அறிவு சார்ந்த செயலன்று. பொதுவாகத்தமிழினப் படுகொலை புரியும் காங்.கிற்கு எதிராகவும் ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்றும் கட்சிச் சார்பற்ற பலர் குறுந்தகவல் அனுப்புகின்றனர். இவற்றைத் தடை செய்யும் நோக்கில்தான் கட்சியினரின் பரப்புரையைத் தடுக்க முயல்கின்றனர். இன்றைய அறிவியல் முறைக்கேற்ப குறுந்தகவல் வழியாகத் தேர்தல் பரப்புரை மேற்கொள்வது தவறல்ல. உடனே விழுப்புரம் ஆட்சியர் இதனை நீக்கிக் கொள்ள வேண்டும். மக்கள் நலம் நாடும் வழக்கறிஞர்கள் உரியவர்களை அணுகி இவ்வறிவிப்பிற்கான தடையைப் பெற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
விழுப்புரம், மார்ச் 27: விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தின் போது செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்களிக்க கோருவது தடை செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ÷இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்.எம்.எஸ். செய்தி மூலம் வாக்கு கோருவது அல்லது தேர்தல் பிரசாரமோ நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய எஸ்.எம்.எஸ் செய்தி யாருடைய செல்போனுக்கும் வந்தால், அந்த செய்தியை பெற்ற நபர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு தொலைபேசியில் தெரிவிக்கலாம். ÷புகாரை 04146-228200, 222172 என்ற எண்களில் தெரிவிக்கலாம். புகார் அளிக்கும் நபர் எஸ்.எம்.எஸ் செய்தியின் விவரத்தை கூறி அது எந்த செல்போன் எண்ணிலிருந்து வரப்பெற்றுள்ளது என்ற தகவலையும் புகார் அளிப்பவரின் செல்போன் எண் மற்றும் பெயர், முகவரி ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். ÷அவர்களின் புகார் பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த செய்தியை யார் அனுப்பியிருந்தாலும், அதற்கான செலவினத்தை சம்பந்தப்பட்ட வேட்பாளர் கணக்கில் சேர்த்து தேர்தல் செலவினமாக கணக்கில் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக