திங்கள், 27 ஜூன், 2011

திமுகவினால்தான் தோற்றோம்: அன்புமணி இராமதாசு காட்டம்

கொலைகாரக் காங்.உடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்காவிட்டால் மாபெரும் தோல்வியைத்தவிர்த்திருக்கும். வெற்றி பெற்றிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும்.காங். உடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்னும் உண்மையைக் கூறக்கூடத் துணிவு இல்லாமல் தி.மு.க. மீது பழி போட்டு விட்டு நடுநிலையாளர் போல் நன்றாகவே நடிக்கிறார் அன்புமணி. ஒரு புறம் ஈழஆதரவு. மறுபுறம் கொலைகாரக் காங்.உடன் களியாட்டம் என்னும் இரட்டை வேடத்தால் தோற்ற உண்மையைக்கூட வெளிப்படுத்தா நிலை தொடர் தோல்வியையே அளிக்கும். இரட்டை நிலைக்கான மன்னிப்பைக் கேளுங்கள். வளருவீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


திமுகவினால்தான் தோற்றோம்: அன்புமணி ராமதாஸ் காட்டம்

First Published : 26 Jun 2011 02:18:04 AM IST


சென்னை, ஜூன் 25: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினால்தான் தோற்றோம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் காட்டமாகக் கூறியுள்ளார்.  பாமகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிக்கு அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அதன் விவரம்:  தோல்விக்குக் காரணம்? பொதுவாக மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதனால் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். 30 ஆண்டு காலமாக மாறிமாறிதான் அரசுகள் வந்து கொண்டிருக்கின்றன. கேரளத்தில் 50 ஆண்டுகளாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அதுபோலத்தான் இந்தத் தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுக்கும் மேலாக பல காரணங்கள் உள்ளன.  விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன.  2ஜி அலைக்கற்றை பிரச்னையை திமுக அமைச்சர்களே சொல்லுகிறார்கள். அதுதான் என் எண்ணமும். இப்படிப்பட்ட காரணத்தால்தான் மக்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.  திமுகவுக்கு எதிரான வாக்குகள்: 2006 தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை. அது நடுநிலையான தேர்தல். இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பாமகவுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. திமுகவுக்கு எதிரான வாக்குகள்தான். அதற்கும் மேலாக சொல்லப்போனால் அதிமுகவுக்குச் சாதகமான வாக்குகளும் கிடையாது. ஆளும் கட்சிக்கு (திமுக) எதிரான வாக்குகள்தான்.  தோல்வி அல்ல சரிவு: இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு தோல்வி என்று சொல்ல முடியாது சரிவு என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றிபெற்ற அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 90 லட்சம். தோற்ற திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 45 லட்சம். வெறும் 45 லட்சம் வாக்குகள்தான் அதிமுக கூட்டணி அதிகம் பெற்றிருக்கிறது. இதனால் இதைத் தோல்வி என்று சொல்ல முடியாது. சரிவு என்றுதான் சொல்ல வேண்டும்.  அதேசமயம் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். இது எங்களுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள். அந்த அலையில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்.  பாமக வாக்கு வங்கியில் சரிவா? 2006 சட்டப்பேரவை தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தோம். இப்போது 19 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். 80 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகவே பெற்றுள்ளோம். 2006 தேர்தலில் எந்த அலையும் இல்லாததால் 55 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தாலே வெற்றிபெற முடிந்தது. 2011 - தேர்தலில் 75 ஆயிரம் வாக்குகள் பெற்றும் ஜெயிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் நடுநிலையாளர்கள் அதிக அளவில் வாக்களித்ததுதான். ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளன.  அதிமுக வெற்றிக்கு தேமுதிக காரணமா? 2006 தேர்தலில் அதிமுக வெற்றிபெற முடியாததற்கு தேமுதிக தனியாக நின்றதுதான் காரணம் என்கிறார்கள். இந்தத் தேர்தலில் தொகுதி வாரியாக பார்த்தால் அதிமுக 54 சதவீதமும், அதில் அங்கம் வகித்த புதிய தமிழகம் 54 சதவீதமும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 50, 51 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.  அந்தக் கூட்டணியில் தேமுதிகதான் குறைவாக 44 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுகவைவிட தேமுதிக 10 சதவீத வாக்குகள் குறைவாகப் பெற்றிருப்பதன் மூலமே அதிமுக வெற்றிக்கு தேமுதிக காரணம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.  தேர்தலில் கிடைத்த பாடம்: மக்களின் எண்ணத்தைக் குறைவாக எடைபோடக் கூடாது. ஏதோ பேசி, காசு கொடுத்து, சினிமாவில் நடித்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கக்கூடாது. உண்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனினும் மக்கள் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். 
கருத்துகள்

தெரிந்தும் ஏன் படுகுழிக்குள் விழுந்தீர்கள்? அது உங்கள் தவறு. அரசியல் பிழைத்தோருக்கு aram கூற்றாகும்.
By venky
6/26/2011 5:45:00 PM
மானம்கெட்ட அன்புமணி தேர்தலில் மக்களை சந்திக்காமல் குறுக்கு வழியில் பதவி சுகம் அனுபவித்த உன்னால் சும்மா இருக்க முடியாமல் உளறாதே! குறைந்த விலையில் நோய் எதிர்ப்பு தயாரித்த அரசு மருந்து நிறுவனங்கல் இரண்டை இழுத்து மூடி தனியாருக்கு வாய்ப்பு கொடுத்து கோடி கணக்கில் கொள்ளை அடித்தவன் நீ. மக்கள் உன்னை இருக்க வேண்டிய இடத்தில தான் வைத்து ஊள்ளனர்,
By சித்ரா lekha
6/26/2011 3:35:00 PM
அட்டை ரத்தம் கிடைக்குமிடத்தில் ஒட்டிக் கொண்டு எப்படி உறிஞ்சி வாழக்கூடியதோ அதுபோல வெல்லும் வாய்ப்புள்ள கூட்டணியில் ரகசியமாக பேரம் நடத்தி கெஞ்சிக் கூத்தாடி இணைத்துக் கொண்டு, ஜாதியையே மையமாக வைத்து அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் / அமைத்துக் கொள்ளும் நீங்கள் இதுவரை மக்களால் ஆதரிக்கப்பட்டதே வியப்புக் குரியது! மக்களால் அருவருப்புடன் புறக்கணிக்கப் படவேண்டிய கட்சிகளில் நீங்கள் முதன்மையானவர்கள்! இந்தக் காரணத்தை முன்னிட்டே, உங்களுக்கு ஒரு வாக்காளர் ஆதரவு தெரிவித்தாலும் அவர் இந்தியக் குடிமகனாய் இருக்க லாயக்கில்லாதவர். ஏனெனில் ஜாதி மத வேறுபாடுகளை மையமாக வைத்து செயல்படும் ஒரு இயக்கம் அங்கீகரிக்கப்படுவதே அரசியல் சட்டத்திற்கு முரணானது.
By முத்துக்குமார்
6/26/2011 2:18:00 PM
அப்போ பாராளுமன்ற தேர்தலில் எதனால் தோற்றிர்கள் ஒரு ஸீட் அதிகமாக கிடைக்குது என்பதற்காக மானம் மரியாதையை அடகு வைத்த நன்றி கெட்ட ஜென்மம் உங்களுக்கும் ஓட்டு போடுகிரங்கய் அவங்களை கால்ல கிடக்கிறத கழட்டிக்கிட்டு அடிக்கணும் த்தூ மானகேட்ட்வன்களே
By jamal
6/26/2011 2:17:00 PM
உங்க அப்பன காணோம் இப்ப நீ வந்துட்ட. யாரும் கோமாளி கட்சிய மறக்கமாட்டார்கள். பயப்பட வேண்டாம் மக்கள் மறந்து விடுவார்கள் என்று.
By உண்மை
6/26/2011 2:10:00 PM
இரண்டு கால்களும் இல்லாதவன் வேறு ஒருவன் முதுகில் தொத்தி கொண்டு தான் போக வேண்டும். பா மா கா வை பொறுத்தவரை கால்களும் இல்லை கைகளும் இல்லை. முண்டம் மாத்திரம் தான் இருக்கிறது.
By adithyan
6/26/2011 1:41:00 PM
Before election everbody knows DMK goverment have so many corruptions,(main for 2G) your a one of the MP, Then why joint to faced the election.
By haja kamal
6/26/2011 1:41:00 PM
காங்கிரசால் தான் தி மு க தோற்றது. காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரான கட்சி. இனிமேல் காங்கிரஸ் தமிழகத்திலும் புது சேரியுளும் தோல்வியே தழுவும். இது சத்தியம். அடுத்து ராஜாவை ஒரு கருவியாக பயன்படுத்தி, 2ஜி-யில் கொள்ளை அடித்தவர்கள் இன்னும் வெளியில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். முக்கியமான குற்றவாளிகள் சோனியா, மன்மோகன், தயாநிதி மாறன், கனிமொழி ஆவார்கள். முதலில் ஜெயலில் இருக்கவேண்டியவர்கள் சோனியா, மன்மோகன் மற்றும் தயாநிதி.
By rama gopalan
6/26/2011 1:30:00 PM
அய்யா anbumani nenga muthala thairiyama தமிழ் நாடு முழுவதும் சுத்தி வாங்க அப்போ தலைல ஹெல்மெட் போடுகொங்க இல்லன அடி பலமா இருக்கும் மக்கள் மன நிலை புரியும்
By krs
6/26/2011 1:26:00 PM
நங்கள் அரசியலுக்கு வர மாட்டோம் என்றுதானே ஜாதி கட்சி ஆரம்பிக்கும் பொது மருத்துவர் சொன்னார் அதனால் மக்களே உங்களை அரசியலை விட்டு துரத்துகிறார்கள். . சின்ன மருத்துவரே நீங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று பீற்றியது கடந்த இரு தேர்தல்களிலும் பொய்யாகிப்போனது. தலை கணத்துக்கு சரியான பாடம்.எப்படியாவது யாருடனாவது கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்ற குறுக்கு புத்தியை விட்டு விட்டு சொந்த தொழில் எதாவது (மரம் வெட்டுவது) இருந்தால் அப்பாவும் பிள்ளையும் பார்ப்பது நல்லது .தேர்தலில் நிற்பது மரம் வெட்டுவது இரண்டுமே நாட்டுக்கு கேடு. எதாவது ஒரு கேடு போதும் எங்களுக்கு. மொத்தத்தில் உங்கள் கட்சி நாட்டுக்கு கேடு .
By k.நாகேந்திரன்
6/26/2011 12:55:00 PM
Anbumani has looted lot of money from the Central govt while he was Health minister.We need an independent inquiry about his corruption.Someone has to bring a Case against him.I hope it will happen soon.
By Rahul
6/26/2011 12:32:00 PM
நாட்டில் முதன்முதலில் ஜாதியை மைய படுத்தி அரசியல் செய்தவர்கள் இவர்கள். ஒன்றுமே இல்லாமல் கட்சியை ஆரம்பித்து இன்று சில ஆயிரம் கோடிகளுக்கு சொந்தகாரர்கள். இக்கட்சியின் தோல்விக்கு இதுதான் காரணமே தவிர வேறு எதிவும் கிடையாது. தன தலையில் தானே மண்ணை போட்ட கதை தான் இது. வன்முறை என்றும் வெல்லாது. இதுவே மக்கள் உணர்த்தும் பாடம்.
By m.sathyanarayanan
6/26/2011 11:54:00 AM
It is not fair on your part to talk like this Mr Anbumani. Whatever that you talk now you knew well before the elections. You could have applied your logic, reasoning and every other attribute to decide on your poll alliance with DMK. Talking something when able to win and other while faced with defeat is a very cheep behavior. Wonder how a doctor can oscillate psychologically?
By Varun Ramesh
6/26/2011 11:28:00 AM
WE SHOULD BE ALWAYS CAREFULL WITH THESE KIND OF CASTE OUTFITS. IF LET UNCHECKED THIS CASTE OUTFIT MAY CREATE PROBLEM LIKE SEPERATE. TELUGANA ISSUE. THIS CASTE OUTFIT LOST REVENUE DUE TO ITS DEFEAT IN 2009 PARLIAMENT ELECTION AND 2011 STATE ELECTIONS. UNDERSTANDING THEIR TRUE FACE PEOPLE HAVE REJECTED THIS CASTE OUTFIT IN THESE ELECTIONS..NOW TO REGAIN THE LOST MARKET AND REVENUE THESE CASTE OUTFIT IS TRYING TO FOOL THE PEOPLE.
By Paris EJILAN
6/26/2011 11:17:00 AM
"தோல்வி கிடையாது. வெற்றியை நழுவ விட்டு விட்டோம்" என்று சொல்லுங்கள். கேட்பதற்கு இன்னும் நன்றாக இருக்கும். எப்படியோ, உங்கள் கூட்டணி தலைவரிடம் இருந்து "புள்ளி விபரமாக அறிக்கை விடவும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்ற வித்தையையும் நன்றாக கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் இருந்தபோதே திமுக தோற்றுவிடும் - திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று படித்த உங்களுக்கு தெரியாமல் போய் விட்டதா?? எப்படியோ, ஐயோ! வடை போச்சே....
By Abdul Rahman - Dubai
6/26/2011 11:13:00 AM
இதெல்லாம் ஒரு பொழப்பு.உனக்கு தைரியம் இருந்தால் குறுக்கு வழியில் மந்திரி ஆகி இருப்பீங்களா ?. மக்கள் பலம் பற்றி பேசி ... நீங்கள் பலமானது தவிர வேறென்ன செய்தீங்க . மறுபடியும் நாடி பிடியுங்க அய்யா !அது தான் உங்களுக்கு நல்லது.
By keerai பைசுறான்
6/26/2011 10:39:00 AM
"விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன". இதற்கு காங்கிரஸும் காரணம். இப்படியிருக்க "திமுகவினால்தான் தோற்றோம்: அன்புமணி ராமதாஸ் காட்டம்" -என்று தினமணி தலைப்பிட்டு பாமகவின் மீது காட்டம் காட்டி கழட்டிவிட நினைப்பது ஏன்? இதுப்போலவே தயாநிதி மாறன் மீதும் திரு குருமூர்த்தி அவர்கள் மூலம் காட்டம் காட்டியது. 2G யில் இழப்பு என்று பழியை திமுகவின் ஒட்டுமொத்தமாக மீது சுமத்துவது தவறு. பல மெசெஞெர் செர்விஸ், ஸ்கைப் பொன்ற இலவச/மிகக்குறைந்த விலை நிறுவனங்களால் பல பில்லியன்கள் அமெரிக்க, இந்தியத் தொலைபேசி நிறுவனங்களுக்கும் இழப்பு. அமெரிக்கவிடம் இதை எதிர்த்து கெட்கமுடியுமா? இப்படி ஒருதலைபட்சமாக காட்டம் காட்டுவதால் தமிழக அமைப்புகள் தான் பாதிக்கபடுகிறது.
By நம்பி
6/26/2011 9:44:00 AM
அடக்கடவுளே, கலைஞர் முதுகில் குத்துகிறார்கள் என்று புலம்பியது மருத்துவர் குழுமைத்தானா?
By இராமசாமி சேகர்
6/26/2011 9:12:00 AM
Well said அன்புமணி. But you and party will நாட் even one seat in all forth coming election
By Deepa
6/26/2011 9:04:00 AM
இவரும் இவர் கட்சியினரும் என்னத்தை மக்களுக்காக உழைத்து விட்டார்கள் ? முதலில் மரங்களை வெட்டிப்போட்டார்கள். இப்போது அதன் பின் விளைவுகளை தெரிந்து கொண்டு பசுமை தாயகம் என்ற பெயரில் மரங்களை நட ஏற்பாடு செய்கிறார்கள். திரு அன்பு அவர்கள் மத்திய அமைச்சாரயிருந்த போது தனியாருக்கு சாதகமாக, மூடிய மதிய அரசின் சில பரிசோதனை நிலையங்கள் இன்னும் திறந்த பாடில்லை. மருத்துவ கவுன்சில் நிர்வாகத்தில், மருத்துவ கல்லுரி மாணவர் சேர்ப்பில் குழப்பியதை தவிர எந்த புரட்சியும் செய்யவில்லை. இவர்களுக்கு எப்படியாவது யாருடனாவது கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற வேண்டும். இந்த தடவை அவர்களின் கனவு பலிக்க வில்லை.
By ஆர்த்தி.நா
6/26/2011 8:13:00 AM
என்ன பிதற்றல். மானம் இருந்தால் இனி வரும் தேர்தல்களில் தனியாக நின்றும், அன்புமணி யாகிய நீர் தேர்தலில் போட்டி போட்டும் ( குறுக்கு வழி இல்லாமல்) பார்க்கவேண்டும்.
By annakan
6/26/2011 7:13:00 AM
idiot comments the pmk has no own individual supoort,evry time they were running any one shoulder,the best weekly joke.Wehave not accepted the mistacks done by dmk like 2g spectrum,power cut,family domination,this is the main resources to loss the majority of votes,but anbumani has no right to comments the reason for loss
By shanmugam
6/26/2011 6:51:00 AM
சின்ன மருத்துவரே நீங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று பீற்றியது கடந்த இரு தேர்தல்களிலும் பொய்யாகிப்போனது . இந்த மாதிரி விளக்கெண்ணை விளக்கங்கள் தருவதை விட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் பாருங்கள் இல்லையென்றால் பசுமைதாயகம் சார்பில் நீங்கள் மரம் நடுங்கள் , உங்கள் அப்பாவை ஏதாவது போராட்டம் நடத்தச் சொல்லி மரத்தை வெட்டச் சொல்லுங்கள் ,பொழுது போக வேண்டாமா?
By மூர்த்தி
6/26/2011 6:49:00 AM
அன்புமணியின் ராஜ்யசபா MP கனவு ,மத்திய மந்திரி கனவு கனவாவே போய்விட்டது. பாவம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.
By iraiyanban
6/26/2011 6:41:00 AM
ஜாதியின் பெயரால் கட்சியை தொடங்கி தங்களை வளப்படுத்தி கொண்ட சுயநல வாதிகளின் பேச்சுக்கு முன்னுரிமை கொடுத்து, தயவு செய்து அவர்களின் கருத்தை பிரசுரிக்கவே வேண்டாம். ஜாதியின் பெயரால் கட்சி தொடங்கியவர்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போகட்டும். மக்களை சந்தித்து இது வரை வாக்கு ஒருமுறையும் கேட்காமல் காபினெட் பதவி பெற்று பணம் சம்பாதித்தவர்கள், இன்று வேதம் ஓதுகிறார்கள்.
By Ravi
6/26/2011 6:17:00 AM
ப ம க வினர் ஒரு பச்சோந்தி கூட்டம் என்பது உலகறிந்தது தந்தை வழியோ மகன் அவ்வழி என்பது இந்த அறிவிப்பால் புரிகிறது எந்த காலத்திலும் தோல்வியை ஒப்புகொள்ள மாட்டார்கள் இவர்களை எல்லாம் நாடு கடத்த வேண்டும் வாழ்வதற்கு சாவதே மேல்
By vinoth
6/26/2011 6:06:00 AM
தோல்வியல்ல சரிவுதான் என்பதை சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கத்தவறிவிட்டீர்களோ! கவனித்திருப்பீர்கள் என்றால் கூட்டணியை மற்றியிருக்கமாட்டீர்களே! போங்கய்யா போங்க போயி புள்ளகுட்டிகள படிக்கவய்யுங்கய்யா.
By ரட்சகன்
6/26/2011 2:51:00 AM
தோல்வியல்ல சரிவுதான் என்பதை சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கத்தவறிவிட்டீர்களோ! கவனித்திருப்பீர்கள் என்றால் கூட்டணியை மற்றியிருக்கமாட்டீர்களே! போங்கய்யா போங்க போயி புள்ளகுட்டிகள படிக்கவய்யுங்கய்யா.
By ரட்சகன்
6/26/2011 2:44:00 AM
கூடா நட்பு கேடாய் முடியுமென்பது உங்களுக்கும் பொருந்துந்தானே
By ரட்சகன்
6/26/2011 2:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக