தமிழக வழக்கறிஞர் கயல்விழி ஓமந்தையில் கைது
January 21st, 2011
மனித உரிமைப் போரளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான கயல்விழி மற்றும் அவரது உதவியாளர் திருமலை ஆகியோர் சிறிலங்கா ராணுவத்தால் ஓமந்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் . முறையான கடவுச் சீட்டு, சிறிலங்கா அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவற்றுடன் சென்று இருந்த வேளை இச் சம்பவம் இடம் பெற்று இருக்கிறது . முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து திரும்பும் வழியில் ஓமந்தை பாதுகாப்பு அரணில் வைத்து சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டனர் . இவர் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் ஆவர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வழக்கறிஞர் கயல்விழி சிறிலங்காவில் கைது. பழ. நெடுமாறன், வைகோ கண்டனம்
January 21st, 2011
தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழி, தனது உதவியாளர் திருமலையுடன் இலங்கைக்குச் சென்று முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து திரும்பும் வழியில் ஓமந்தை எனும் இடத்தில் சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.
முறையான கடவுச் சீட்டு, இலங்கை அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவை இருந்தும் அவரை கைது செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே இந்த பிரச்னையில் இந்திய அரசு குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகத் தலையிட்டு அவர்களை விடுவித்து தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு வேண்டிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறோம்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோருக்கு தந்திகளையும் அனுப்பி வைத்திருக்கிறோம். தமிழகமெங்கும் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பிலும் தந்திகள் அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறோம்.
} 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக