படுபாவிகள். தமிழ் மக்களை வெட்டிக்கடலில் எறிந்தும் இருக்கலாம். எவ்வாறாயினும் இனப்படுகொலையில் தொடர்புடைய அனைவரும் தண்டனை பெறுவது உறுதி,. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
யாழ்ப்பாணக் கடற்பிரதேசம்
திடீரென சிவப்பு நிறமாக மாற்றம்
First Published : 12 May 2011 05:59:56 PM IST
கொழும்பு, மே.12: இலங்கையில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடற்பிரதேச நீர் திடீரென சிவப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனவடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீரே அவ்வாறு சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை அவ்வாறு கடலில் சிவப்பு நிறமாக நீர் தென்படுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.கடல் நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.அதற்காக அந்த கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கருத்துகள்
இலங்கை ராணுவம் கொன்று குவித்த, தமிழர்களின் குருதியாக இருக்கலாம். கடவுள், இப்போது கண்ணில் காட்டுகிறார் போல.
By கம்பம். பி.டி.முருகன் திருச்சி
5/12/2011 6:37:00 PM
5/12/2011 6:37:00 PM