சனி, 2 ஜூலை, 2011

A kind request to the Thamizh people of France

பிரான்சுநாட்டுத்தமிழருக்கு 
ஓர் அன்பான வேண்டுகோள்
*--- *கலாநிதி இராம் சிவலிங்கம், பிரதிப் பிரதமர்- நாடுகடந்த தமிழீழ அரசு

ஆடி மாதம் 3 ஆம் நாள்  பிரான்சு நாட்டில், அங்கு வாழ் தமிழரின் தேவை கருதி,
இருபெரும் தமிழருக்குத் தொண்டு செய்யும் அமைப்புகளால், நடாத்தப்பட இருக்கும்
விளையாட்டு விழாவுக்கு பிரான்சு நாட்டுத் தமிழர் அணியணியாக வந்து இவ்விழாவைச்
சிறப்பிக்க வேண்டும். இது கண்டு அங்குவாழ் அத்தனை தமிழரும் பெருமையடையவேண்டும்.

எமது வீரப் பரம்பரையின் இளைய தலைமுறை அங்கு நடக்கும் போட்டிகளில் பங்கு பற்றி
விந்தைகள் பல புரியவேண்டும், புதிய நண்பர்களுடன் ஓடி, ஆடி விளையாடவேண்டும்.
இதைப் பார்த்த பெற்றோரும், உறவினரும் தம் வேதனைகளை மறந்து ஒரு கணமாவது களிப்ப
டைய வேண்டும்.

அயல் தேசத்திலே, மாற்றான் நாட்டிலே மனவருத்தத்துடன் தனித்து வாழும் நம்மவர்
ஒன்று கூடிக் குதூகலிக்க, தமது வேதனைகளை ஒருவருக்கு ஒருவர் எடுத்துக்கூறி
ஆறுதல் பெற இவ்விழா ஓர் அரிய சந்தர்ப்பம். இவ்விழாவுக்குப் போகாது இருப்பதோ
அல்லது போகவிடாமல் தடுப்பதோ பாவமல்லவா?

சிறார்களுக்கான நிகழ்வாக இந்த நிகழ்வைச் சித்தரித்தாலும் அங்கு வரும்
எல்லோரையும் இணைக்கும் பாலமாக இந்த நிகழ்வு அமைகிறது. பழமைவாய்ந்த, உலகப் புகழ்
பெற்ற, மக்களால் நன்கு மதிக்கப்படும் இரு மாபெரும் அமைப்புககளான தமிழர்
புணர்வாழ்வுக்  கழகமும், உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகமும்  முன் வந்து இந்த
நிகழ்வை நடத்துவது ஓர் பெருமைக்கு உரிய விடயமாகும்.

இந்த இரு புனித அமைப்புக்களும் யாரால் உருவாக்கப்பட்டன? ஏன் உருவாக்கப்பட்டன?
எப்போது உருவாக்கப்பட்டன? அவர்கள் செய்த, செய்யும் தொண்டுகள்தான் என்ன? என்பது
எல்லாத் தமிழரும் நன்கறிந்த விடயமே. இவர்கள் நமக்கு வழங்கிய நன்மைகளை, எம்
இனத்துக்குச் செய்த புண்ணியத்தை எழுத்தால் வடிக்க முடியாது. உணர்வால்தான்
உணர்த்த முடியும். அவர்களைத் தூற்றுபவர்களுக்கும் இது நன்கு தெரியும்.

செய்த தொண்டை, செய்யும் புண்ணியத்தை எவராலும் மறைக்கவோ அல்லது மறுக்கவோ
முடியாது. விரும்பியவேளை போற்றுவதும், விரும்பாதவேளை தூற்றுவதும் முறையுமல்ல,
சரியுமல்ல. இதை நாம் அனைவரும் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழா, ஆரவாரமானதாகவும், சிறப்பானதாகவும்
அமையவேண்டும். இதில் பங்குகொள்ளும் அத்தனைபேரும் இந்த நாளாவது தம் கவலையை
மறந்து களிப்புற வேண்டும். பங்கு கொள்ளும் அனைவரும் பெருமையுடன் வீடு திரும்ப
வேண்டும்.

களிப்புறும் அதே வேளை, எம் கடமையை உணர்ந்து, நாட்டிற்கான பங்களிப்பைத் தவறாது
நல்க நாம் எல்லோரும் முன்வரவேண்டும்.  போர் வடிவம் மாறினாலும் அதே கொள்கையான
இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைப்பதையே தமது இலட்சியமாகக் கொண்
டியங்கும், நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரித்து தம்மாலான பங்களிப்பைத் தவறாது
தரவேண்டும்.

இந்த விளையாட்டு நிகழ்வுக்கு ஒவ்வொரு தமிழரும் போகவேண்டியது அவசியமானதும, தேவை
யானதும் ஆகும். இங்கும் எமது ஒற்றுமையை காட்டவேண்டியது எமது கடமையல்லவா?
பிரிவினை என்ற சொல்லுக்கு என்றுமே இடமில்லையென அடித்துக் கூறும் விதத்தில் இந்த
விளையாட்டு விழா வெற்றிகரமாக நிறைவு பெறவேண்டும்.

அன்பான உறவுகளே! நம்மிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் நாம் எல்லோரும்
ஈழத்தாயின் இணையற்ற செல்வங்கள். பாசத்துக்குக்  கட்டுப்பட்ட ஓர் புண்ணிய இனம்.
நாம் எல்லோரும் ஒரு காலத்தில் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே பாயில் படுத்து, ஒரே
நோக்கத்துக்காக, ஒரு குடையின் கீழ் பயணித்தவர்கள்ல்லவா?

ஒற்றுமைக்கு இலக்கணம் அமைக்கும் விதத்தில் ஒவ்வொரு தமிழரும், எல்லா
அமைப்புகளும் தம்மாலான பங்களிப்பைத் தவறாது அளித்து இந்த விளையாட்டு விழாவை ஒரு
திருவிழாவாகச் சிறப்பிக்கவேண்டும். இதுவே ஈழத்தமிழரின் வேண்டுகோள், உலகத்
தமிழரின் ஆசை.

*கனடா** **நாட்டில்* தொண்டர்களாகச் சேர விரும்புவோர் தொடர்பு கொள்வதற்கான
விவரங்களையும், அன்பளிப்புச் செய்ய விரும்புவோருக்கான வங்கி விவரத்தையும் கீழே
தருகிறோம். மற்றைய நாட்டில் வாழ்பவர்கள், அந்த நாட்டு நாடு கடந்த தமிழீழ அரசின்
சார்பாளர்களுடன் தொடர்புகொண்டு தமது பங்களிப்பைத் தவறாது செலுத்துமாறு அன்புடன்
வேண்டுகிறோம். நன்றி

தொடர்புக்கான தொலைபேசி.இல: 416 291 7474 அல்லது 416 829 1362 அல்லது 514 400
6970
தொடர்புக்கான மின்னஞ்சல்: r.sivalin...@tgte.org; tgteque...@live.ca

*கனடா** **நாட்டில்* அன்பளிப்பு செய்ய விருபுவோருக்கான வங்கி விவரம்:
TD CANADA TRUST (Kennedy & Eglington), 2428 Eglington Ave. East,
Scarborough, ON M1K 2P7
BRANCH NO: 01488            ACCOUNT NO: 5222923

r.sivalin...@tgte.org

--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக