையையும், தொன்மையையும், மேன்மையையும் புலப்படுத்தும் நோக்கில் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகரமுதலி இன்று முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட அதன் முதல் பிரதியை நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்கள். 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மாபெரும் பணி இத்துடன் முடிவுறுகிறது. தமிழை வைத்து அரசியல் வியாபாரம் ,இவர்களுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?வியாபாரம் ஒன்றே குறிக்கோள் .இது போன்ற வேலை செய்வதற்குத்தான் தமிழ் பல்கலைகழகம் மற்றும் தமிழ் அறிஞர்கள் உள்ளார்கள் ,இவர்களிடம் தமிழ் தப்பிப்பிழைத்தால் போதும் தானாக வளரும். மதிவாணன் அவர்களின் அயராத உழைப்புக்கு பாராட்டுகள். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக