இவ்வாறு பலரும் தேர்தல் விழிப்புணர்வு பற்றிய குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். நான் அரசியல் ஆத்திசூடி என அனுபபி வருகின்றேன். இதுவரை அனுப்பியவை.1. அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்! 2. ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்! 3. இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர். 4. ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்! 5. உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர் 6. ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்! 7. எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர்! 8. ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்! 9. ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்! 10. ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்! 11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்! ௧௨ . ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்! 13. அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்! 14*. கயவருக்கு வாக்களிக்காதீர்! தேர்தல் ஆத்திசூடி என்னும் தலைப்பில் thiru-thoazhamai@googlegroups.com குழுவிலும் நாள்தோறும் காணலாம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கண்ணியமான தேர்தல்-2011 குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆம்பூர் ஜமாத்தே இஸ்லாமி இந்த் அமைப்பு தினந்தோறும் வாக்காளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது. வியாழக்கிழமை அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிட்டிருப்பது: "ஏமாறாமல் நாம் இருந்தால் ஏற்றம் பெறும் நம் நாடு. வரும் ஏப்ரலிலும் ஏமாந்தால் - அது ஏங்கி நிற்கும் நம்மோடு! கடமையை செய்வோம் கண்ணியம் காப்போம்.
தினமணி இக்கருத்தை வெளியிட வில்லை. மீள்பதிவு செய்துள்ளேன். (http://dinamani.co.in/edition/story.aspx?SectionName=Edition-Vellore&artid=399089&SectionID=140&MainSectionID=140&SEO=&Title=%22%u0b8f%u0bae%u0bbe%u0bb1%u0bbe%u0bae%u0bb2%u0bcd+%u0b87%u0bb0%u0bc1%u0ba8%u0bcd%u0ba4%u0bbe%u0bb2%u0bcd+%u0b8f%u0bb1%u0bcd%u0bb1%u0bae%u0bcd+%u0baa%u0bc6%u0bb1%u0bb2%u0bbe%u0bae%u0bc()
பதிலளிநீக்கு