சன் தொலைக்காட்சி அறிவாலயத்தில் வாடகைக்கு இருக்கும் கட்டடம் ; அதற்கும் தனக்கும் எத்தொடர்பும் இல்லை என்றார். ஆனால், ஆதாயப் பங்கு பல கோடி பெற்றுப் பிரித்துக் கொடுத்தார். கலைஞர் தொலைக்காட்சியில் யார், யாருக்கு எவ்வளவு பங்கு என அறிவிக்கப்பட்டதால் நேரடிப்பங்கு இல்லை என்பது உறுதியாகிறது.௨.) கூட்டணி ஆட்சி எனக் கூறுவதன நோக்கம் தேர்தலுக்குப்பின் காங். மாற்று அணியுடன் கூட்டு வைக்கும் சதித்திட்டத்தை முறியடிக்கத்தான். பலர் எண்ணுவது போல் இவ்வறிவிப்பிற்கும் அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுரை அளிக்க இருப்பதற்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை. கண்டிப்பாகக் காங்.கிற்கு ஆட்சியில் இடம் அளிக்க மாட்டார். ௩.) எல்லாக்கட்சியிலும் பரம்பரைக் கொத்தடிமை உள்ளதால் குற்றம் சாட்ட ஒன்றும் இல்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, மார்ச் 29- சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தேவை ஏற்பட்டால் கூட்டணி ஆட்சி குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும், கலைஞர் தொலைக்காட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். "அதற்கு எனது பெயர் மட்டுமே சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அதில் எனக்கு எந்தவித உரிமையும் கிடையாது. எனது மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி சரத் குமார் ஆகியோருக்கு தான் அதில் பங்குகள் உள்ளன." என்றும் கருணாநிதி தெரிவித்தார்."சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் தொலைக்காட்சி கடன் பெற்றது. இதை எப்படி ஊழலாக கூறமுடியும்? சில அரசியல்வாதிகள் 2ஜி விவகாரத்தை மிகவும் பெரிதுபடுத்தி கூறி வருகின்றனர்." என்றும் கருணாநிதி கூறினார்.துணை முதல்வர் ஸ்டாலின் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், "ஸ்டாலின், எனது அரசியல் வாரிசாக இருப்பதில் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. திமுகவின் மூத்த தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் என் மீது வைத்துள்ள அதே நம்பிக்கையை ஸ்டாலின் மீதும் வைத்துள்ளனர்." என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக