திங்கள், 27 ஜூன், 2011

where is the money of L.T.T.E.? : விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பணம் எங்கே?

கொல்லப்பட்டதை அடுத்து என்று எழுதுவதைவிடக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டதை அடுத்து எனக் குறிப்பிட்டால் தினமணியின் உணர்விற்கும் நடுவுநிலைமைக்கும் ஏற்றதாக அமையுமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பணம் எங்கே?

First Published : 27 Jun 2011 01:10:06 AM IST


கொழும்பு, ஜூன் 26: விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான பணத்தை இப்போது யார் வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்று அந்த இயக்கத்தைச் சேர்ந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து அந்த இயக்கத்தின் தலைவராக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டவர் "கேபி' என்ற குமரன் பத்மநாதன். பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த பத்மநாதனை இலங்கை அரசு கைது செய்து சிறை வைத்துள்ளது.இந்நிலையில் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பணத்தை திரும்பப்பெறுவதென்பது கடினமான செயல் என்றும், இருப்பினும் ஈழத் தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதை மீட்க தான் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் தான் தங்கியிருந்த போது தனி ஈழம் மலர்வதற்கு தீவிரமாகச் செயல்பட்டதாகக் கூறியுள்ள பத்மநாதன், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளதாகவும் இப்போதைய நிலையில் தமிழர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதே சிறப்பு என்றும் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசு கைது செய்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை விடுவிக்க தான் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மந்தமான அரசு நிர்வாக நடைமுறையால் இதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இலங்கையில் போரினால் சீர்குலைந்துள்ள பகுதிகளை சில மாதங்களுக்கு முன்பு பத்மநாதன் பார்வையிட்டார். அப்போது, ஈழத் தமிழ் மக்களின் மறுவாழ்வு, வளர்ச்சித் திட்டத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக