பாக்கிசுதான் தலைமையமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா சிங்கள வெறிக் கொலைகாரன் வருகைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரவிடாமல் செய்ய வேண்டும். இந்தியாவின் சார்பாக இனப் படுகொலை புரிந்ததாக் சிங்களம் தன் நாடாளுமன்றத்திலேயே அறிவித்துள்ளதால் கூட்டாளிகை அடிக்கடிச்சிவப்புக் கம்பளம் விரித்துச் சிறப்பான வரவேற்பை இந்திய அரசு கொடுக்கத்தான் செய்யும். எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க த் தமிழக மக்கள் திரண்டெழ வேண்டும். ஆனால், கட்சிக் கொத்தடிமைகளாக உள்ள தமிழ்நாட்டவர் அவ்வாறு செய்ய மாட்டார்கள். பம்பாய்வாழ் தமிழர்களாவது பிற மக்களைத் திரட்டி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். கொலைகாரத் தலைவர்களின் ஒற்றுமையைக் கண்டாவது நாம் ஒன்று படவேண்டும்! வென்று காட்ட வேண்டும்! கொலைகாரக் கூட்டணியைப புரிந்து கொண்டு வரும்தேர்தலில்அதனைத் தோற்கடிக்கவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி!
புதுதில்லி, மார்ச்.31: இந்தியா-இலங்கை இடையே ஏப்ரல் 2-ம் தேதி மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும், இலங்கை அதிபர் ராஜபட்சவும் மும்பை வர உள்ளனர்.மொஹாலியில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ளது. இந்தப் போட்டியைக் காண பிரதிபா பாட்டீல் மும்பை செல்ல உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.கொழும்புவில் இருந்து ராஜபட்சவும் இறுதிப் போட்டியைக் காண மும்பை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த உலகக் கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முத்தையா முரளிதரனுக்கு காணிக்கையாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என ராஜபட்ச விரும்புவதாக அவரது செய்தித்தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்தார்.இலங்கை- நியுஸிலாந்து இடையே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியை இலங்கை அதிபர் ராஜபட்சவும், அவரது 3 மகன்களும் பார்த்தனர். தற்போது இறுதிப் போட்டியையும் ராஜபட்ச நேரில் காண உள்ளார்.
கருத்துகள்


By புரவி
3/31/2011 3:44:00 PM
3/31/2011 3:44:00 PM


By unmai
3/31/2011 3:07:00 PM
3/31/2011 3:07:00 PM


By சுப்பு
3/31/2011 2:46:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/31/2011 2:46:00 PM