கனிமொழியின் பேட்டியில் முதிர்ச்சி தெரிகிறது. உண்மையில் சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் பங்கிற்கு மேற்பட்படவர்கள் குற்ற வழக்கில் சிக்கியவர்கள் என்பதே உண்மை. கொள்ளைக்காரன், கொலைகாரன் என்று யாருக்கு எதிராகவும் வாக்களிக்காமல் இருப்பதில்லை. நேர்மையாளன் என்பதற்காகவும் மக்கள் யாருக்கும் வாக்களிப்பதில்லை. பயங்கரக் குற்றவாளியாக இருந்தாலும் அவன் பின்னால் ஆயிரக்கணக்கான பேர் அணிவகுத்து நிற்கின்றார்கள். கடைசிநேர மாயைக்கேற்பவே வெற்றி தோல்வி அமைகிறது. என்றாலும் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, ஈழத்தமிர்கள் , தமிழகமீனவர்கள் படுகொலை களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் காரணமானவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டா என்னும் உணர்வு மக்களிடையே உள்ளது. அதை அழியாமல் காக்கவேண்டியது மனித நேயர்களின் பொறுப்பாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
புதுதில்லி, மார்ச் 26: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு திமுக ஆதரவளிக்கும் வரை நானும் ஆதரவளிப்பேன் என்று முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்தார். 2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் உங்கள் பெயர் இடம்பெற்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, "எதுவாக இருந்தாலும் எதிர்த்து நின்று போராடி வெற்றிபெறுவேன் என்றார்' கனிமொழி. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையானவே. அதைத்தான் நாங்கள் தொடக்கத்திலிருந்தே கூறி வருகிறோம். இப்போது விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நாங்கள் குற்றச்சாட்டுகளை எப்படி முறியடிக்கிறோம் என்று பாருங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற கருத்தை அவர் மறுத்தார். ஊகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளைப் பொறுத்து தேர்தல் முடிவுகள் அமையும் என்று எனக்குத் தோன்றவில்லை. அரசு என்ன செய்திருக்கிறது, என்ன செய்கிறது என்பவைதான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்றார் அவர். இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்து, அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, முதல்வர் குடும்பத்தில் பூசல் ஏற்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்ட கனிமொழி, "இது எல்லாக் குடும்பத்திலும் நடப்பதுதான். அதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்?' என்று கேட்டார். மிக்சி, கிரைண்டர் வழங்குகிறோம் என்று வாக்குறுதி அளிப்பது இலவசப் பரிசுப் பொருள்கள் அளிப்பது போன்றதுதான் என்று கூறப்படும் கருத்தையும் கனிமொழி கடுமையாக ஆட்சேபித்தார். ராசா கைது செய்யப்பட்டது, உங்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது உள்ளிட்ட சம்பவங்களை முதல்வர் கருணாநிதி எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கனிமொழியிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கனிமொழி, "அவர் (கருணாநிதி) 75 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறார். இதைப்போல் எத்தனையோ சம்பவங்களை அவர் பார்த்திருப்பார்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக