அரசியல் கைதிகளின் உறவினர்கள் வரும்பொழுது தம் அறையிலேயே சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தல், உணவு வகைகளை உட்கொள்ளச் செய்தல், தாமும் உடன் உண்ணல் போன்ற செயல்கள் வழக்கத்தில் உள்ளன. அந்த நடைமுறையைத்தான் பின்பற்றி உள்ளார். கோடையில் மழையாகவும் பாலையில் சோலையாகவும் இவை அவர்களுக்கு அமைந்து விடுகின்றன. ஏழைச் சிறைவாசிகளுக்கு இந்த வாய்ப்பு இருப்பதில்லை. எனவே, ஒரு வகையில் சட்டத்தின் முன்னர் சமன்மை பேணப்படவில்லை என்றாலும் வழக்காற்று அடிப்படையில் நடந்திருப்பின் தண்டிப்பதை விட அனைத்துச் சிறைகளுக்கும் அறிவுரை வழங்குதல் வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சுரேஷ் கல்மாடிக்கு தேநீர் வழங்கிய விவகாரம்: திஹார் சிறை அதிகாரி நீக்கம்
First Published : 02 Jul 2011 01:24:51 PM IST
Last Updated : 02 Jul 2011 01:27:05 PM IST
புதுதில்லி, ஜூலை 2- காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடிக்கு தில்லி திஹார் சிறையின் கண்காணிப்பாளர் தனது அறையில் தேநீர் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஓரிரு நாட்களுக்கு முன்னர், திஹார் சிறை கண்காணிப்பாளர் தனது அறையில் கல்மாடியை அமர வைத்து அவருக்கு தேநீரும் பிஸ்கட்டும் வழங்கியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்த அதிகாரி பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.இதனிடையே, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 48 மணி நேரத்திற்குள் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி கண்காணிப்பு பொறுப்பு அதிகாரிக்கு திஹார் சிறையின் கூடுதல் டிஜிபி ஆர்.என். சர்மா உத்தரவிட்டுள்ளார்.திஹார் சிறையில் பல முக்கிய நபர்கள் உட்பட ஏராளமான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கல்மாடிக்கு மட்டும் சிறை விதிமுறைகளை மீறி தனிச் சலுகை காட்டப்படதாக எழுந்துள்ள புகார் தில்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
சிறை துறையின் சட்டம் தெரியாமல் கருத்து கூறுவது சரியாக இருக்காது.
By Gangadharan
7/2/2011 8:24:00 PM
7/2/2011 8:24:00 PM
தேநீரும் பிஸ்கட்டும் சுரேஷ் கல்மாடி தில்லி திஹார் சிறையின் கண்காணிப்பாளருக்கு சம்திங் கொடுத்து இருப்பாரு ?
By mirudan
7/2/2011 3:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/2/2011 3:16:00 PM