வியாழன், 31 மார்ச், 2011

Thamizh ilaignar peravai supports a.d.m.k.alliance: தமிழ் இளைஞர் பேரவை அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

ஈ.மு. (ஈழத்தமிழர்கள் இனப் படுகொலைகளுக்குஆளாகும் முன்னர்) எனில் அ.தி.மு.க. எந்த வகையிலும் தி.மு.க.வை விட மேம்பட்டதாகக் கூற இயலாது. ஆனால் ஈ.பி.எனில், எப்பொழுதும் நம்பிக்கைக்குரியதாக இருந்த அ.தி.மு.க.வை விட ஆட்சிப்பொறுப்பில் இருந்தும் காங்.இனப்படுகொலைகளுக்கு அறிந்தோ அறியாமலோ உடந்தையாக இருந்த தி.மு.க., அக்கட்சியினராலேயே கண்டனத்திற்கு உரியதாக ஆகி விட்டது. அந்தச் சூழலில் கலைஞர் எதிர்க்கட்சியில் இருந்திருப்பின் இனப்படுகொலைகள் தடுக்கப்பட்டிருக்கும். தமிழ் ஈழம் மலர்நதிருக்கும்.  ஆட்சிச்சுமை அவர் கைகளைக் கட்டி விடுகின்றது. எனவே, தமிழர் நலனுக்காக முன்புவரை தமிழர்களுக்கே குரல் கொடுத்து வந்த தி.மு.க. மீண்டும் தமிழர்களுக்குக் குரல் கொடுக்க அதனை எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்துவதே நல்லது. யாராயினும் அறுதிப் பெரும்பான்மை இன்றியே ஆட்சி அமைக்கட்டும்! குறைந்தது தலைவர்கள் தோற்கடிக்கப்படுவது கட்சிகளின் கொத்தடிமைப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துத் தமிழ்நலப் பாதையில் தலைவர்களைத்  திருப்பி விடும்.  மருந்து கசப்பானாலும் உடல் நலம் கருதி உட்கொள்வது போல் மனம் இடம் தராவிட்டாலும் தமிழ் நலம் கருதித் தி.மு.க.-காங்.கூட்டணியைத் தோற்கடிப்போம்! வேறு வழியின்றி எழுதும் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

தமிழ் இளைஞர் பேரவை அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

காஞ்சிபுரம், மார்ச் 30: நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.இது குறித்து இந்த அமைப்புகளின் மாவட்ட செயலர் சி.லெனின் பொற்செல்வன் வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் ஈழ விடுதலைக்கு போராட்டியவர்களை காங்கிரஸ் அரசு போர் வியூகம் வகுத்து கொன்று குவித்தது. 33 ஆண்டுகால தனி ஈழ விடுதலைப் போரை நீர்த்து போகச் செய்தது. திமுகவும்-காங்கிரஸýம் கூட்டு சேர்ந்து கொண்டு ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கியும், தமிழ் உணர்வாளர்களை அச்சுறுத்தியும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்தன. இந்தத் தேர்தலை தமிழர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கான நம்பத்தகுந்த தூய சிந்தனையுள்ள அரசில் கட்சியே இல்லாத சூழ்நிலையில், துரோகிகளை மன்னிக்க முடியது என்ற அடிப்படையில் மாற்று அணியான அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக