தமிழ் மக்களும் தமிழ்நாட்டவரும் பேராயக்கட்சியாகிய காங்.ஐ அடியோடு வீழ்த்துவதையே கடமையாகக் கொள்ள வேண்டும். தொடரட்டும் சீமானின் பரப்புரைப் பணி. காங்.கட்சியினரும் தலைமைக்கு அறிவுறுத்த தம் கட்சியினருக்கு வாக்குஅளிக்கக்கூடாது. அதன் கூட்டணிக் கட்சியினரும் தேர்தலுக்குப்பின் மாற்று அணியுடன் கூட்டு வைக்கத் திட்டமிட்டுள்ள அதனை - தோல்விக்குப் பின் எப்படியும் பழி போடப்போகும் அதனை - சிங்கள நாடாளுமன்றத்திலேயே இந்திய காங்.அரசின் போரைத்தான் தாங்கள் நடத்தியதாக உண்மை வெளிவந்த பின்னும் இனப்படுகொலை குறித்து வருந்தாத அதனை - இம்மண்ணின் மைந்தர்கள் உயிரிழப்புகளுக்கும் காரணமான அதனை - முற்றிலும் தோல்வியுறச் செய்வதையே கடமையாகக் கொள்ள வேண்டும். கடனுக்குப் பரப்புரை செய்தாலும் வாக்கு அதற்கு அளிக்க வேண்டாம். காங்.ஆட்சிப்பீடத்தில் ஏற்றிய கரிசு - பாவம் - தொலைவதற்காக அக்கட்சிக்கு எதிராக வாக்களிப்பீர்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, மார்ச் 30- காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.ராமேஸ்வரம், பரமக்குடி பகுதியில் நடைபெற்ற அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் பேசியதாவது:மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லும் சிங்கள கடற்படையை கண்டுகொள்ளாமல் தமிழின அழிப்பிற்கு துணை போய் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை நாம் வீழ்த்த வேண்டும். இனி ஒரு முறை இந்த மண்ணில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், வருங்கால தமிழ்ச் சொந்தங்கள் அனைவருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாக ஆகிவிடும். காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது என்பது நாம் தமிழர் கட்சியின் குறிக்கோள் மட்டுமல்ல தமிழனாக பிறந்த ஒவ்வொரு தமிழனுக்குமான கடமை.இவ்வாறு சீமான் பேசினார்.இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தடா சந்திரசேகர், தமிழர் அரப்பா, தலைமை நிலைய பேச்சாளர் பேராவூரணி திலீபன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டோம்னிக் ரவி, மற்றும் திரைப்பட இயக்குநர்கள் செல்வமணி, செல்வபாரதி உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
கருத்துகள்


By kumar
3/30/2011 7:01:00 PM
3/30/2011 7:01:00 PM


By kandhavel
3/30/2011 7:00:00 PM
3/30/2011 7:00:00 PM


By ahmed
3/30/2011 6:52:00 PM
3/30/2011 6:52:00 PM


By ahmed
3/30/2011 6:50:00 PM
3/30/2011 6:50:00 PM


By கோபால்
3/30/2011 6:41:00 PM
3/30/2011 6:41:00 PM


By Tajudeen
3/30/2011 5:20:00 PM
3/30/2011 5:20:00 PM


By M.thanagrajan
3/30/2011 4:47:00 PM
3/30/2011 4:47:00 PM


By alagarasn
3/30/2011 4:16:00 PM
3/30/2011 4:16:00 PM


By தமிழன்
3/30/2011 3:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/30/2011 3:51:00 PM
தொடக்கத்தில் தெரிவித்த கருத்தைத் தினமணி வெளியிடவில்லை. வாழ்க தினமணியின் நடுவுநிலைமை!
பதிலளிநீக்கு