சரியான வேண்டுதல்கள். இந்தத் தேர்தலிலேயே இவை நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, மார்ச் 31: தேர்தலில் வாக்களிக்கும்போது உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் சார்பாக, "தேர்தலில் மாற்றுத் திறனாளிகளின் சிரமங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் பேசியதாவது:தமிழகத்தில் சுமார் 20 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். எனவே எங்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேர்தல் ஆணையம் சில உரிமைகளையும், வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.குறிப்பாக, நடக்க இயலாதவர்களுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி வசதியை செய்து தர வேண்டும்.பார்வையற்றோரை பொறுத்தவரையில், மற்றவர்களின் உதவியில்லாமல் வாக்களிக்க இயலாது. அவ்வாறு உதவி செய்பவர்கள் அவர்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களித்து விடும் சூழ்நிலை உள்ளது. எனவே பார்வையற்றோரின் வாக்குரிமை மறைமுகமாகப் பறிக்கப்படுகிறது.இதனைத் தவிர்க்க, மற்றவர்களின் உதவியில்லாமல் வாக்களிக்கும் வகையில் பேசும் மென்பொருள் (டாக்கிங் சாஃப்ட்வேர்) வசதியை வாக்குச்சாவடிகளில் கொண்டு வர வேண்டும்.உயரம் குறையுள்ளவர்களுக்கு வாக்கு இயந்திரம் எட்டும் அளவுக்கு சாய்வு தளப் பலகை வசதியை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல, செவித்திறன் குறைபாடுள்ளோருக்கு தகவல் பரிமாறும் வசதி மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அவர்களுக்கு சமூக நலத்துறை சார்பாக வழங்கப்படும் அடையாள அட்டையையே போதுமானதாக கருதி வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் நம்புராஜன், உயர வளர்ச்சி தடை பெற்றோர் சங்கத் தலைவர் ஆர்.கோபிநாத், மாற்றுத் திறனாளிகள் நல ஆணைய உதவி இயக்குநர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக