செவ்வாய், 29 மார்ச், 2011

How to use the rule of 49.O : 49 ஓ விதியை பயன்படுத்துவது எப்படி?

௧௯௬௧ ஆம் ஆண்டு தேர்தல் விதிகள் நடத்தைப் பிரிவு ௪௯.ஓ. :  இவ்வாறு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனப் பதிவோர் எண்ணிக்கை வாக்கு அளித்தோர் எண்ணிக்கையைவிட மிகுதியானால் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அம் மறுதேர்த்லில் இப்பொழுது போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிடத் தகுதி இல்லை என்றும் கூறுகிறது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

49 ஓ விதியை பயன்படுத்துவது எப்படி?


சென்னை, மார்ச் 28: வாக்குப்பதிவின்போது யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் அதை பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆனால் எப்படி பதிவு செய்வது என்பதை பலர் அறிந்திருக்கவில்லை.  களத்தில் இருக்கும் எந்தவொரு கட்சியையும் அல்லது எந்தவொரு வேட்பாளரையும் பிடிக்கவில்லையெனில் வாக்கு அளிக்க செல்லாமல் இருப்பது சரியல்ல. வாக்களிப்பது பொது மக்களின் கடமை. எனவே வாக்குச் சாவடிக்குச் சென்று களத்தில் இருக்கும் வேட்பாளர் யாரையும் பிடிக்கவில்லை என்பதை பதிவு செய்யலாம். வாக்குச் சாவடிக்குள் சென்றவுடன், யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை வாக்குச் சாவடி அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அவர் அதை ஏற்றுக்கொண்டு வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட பதிவேட்டில் பதிவு செய்ய அனுமதி அளிப்பார்.  அதில் வாக்காளர் தனது பெயருக்கு எதிரே எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கிறேன் என்றோ அல்லது எந்த வேட்பாளருக்கும் எனது வாக்கு இல்லை என்றோ எழுதி கையெழுத்திட வேண்டும். 49 "ஓ'-வுக்கு என தனியாக விண்ணப்பம் ஏதும் இல்லை. வாக்காளர் பதிவேட்டில்தான் அதை பதிவு செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக