வியாழன், 30 ஜூன், 2011

Rajapakshe is a world notorious lier: இராசபட்ச உலக மகாப் பொய்யர்: தங்கபாலு கண்டனம்

உலக மகாப் பொய்யர் பேச்சையும் வாக்குறுதிகளையும் நம்பி இந்தியா என்னதான் பேசினாலும் வலியுறுத்தினாலும் என்ன பயன் விளையப் போகிறது? உலக மகாப் பொய்யரின் பேச்சை நம்பி இந்தியா பறித்த ஈழத்தமிழர்களின் உயிர்களைத்திரும்பப் பெற இயலுமா? இப்பொழுதேனும் உலகமகாப் பொய்யரின் பேச்சை நம்பி மோசம் போனோம் என்பதை ஒப்புக் கொண்டு செய்த பெருங்குற்றங்களுக்குக் கழுவாயாகத் தமிழ் ஈழத்தை ஏற்கட்டும் இந்தியா! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ராஜபட்ச உலக மகா பொய்யர்: தங்கபாலு கண்டனம்

First Published : 29 Jun 2011 02:42:08 PM IST

Last Updated : 29 Jun 2011 03:26:11 PM IST

சென்னை, ஜூன்.29: தமிழர்கள் பிரச்னை தொடர்பாக இந்திய அரசிடம் இருந்து நிர்பந்தம் ஏதும் வரவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபட்ச உலக மகா பொய்ச் செய்தியை தெரிவித்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசிடமிருந்து நிர்ப்பந்தம் ஏதும் வரவில்லை என்று இலங்கை  அதிபர் ராஜபட்ச உலகமகாப் பொய்ச் செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னை மிகவும் உக்கிரம் அடைந்த 1983 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் காலத்திலும், சோனியா வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான இன்றைய மத்திய அரசின் காலத்திலும் இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு அந்த நாடு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய அரசு பிரயோகித்து வந்துள்ளது - வருகிறது என்ற விபரங்களை வரலாறு விரிவாகக் கூறும்.இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான்.அன்றைய வெளியுறவுச் செயலாளர் ஜி. பார்த்தசாரதியை அந்நாட்டுக்கு அனுப்பி அன்றைய அதிபர்  ஜெயவர்த்தனேவிடம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தச் செய்ததும் இந்திராவே.1985 ஜூலை 7-ந் தேதி திம்புவில் இலங்கை அரசையும், அந்நாட்டு விடுதலை முன்னணி தலைவர்களையும் இந்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச வைத்தவர் ராஜீவ்காந்தி.மேலும் ராஜீவ்காந்தி - இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு சிறந்த கடுமையான நிர்ப்பந்தமாக அமைந்தது. தமிழர்களுக்கு சுயஅதிகாரம் கொண்ட மாநிலம் உருவாகும் வகையில் சட்டத் திருத்தத்தை ஒப்பந்தம் வலியுறுத்தியது.இலங்கை தமிழர்களுக்கு உரிமை தரும் அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் சிங்கள ராணுவ வீரர் ஒருவர் ராஜீவ்காந்தியை இலங்கையில் அந்நாட்டு ராணுவ மரியாதை ஏற்று வரும் நேரத்தில் துப்பாக்கியால் தாக்கினார் என்பதும், அக்கொள்கைக்கென்றே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு ஆளானார்என்பதும் வரலாற்றின் சோக அத்தியாயங்கள்.கடந்த 1984 - 89 ஆம் ஆண்டுகளில் நான் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய போது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு" என்று எனது உரையை பதிவு செய்திருக்கிறேன். அப்போது இந்திரா காந்தி பிரதமர்.இன்றைக்கு சோனியா காந்தி வழிகாட்டுதலில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு சார்பில் பிரதமரும், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா ஆகிய தலைவர்களும் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உட்பட பல்வேறு உயர்மட்டஇந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபட்சவை பலமுறை நேரில் சந்தித்து இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்த நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் உலகமே அறிந்தவை தான்.ஒரு நாட்டின் உயர் பதவியிலுள்ள ராஜபட்ச தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்ற பொய் செய்தியை வெளியிட்டதன் மூலம் அவர் உலக மகாப் பொய்யர் என்ற பட்டத்திற்கு உரியவராகிறார். எனவே அவரது இச்செயலை உலகம் ஏற்காது. இதையும் மன்னிக்காது என்று தங்கபாலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்

தங்கபாலுவின் செய்தியை யாரும் படிக்க கூட மாட்டார்கள்
By சக்தி
6/29/2011 10:22:00 PM
ஒரு காமெடி பீசு பிதட்டுகிறது, தேர்தல் ஏதும் வரவில்லையே பிறகு என் இந்த பித்தலாட்டம்
By ramesh
6/29/2011 10:04:00 PM
You are a liar, not Rajapakse. You are another Karuna. Under the guise of eliminating terrorism, your party with the connivance of DMK killed so many innocent Tamils. People gave a fitting reply in the assembly election. Soon, your party will be eliminated lock, stock and barrel from the Tamil Nation.
By Raja
6/29/2011 9:53:00 PM
மறைந்த மதிப்புமிகு எம்.ஜி.ஆர். அவர்களின் நிர்பந்தம் காரணமாக அவர் காலத்தில் மத்திய அரசு செய்த ஒரு சில அசைவுகளை தங்கபாலு அவர்கள் தனது அறிக்கையில் கோடிட்டு காட்டியுள்ளார். இதே போல சமீப கால மத்திய அரசு செயல்பாடுகளை அவரால் கூறவே முடியாது. ஏனெனில் இலங்கையில் கொல்லப்பட்டு இறந்த தமிழர்களைப் ஒத்து மத்திய அரசு ஒரு பிணத்தை போலவே இருக்கிறது. ராஜபக்ஷேவை உலக மகா பொய்யர் என்று தங்கபாலுக்கு பதில் குறைந்தபட்சம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் கூறி இருந்தால் தமிழ்கூறும் நல்லுலகம் சற்று திரும்பிப் பார்த்திருக்கும். தமிழக மீனவர் பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியாத மத்திய அரசு ஒரு உயிரில்லா அரசாகும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்கார பாவலா செய்யும் தங்கபாலு அவர்கள் அறிக்கைகள் ஏதும் அளிக்காமல் தலைவர் பதவியை பிடுங்கும் வரை சும்மா இருத்தலே நலமாகும். வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு நாடகம் நடத்தாமல் ராஜபக்ஷே கொலை கும்பலுக்கு வெளிப்படையாகவே தனது ஆதரவினை தெரிவித்து விடலாம்.
By அய்யன்பேட்டை தனசேகரன்
6/29/2011 8:46:00 PM
டேய் மடையா,நீ சொன்னதை சோனியாவோ,மண் மோகனோ,முகர்ஜியோ,கிருஷ்ணாவோ அல்லது அந்த மலையாள கூட்டமோ சொல்லட்டும், எந்த நிர்பந்தம் செய்தார்கள் என்று .நீ எல்லாம் தமிழின துரோகி.
By செந்தீ
6/29/2011 8:19:00 PM
'தமிழர்களுக்கு சுயஅதிகாரம் கொண்ட மாநிலம் உருவாகும் வகையில் சட்டத் திருத்தத்தை ஒப்பந்தம் வலியுறுத்தியது". பெயரளவிற்கு இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம். இருந்தும் ராஜீவ் அவர்கள் ஒப்பந்தம் 1987 - ல் கையொப்பமானப் பிறகு, ஏன் இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பவேண்டும்?அனுப்பியப் படை அமைதிப் படையா அல்லது போர்ப் படையா? ஐ நா விற்கு மட்டுமே எங்கும் அமைதிப் படை அனுப்பும் அதிகாரம் உள்ளது. இதன் பின்பு ராஜீவ் அவர்கள் வெள்ளைமாளிகைக்கு ஏன் வரவழைக்கப் பட்டார்? அங்கு நடந்தது என்ன? இந்தியப்படை இலங்கையில் இருந்தக் காலத்தில், சுமார் 1400 இந்திய வீரர்களும் எண்ணிகையில் அடங்காத பல நூற்றுக்கணக்கான பொது மக்களும் கொல்லப் படார்களே? யாரால்? அப்படிஎன்றால் அங்குப் சென்றது உண்மையில் அமைதிப் படையா அல்லது ஆக்கிரமிப்புப் படையா? அமைதி ஒப்பந்தம் ஏற்ப்படவேண்டுமென்றால், புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் தானே ஏற்பட வேண்டும்? இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஏற்படவேண்டிய அவசியம்?ஏன் புலிகள் புறக் கணிக்கப் பட்டார்கள்? டில்லியில் நடந்தது என்ன?
By பழனிசாமி T
6/29/2011 8:01:00 PM
நீங்கள் இந்தியாவை வெளிப்டையாக ஒரு அறிக்கை விடசொல்லுங்கள் பார்க்கலாம். முடியாது. ஈனெனில் காங்கிரஸ் என்றாலே பொய்யர்கள் என்பது நட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.
By இனியன்
6/29/2011 7:38:00 PM
ராஜபக்சே உலகத்தையே ஏமாற்ற நினைக்கும் போது காங்கிரஸ் கட்சியை ஏமாற்றுவது கடினம் கிடையாது. காங்கிரஸ் கட்சியும் ஸ்ரீ லங்கா அரசும் ஆடும் நாடகம் இது. தங்கபாலுக்கு இது நல்லா தெரியும். இவர்கள் தமிழர்களை என்னும் ஏமாற்ற எண்ணுகிறார்கள். தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது. தமிழ் நாட்டில் இனி காங்கிரஸ் கட்சி தலை தூக்க முடியாது.
By சுதாகர்
6/29/2011 7:27:00 PM
TANGABALU, THAT IS YOUR PARTY AND YOUR GOVT HELPED SINGALAVAN GOVT TO CARRY OUT TAMIL ETHNIC CLEANSING. NEARLY 150 000 PEOPLE WERE KILLED BY YOUR FRIENDLY SINGALAVA GOVT. ABOUT 300 000 PEOPLE HAVE MIGRATED. AFTER TWO YEARS, THE AGONY AND SUFFERINGS OF TAMIL PEOPLE WERE NOT SOLVED. HI GUY, SHUT UP AND STOP LYING
By Paris EJILAN
6/29/2011 7:19:00 PM
ராஜபக்சே வீடே நியும் மன்மோகன் சிங் தன மகபோயயர்கள் சிங்கவலனுக்கு ஆயுதத்தையும் கொடுத்து தமிழர்களை குண்டோடுகொல்வாதை பார்த்து கொண்டு இருந்து இப்பொழுது நாடகம் நடிக்கேற காங்கிரஸ் தமில்னட்டுலேருந்து சுத்தமா அல்லிகனும்
By sami
6/29/2011 6:45:00 PM
ஒரு நாட்டின் உயர் பதவியிலுள்ள ராஜபட்ச தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்ற பொய் செய்தியை வெளியிட்டதன் மூலம் அவர் உலக மகாப் பொய்யர் என்ற பட்டத்திற்கு உரியவராகிறார் என்று திருவாய்மலர்ந்திருக்கிறார் தமிழ்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு. இறைமையுள்ள ஒரு நாட்டினது தலைவர் ஒருவவர், தனது நாட்டு உள்விவகாரத்தில் வெளிநாடு ஒன்று தலையிடுகின்றது என்று பகிரங்கமாக கூறுவாரா? இந்த அடிமட்ட அறிவுகூட இல்லாத ஒருவர்தான் கட்சி ஒன்றின் தமிழகத் தலைவராக இருக்கிறார் என்றால் அந்தக் கட்சியின் அவலம் புரிகிறதா?
By Kuha
6/29/2011 5:59:00 PM
இப்படி எதாவது ஒளறி கொட்டி எப்படியாவது தன்னோட பதவியை தக்க வைக்க பார்க்கிறாரு இவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் என்ன நாடகமாடி தொகுதியை பெற்றாரோ அப்போதே இத்தாலி அம்மையார் அவர்கள் இவரை தூக்கி எறிந்திருக்க வேண்டும். அனால் அப்படி செய்யவில்லை. ஒருவேளை பணம் விளையாடிவிட்டதோ என்னவோ? இப்போது இவ்வாறு அறிக்கை விட்டு அம்மையார் ஜெயலலிதா அவர்களை குஷி படுததானோ? முட்டாள்தனமான அறிக்கையை விடுவது தவிர்த்து தமிழ் இன மக்களை காப்பாற்ற காங்கிரஸ் முனைந்தால் அடுத்த தடவை அக்கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பாத்து சீட்டாவது பெரும். இல்லையேல் வரலாறு பாடத்தில் காண வேண்டியது வரும். இந்திய நாட்டை ஒரு இந்தியன் தான் ஆழ வேண்டும். ஜைஹிந்த்.
By m.sathyanarayanan
6/29/2011 5:11:00 PM
உன்னைவிட கம்மிதான் பொய் பேசுறாரு .....நீ பொய் உன் வேலைய பாரு .....
By KING
6/29/2011 5:07:00 PM
இந்திய அரசு சார்பில் கதைக்க நீங்கள் யார்?இலங்கை தமிழனுக்காக இந்தியா என்றுமே கதைக்கவில்லை. கதைக்க போவதும் இல்லை.எல்லாம் பிராந்திய ஆதிக்கத்துக்காகவே .போராளிகளுக்கு உதவியது ,அதே போர்ரளிகளின் வளர்சியை பார்த்து பயந்து போராளிகளை பிரித்து சண்டையிட வைத்தது ,.பிரபாகரனை வலுக்கட்டாயமாக டெல்கிக்கு அழைத்துப்போய் அடிபணியவைக்க மிரட்டியது,,தமிழர்களை ஈன இரக்கமின்றி கொள்ள உதவியது .....எல்லாம் செய்ததது யார்?சனல் நாலு தொலைக்காட்சியை பார்த்தவர்கள் எல்லோர் கண்ணிலும் நீர்வருகின்றது.பாரதமாதாவின் தலைவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை.ஏன்? அவர்களுக்கும் பங்கு இருப்பதால் கோத்தபாயவிற்கு பயந்து வாய் திறக்கவில்லை.அதுமட்டுமல்ல ராஜபக்சா குடும்பத்தை காப்பாற்ற துடிக்கின்றார்கள்.சும்மா அறிகைவிடவேண்டும் என்று உளறவேண்டாம்.
By ப.kasippillai
6/29/2011 5:05:00 PM
ராஜபச்ச சொல்வது அவன் ஜனாதிபதி ஆனதற்கு அப்புறம் ஆகவே அவன் சொல்வது முற்றிலும் உண்மை.. உலகிலுள்ள அணைத்து நாடுகளும் ராஜபச்ச ஊர் போர்க்குற்றவாளி என்று சொல்லி வருகிறது அதற்கு உண்டான சாட்சியங்களும் சானல் 4 வெளியிட்டது ஆனால் இதுவரை இந்தியா அவனுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது., அவனுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.. தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் கூட அவனை போற்குற்றவாளியாக அறிவிக்கும்படி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.... முதலில் நீங்கள் தமிழனாக இருங்கள் அப்புறம் காங்கிரசுக்காரனாக இருக்கலாம்.... இந்திய அரசே அவன் சொன்னதற்கு இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை, நீங்கள் ஏன் அதற்குள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்கிறீர்கள்..
By P.T.சந்திரசேகர்
6/29/2011 4:57:00 PM
இவருக்கும் காங்கிரசுக்கும் காலம் கடந்த சிந்தனை எனக்கொள்ளலாமா ? ஆயிரக்கணக்கான தமிழர் இறந்த பின் , அவர்களை மீழபிறக்கவைக்க திரு தங்கபாலு அல்லது காங்கிரஸ் கட்சியால் முடியுமா என்ன .இவர் இப்போ சொல்வதைத்தானே இலங்கை தழிழர் கடந்த 50 வருடமாக சொல்லுகின்றனரே .இப்போதான் இவர்களுக்கு இலங்கை அரசு பற்றி புரிகின்றதோ ? Too late and Too little ! குட் லக் தங்கபாலு சார் !
By குப்புசாமி
6/29/2011 4:33:00 PM
apparum .. பருப்பு வேகாது ... ராஜபக்ச is enemy.. But Thangabalu is a traitor..
By purush
6/29/2011 4:25:00 PM
நீயும் , உன் காங்கிரஸ் கட்சியும் பித்தலாட்டம் செய்பவர்கள். உங்களால் தான் தமிழ் இனம் அழிந்தது என்று சொல்கிறார்கள். பின் எப்படி நீ ராஜபக்சவை பொய்யன் என்கிறாய்? நல்லாத்தான் நடிக்கிறீங்க! தினமணி ஆசிரியரே! ஏன்தான் இந்த மண்டையன் அறிக்கைய போட்டு எங்களின் ரத்த கொதிப்பை அதிகபடுதுகிறீர்களோ தெரியவில்லை?
By ஜெகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக