ஞாயிறு, 26 ஜூன், 2011

Susma swaraj supporting the resolution against the genocide of srilanga : இலங்கைக்கு எதிரான தமிழகப் பேரவைத் தீர்மானம்: ஆதரித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்- சுசுமாசுவராசு

பாராட்டுகள். தொடர்ந்து மனித நேயத்துடன் தமிழ் ஈழ ஆதரவுக் குரலை எழுப்பி வருகின்றார். தன் கட்சியில் பிற தலைவர்களிடமும் இதற்கான ஆதரவைப் பெற வேண்டும். இந்திய அளவிலும் உலக அளவிலும் இனப்படுகொலைகாரர்களுக்குத்தண்டனை வழங்குவதற்காகவும் தமிழ்  ஈழத்தை ஏற்பதற்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கைக்கு எதிரான தமிழக பேரவைத் தீர்மானம்: ஆதரித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்- சுஷ்மா ஸ்வராஜ்
First Published : 26 Jun 2011 01:15:09 AM IST

சென்னை, ஜூன் 25: இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப் போவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.  சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதாவை,சுஷ்மா ஸ்வராஜ் சனிக்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் வரை நீடித்தது.  பின்னர் சுஷ்மா செய்தியாளர்களிடம் கூறியது:  அதிமுக வெற்றிபெற்றதற்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்தச் சந்திப்பு சிறப்பாக அமைந்தது.  இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருவது பற்றி பேசினோம்.  இலங்கைத் தமிழர்  பிரச்னைக்காகவும், தமிழக மீனவர் பிரச்னைக்காகவும் நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.  தமிழக சட்டப்பேரவையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்தத் தீர்மானத்தின் நகலை அனுப்புமாறு ஜெயலலிதாவிடம் கேட்டுக்கொண்டேன். இந்தத் தீர்மானங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் குரல் கொடுப்போம்.  டீசல் விலை உயர்வு: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பல முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருக்கிறது. சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படும்போது மகளிரும், டீசல் விலை உயர்த்தப்படும்போது விவசாயிகளும், மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படும்போது ஏழைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.  ஆனால் மக்கள் பாதிக்கப்படுவது பற்றி சிறிதும் அக்கறையே கொள்ளாமல் மத்திய அரசு உணர்ச்சியற்ற நிலையிலேயே இருக்கிறது என்று அவர் கூறினார்.    

1 கருத்து:

  1. If Sushma Swaraj becomes as The Prime Minister and Madam Honble Amma Selvi Jayalalitha,as our C.M then we can see the very quick results of Tamil Eelam issues.The Sree Lankan Govt under the Raja Bakshe will become helpless. Let us wait for the same.

    பதிலளிநீக்கு