இவ்வாறு சொல்வது பொய் என இராசபக்சே கூறுவதால் இருவரும் இணைந்து ஒன்றாக அறிக்கை வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் வண்டவாளம் தண்டவாளம் ஏறுவதைப் புரிந்து கொள்ள இயலும். இலங்கையைச் சிங்களமாக்குவதே இரு தரப்பின் அடாவடி முயற்சிகள். அதற்காக எந்த வஞ்சகமும் செய்யத் தயங்காதவர்கள் என்பதை அவர்களின் இனப்படுகொலைச் செயல்களே உணர்த்துகின்றன. இவர்களை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் மக்கள்தாம் ஏமாளிகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
"தமிழர்களுக்கு உரிமை தர இலங்கையை நிர்பந்திக்கிறோம்': பிரதமர்
First Published : 30 Jun 2011 03:02:16 AM IST
புது தில்லி, ஜூன் 29: இலங்கையில் தமிழர்களுக்குச் சம உரிமை வழங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.தில்லையில் ஐந்து பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு புதன்கிழமை காலையில் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை, அவை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசை நிர்பந்தித்து வருகிறது.இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கடந்த 14-ம் தேதி விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சனையை ஜெயலலிதா நன்றாக அறிந்தவர். இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் அவர் மிக அக்கறை கொண்டு மத்திய அரசுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறார்.இந்திய - வங்க தேச நாடுகளுக்கு இடையே நல்லுறவு நிலவி வருகிறது. அதே சமயம், இந்தியாவுக்கு எதிரான செயல்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. வங்க தேசத்துக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அடுத்த வாரம் வங்க தேசம் செல்ல இருக்கிறார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார் என்றார் பிரதமர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக