திங்கள், 28 மார்ச், 2011

A.D.M.K. candidates should be defeated - M.D.M.K. : அதிமுக வேட்பாளர்களைத் தோற்கடிப்பதே மதிமுக தொண்டர்களின் முதல் பணி: மாநிலப்பொருளாளர் மாசிலாமணி

உங்கள் உணர்வு மதிக்கத்தக்கது. அதே நேரம் தமிழினப் பகையான பேராயக் கட்சி- காங்கிரசுக்கட்சி அடியோடு தோற்கடிக்கப்பட வேண்டும் என்னும் இலக்கிலிருந்து திசை திரும்ப வேண்டா.   
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  
/ தமிழே விழி! தமிழா விழி! /  
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அதிமுக வேட்பாளர்களை தோற்கடிப்பதே மதிமுக தொண்டர்களின் முதல் பணி: மாநில பொருளாளர் மாசிலாமணி


மதிமுக சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் மாநில பொருளாளர் ரா.மாசிலாமணி.
உளுந்தூர்பேட்டை, மார்ச் 27: அதிமுக வேட்பாளர்களை தோற்கடிப்பதே மதிமுக தொண்டர்களின் முதல் பணி என அக் கட்சியின் மாநில பொருளாளர் மாசிலாமணி தெரிவித்தார்.  ÷மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருக்கோவிலூர் ஆகிய ஒன்றிய, நகர செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் உளுந்தூர்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் கட்சியின் மாநில பொருளாளர் இரா.மாசிலாமணி, மாவட்ட செயலாளர் ஏ.கே.மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ÷மாசிலாமணி தனது சிறப்புரையில் பேசியது:  ÷மதிமுக தேர்தலுக்காகவும், பதவி சுகத்துக்காகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அதாவது தமிழர்களின் வாழ்வை வென்று எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் மதிமுக. உண்மையான திராவிட முன்னேற்ற இயக்கம்தான் மதிமுக. 1967-க்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் கருணாநிதியின் குடும்பச் சொத்தாக மாறிவிட்டது.  ÷அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவது நாம் எடுத்த முடிவு அல்ல. நிலைமை நம்மை உருவாக்கி இருக்கிறது. அதனால்தான் தன்மானத்தை இழந்த அதிமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவு கொடுப்பது ஆரோக்கியமானது அல்ல என கருதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறினார்.  ÷மதிமுக தொண்டர்கள் வரும் தேர்தலில் எந்த கட்சிக்கும் வாகனங்களில் பிரசாரத்துக்கு செல்லவேண்டாம். நம்மை இழிவுப்படுத்திய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் தோல்வியுறச் செய்து அதிமுகவுக்கு பாடம் புகட்டுவது மதிமுகவின் முதல் வேலை என்றார்.  இந்த கூட்டத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான க.ஜெயசங்கர் தலைமை வகித்தார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு கோவிந்தராஜ், மரகதபுரம் எம்.பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் உளுந்தூர்பேட்டை (வடக்கு) ஜெ.நந்தகுமார், திருநாவலூர் ஏ.சிவக்குமார், எம்.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் கு.வையாபுரி வரவேற்றார்.  அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக, சார்பு அமைப்புகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நகரச் செயலாளர் க.செந்தில்குமார் நன்றி கூறினார்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக