புதன், 19 ஜனவரி, 2011

hindu ram - mahindha rajapakshe conversation: இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் புனைவு !


நீரா ராடியா உடனான இந்திய ஊடகவியலாளர்களின் தொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளிவந்த உடன், இந்திய ஊடகவியலாளர்களின் நடுநிலைமை பற்றி பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற விவாதங்களில் இன்னும் ஊடக நேர்மையுடன் இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டார்கள்.

இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்த சவால்களை எல்லாம் சந்திக்கும் மிக மூத்த ஊடகவியலாளர்களில் இந்து நாளேட்டின் ஆசிரியர் திரு.என்.இராமும் ஒருவர். த‌ன‌து நாளேட்டின் த‌லைய‌ங்க‌த்திலும், தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சிகளிலும், மாணவ பத்திரிகையாளர்களுக்கு தான் கற்பிக்கும் பாடங்களிலும் திரு.இராம் அவர்கள், ஊடகங்களுக்கு உள்ளிருந்தே ஒரு‌‌ அறுவை சிகிச்சை தேவை என்றும், ஊட‌க‌ நேர்மையின் அடிப்ப‌டைக‌ளை மீறும் வேண்டாத‌ க‌ளைக‌ள் எல்லாம் நீக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் தொட‌ர்ந்து கூறி வ‌ந்துள்ளார்.

ஆனால் இங்குள்ள‌ பிர‌ச்சி‌னை என்ன‌வெனில் திரு.இராமே அவ‌ர் வைத்திருக்கும் இந்த‌ ஊட‌க‌ நேர்மை என்ற‌ வார்த்தைக்கு கூட‌ ம‌திப்ப‌ளித்த‌தே இல்லை என்ப‌து தான். வ‌ங்காளத்தில் உள்ள‌ த‌ன‌து விருப்ப‌மிகு மார்க்சிசுட்டுகள் முதல், த‌மிழ்நாட்டின் ஆன்மீக குருக்கள் வரை சிலரின் கிரிமினல் குற்றங்கள் முதல் படுகொலைகள் வரை திரு.இராமின் தலைமையில் இயங்கும் ஊடகம் வெளியிடுவதில்லை, மாறாக முழுவ‌துமாக‌ மூடி ம‌றைத்து, பொய்யான‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌ர‌ப்புவ‌திலேயே குறியாக‌ இருக்கின்ற‌து.

எல்லா தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளையும் இசுலாமிய‌ ச‌மூக‌மே ந‌ட‌த்துகின்ற‌து என்று இந்திய‌ உள‌வுத்துறை கூறும் ப‌ச்சைப் பொய்க‌ளை க‌ண்ணை மூடிக்கொண்டு அப்ப‌டியே கிளிப்பிள்ளை போல‌ ஒப்புவித்து வ‌ருகின்ற‌து இந்து நாளேடு. மேலும் இது ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌ட‌ந்து வ‌ரும் இந்த‌ தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளில் பங்கு கொண்டிருக்கும் இந்துத்துவ‌வாதிக‌ளைப் ப‌ற்றி விசாரிக்க‌க்கூட‌ ம‌றுத்து வ‌ருகின்ற‌து.

”ச‌ர்வ‌தேசிய‌வாதியான” திரு.இராம் இந்தியாவில் ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளை ம‌ட்டும் திரித்து எழுதுவ‌தோடு நின்று விடுவ‌தில்லை. உதார‌ண‌த்திற்கு, அவரது ந‌ண்ப‌ரும், இல‌ங்கை அதிபருமான‌‌ ம‌கிந்தாவிற்காக, ஊட‌க‌ நேர்மை எல்லாம் ம‌ற‌ந்துவிட்டே இந்துவில் வ‌ரும் இல‌ங்கையை ப‌ற்றிய‌ செய்திக‌ள் வ‌ருகின்ற‌ன‌.

இல‌ங்கை அர‌சின் இன‌ப் பாகுபாடுக‌ள், போர்க் குற்ற‌ங்க‌ள், இன‌ப்ப‌டுகொலைக‌ள், அர‌சை விம‌ரிசிக்கும் ந‌ப‌ர்க‌ள் மர்மமான முறையில் கொல்ல‌ப்ப‌டுத‌ல், இராச‌ப‌க்சேவின் ச‌ர்வாதிகார‌ப் போக்கு இவை எல்லாம் இந்து என்ற‌ “செய்திக‌ளை ஆவ‌ணப்ப‌டுத்தும்” நாளித‌ழில் அற‌த்தின் வ‌ழியே ந‌ட‌ப்ப‌தாகவே ந‌மக்கு கூற‌ப்ப‌டும். இதை எல்லாம் கேட்டு பொய்யை மெய் போல உரைப்பதில் தன்னையே விஞ்சிவிட்டார்களே இவர்கள், என கோய‌ப‌ல்சே மூச்ச‌டைத்து இற‌ந்தாலும் ஆச்ச‌ர்ய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை .

நல்ல ஊடகத்தின் அடிப்படையான‌ ஊட‌க‌ நேர்மைக்காகவும், பொதும‌க்க‌ள் இந்த உரையாடலைப் பற்றி பல இடங்களில் விவாதிக்க ‌வேண்டும் என்ற‌ ந‌ல்ல‌ எண்ண‌த்துட‌னும் எங்க‌ளிட‌ம் உள்ள‌ இராம், இராச‌ப‌க்சே புனைவு (Fiction) தொலைப்பேசி உரையாட‌லை உங்க‌ளுக்கு எழுத்து வ‌டிவில் வ‌ழ‌ங்குகின்றோம்.

புனைவுச் செய்திக‌ளை உண்மையான‌ செய்திக‌ளாக‌ வெளியிடும் இந்து நாளித‌ழ் போல் நாங்க‌ள் அல்ல‌; ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பேசுவ‌தை ப‌திவு செய்ய‌ எங்க‌ளுக்கு உரிமை இல்லை என்ப‌தாலும், இந்த‌ தொலைபேசி உரையாட‌ல் முழுமையாக‌ எங்க‌ளால் புனைய‌ப்ப‌ட்ட ஒன்றே என்று உங்க‌ள் எல்லோரிட‌மும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உண்மையான‌(!) செய்தி என்று இன்று ஊட‌க‌ங்க‌ள் கூறும் செய்திகளை விட, இந்த‌ புனைவு உரையாடல் எவ்வளவு உண்மையானது என்பதை வாச‌க‌ர்க‌ளாகிய‌ நீங்க‌ளே முடிவு செய்துகொள்ளுங்க‌ள்.

(தொலைபேசி ம‌ணி ஒலிக்கின்ற‌து, இராச‌ப‌க்சே தனது நல்வாய்ப்பு தரும் எண் ஒன்ப‌து வ‌ரை எண்ணிவிட்டு தொலைபேசியை எடுக்கின்றார் !)

இராம்: ஆயுபவ‌ன்(சிங்க‌ள‌த்தில் வ‌ண‌க்க‌ம் என‌ கூறுகின்றார்) அதிப‌ர் அவ‌ர்க‌ளே.

இராச‌ப‌க்சே: வ‌ண‌க்க‌ம் திரு.இராம்

இராம்: நீங்க‌ள் எப்பொழுது என்னை அழைத்தாலும் நான் வ‌ருவேன்

இராச‌ப‌க்சே: நான் “வ‌ண‌க்க‌ம்” என்று தான் சொன்னேனே த‌விர, ‘Wannacome’ என உங்க‌ளை இங்கே வரச்சொல்ல‌வில்லையே. தவிர இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ விவ‌கார‌ங்க‌ளில் நீங்க‌ள் தானே எங்கள் தில்லியின் செல்ல‌ப்பிள்ளை?.

இராம்: எப்பொழுதிலிருந்து நீங்க‌ள் த‌மிழில் பேச‌ தொட‌ங்கினீர்க‌ள் அதிப‌ர் அவ‌ர்க‌ளே? இது உங்க‌ள‌ சிங்க‌ள‌ மொழிக்கு நீங்கள் செய்யும் துரோக‌மாகாதா?

இராச‌ப‌க்சே: நான் சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே அதிப‌ராக‌ இருந்த‌ கால‌ம் முடிந்து விட்ட‌து ந‌ண்ப‌ரே, இப்பொழுது நான் இல‌ங்கையில் உள்ள‌ எல்லா இன‌க்குழுக்க‌ளுக்குமான‌ அதிப‌ர், த‌மிழ் இன‌க்குழுவையும் சேர்த்தே. அதாவது த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் சிறையில் இருந்தாலும் ச‌ரி, புல‌ம்பெய‌ர்ந்து வேறு நாடுக‌ளில் இருந்தாலும் ச‌ரி நான் தான் அவ‌ர்க‌ளின் அதிப‌ர்.

இராம்: உங்க‌ள் ச‌ர்வாதிகார‌த்தை அண்டி வாழும் சில‌ த‌மிழ‌ர்க‌ளை ம‌ட்டும் நீங்கள் வெளியில் விட்டு வைத்துள்ளீர்க‌ள். நீங்க‌ள் தான் நான் ச‌ந்தித்ததிலேயே மிக‌ப் பெரிய‌ பொறுக்கி (செல்ல‌மாக‌). அதிலும் நீங்க‌ள் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ரும் கூட .

இராச‌ப‌க்சே: பொறுக்கி என்ற‌ சொல்லை எவ்வ‌ள‌வு அன்பாக‌ கூறுகின்றீர்க‌ள் இராம் !. என‌க்காக‌ நீங்க‌ள் உங்க‌ள் அர‌சுட‌ன் ந‌ட‌த்தும் திற‌மையான‌ அர‌சுற‌விய‌ல் இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க‌வே மாட்டேன். நீங்கள் எப்போதுமே ஊடகவியலாளர் என்பதற்கு ஒரு படி மேலானவர். எங்கள் அரசினுடைய விருப்பத்துக்குறிய தரகரல்வோ நீங்கள். வரும் ஆண்டுக்கான விபீச‌னா விருது ப‌ட்டிய‌லில் நான் உங்க‌ளின் பெய‌ரை சேர்த்திருக்கின்றேன் . லங்கா இரத்னா விருது பெறும் 'இந்து' என். இராம்

இராம்: நீங்க‌ள் த‌ரும் விருதுக‌ள் மட்டுமே உழைப்பிற்கு கிடைக்கும் ப‌ரிசுக‌ள் அதிபரே . இந்தியாவின் மற்ற பத்திரிகை ஆசிரியர்களைப்போல காசுக்கு அலையும் சில்லறை அல்ல நான். அப்பாவி ம‌க்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளில் என‌து பெயரை எழுதியாவது வ‌ர‌லாற்றில் ஒரு நிரந்தர இட‌ம் பிடிக்க விரும்புகிறேன

இராச‌ப‌க்சே: இப்பொழுது தான் உண்மையான பிராமணன் பேசுகின்றான். கேவ‌ல‌மான‌ செல்வ‌த்தை விட நுட்பமான வ‌ர‌லாறே முக்கியமானது. நான் உங்க‌ளைப் போல‌ ஒரு பிராமணன் கிடையாது. அதனால் தான் நான் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடிக்கும் வேலையுடனே செல்வ‌த்தையும் சேர்த்து வ‌ருகின்றேன். ராஜபக்சே குடும்பத்துக்கு ஒரு ப‌குதி த‌ர‌காக‌ வ‌ராம‌ல் என் நாட்டில் எந்த‌ ஒரு ஒப்ப‌ந்த‌மும் நிறைவேறுவ‌தில்லை.

இராம்: உங்க‌ளுக்கு வ‌ரும் ப‌ண‌த்தின் அள‌வு சுருங்கிவ‌ருகின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே, இது உல‌க‌ப் பொருளாதார‌த்தின் தேக்க காலம். தவிர உங்க‌ள‌து க‌ழுத்தைச் சுற்றியிருக்கும் கயிறு இறுகுவது போலுள்ளது, உங்க‌ள‌து ஆட்சிகால‌த்தில் ந‌டைபெற்ற‌ போர்க்குற்ற‌ங்க‌ளை விசார‌ணை செய்ய‌ வேண்டும் என‌ பன்னாட்டு அமைப்புகள் கோரி வ‌ருகின்ற‌ன. க‌ட‌ந்த‌ ஆண்டு உங்க‌ள‌து இராணுவ‌ம் த‌மிழீழ‌ விடுத‌லைப்புலிக‌ள் அமைப்பை ஒன்றும் இல்லாம‌ல் செய்த‌ போது, ஒரு வார‌த்தில் மட்டும் 20,000 அப்பாவி த‌மிழ்ப் பொதும‌க்க‌ளை கொன்றார்க‌ளே, அந்த‌ கோர‌ நிக‌ழ்ச்சி நினைவிருக்கிறதா?

இராசப‌க்சே: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி தான். நான் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும். அண்மையில் “சேனல் 4″ எம‌து ப‌டையின‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளையும், அவ‌ர்க‌ளிட‌ம் ஊட‌க‌விய‌லாள‌ராக‌ இருந்த‌ இசைப்பிரியா என்ற‌ பெண்ணையும் ப‌டுகொலை செய்யும் காணொளியை ஒளிப‌ர‌ப்பினார்க‌ளே. அதைப் ப‌ற்றி நீங்க‌ள் என்ன‌ நினைக்கின்றீர்க‌ள்?

இராம்: கொடூர‌மான‌ ஒன்று, அதாவ‌து கொடூர‌மான‌ ஊட‌க‌விய‌ல் என‌க் கூற‌வ‌ருகின்றேன். உங்க‌ள‌து அர‌சை த‌வ‌றான‌ இட‌த்தில் வைத்துக் காட்டும் ஒரு காணொளியை அவ‌ர்க‌ள் எப்ப‌டி ஒளிப‌ர‌ப்ப‌லாம்? இது ஒரு முறைய‌ற்ற‌ ஊட‌க‌விய‌லை (Bad journalism) பி.பி.சி ஒரு போதும் கடைப்பிடிக்க மாட்டார்க‌ள். சேனல் 4 ம‌ட்டும் இப்படி கீழ்த்தரமாக செல்வார்கள்.

இராச‌ப‌க்சே: நீங்க‌ள் பி.பி.சி யுடனும் ஏதாவ‌து ஒப்ப‌ந்த‌ம் செய்துள்ளீர்க‌ளா, என்ன? என்னைப் பொருத்த‌வ‌ரையில் அவ‌ர்க‌ள் எல்லாம் ஒன்று தான். இந்த‌ வெள்ளைய‌ர்க‌ள் இன்னும் த‌ங்க‌ள‌து கால‌னீய‌ ஆட்சி ந‌ட‌ந்து கொண்டிருப்ப‌தாக‌ நினைத்துக் கொண்டு அவ‌ர்க‌ள் ஆப்கானிசுதானத்திலும், ஈராக்கிலும் செய்யும் இன‌ப்ப‌டுகொலைக‌ளை ம‌றைத்து, நாம் செய்த‌ இனப்ப‌டுகொலையை ம‌ட்டும் எல்லோருக்கும் சுட்டிக்காட்டுகின்றார்க‌ள். அவ‌ர்க‌ளால் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌முடியுமென்றால் ந‌ம்மாலும் செய்ய‌ முடியும்.

இராம்: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி. இது மனிதநேய முகமூடியுடன் அலையும் உல‌க‌லாவிய‌ ஏகாதிப‌த்திய‌ம். மாநிற‌ ம‌க்க‌ள் ம‌ட்டும் எப்பொழுதும் தவறு செய்து கொண்டும், ம‌னித‌ உரிமை விதிக‌ளை எப்பொழுதும் மீறிக் கொண்டும் இருப்பவர்கள், ஆனால் வெள்ளை இன‌‌ ம‌க்க‌ள் மட்டும் அற‌த்தின் ப‌டி ந‌ட‌க்கும் சாத‌னையாள‌ர்க‌ளாம்… நான் கேட்கிறேன், இப்படி ஒரு மாநிற‌ ம‌க்க‌ள் குழு ம‌ற்றுமொரு மாநிற‌ ம‌க்க‌ள் குழுவை கொல்வ‌திலெல்லாம் அப்படி என்னதான் தவறு இருக்கிறதோ?

இராச‌ப‌க்சே: இராம் இங்கு பிர‌ச்ச‌னை என்ன‌வென்றால் சில‌ மாநிற‌, க‌ருப்பின‌ ம‌க்க‌ளும் வெள்ளையின‌த்த‌வ‌ரை போல‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இந்த‌ ச‌ர‌த் பொன்சேகாவை எடுத்துக் கொள்ளுங்க‌ள், அவ‌ன் என்னிட‌ம் இராணுவத்‌ த‌ள‌ப‌தியாக‌ இருந்தான், ஆனால் ப‌ணியிலிருந்து ஓய்வெடுத்த‌ பின்ன‌ர் அவ‌ன் என்னை அர‌சிய‌லில் எதிர்த்து போட்டியிடுகின்றான். மேலும் நானும், என‌து ச‌கோத‌ர‌ர்க‌ளும் செய்த‌ போர்க்குற்ற‌ங்க‌ளை உல‌குக்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டப்போவ‌தாக‌வும் கூறுகின்றான். இவை எல்லாம் எத‌ற்காக‌? அமைதிக்கான‌ ஒரு நோப‌ல் ப‌ரிசிற்காக‌வும், ஓய்வுக்கால‌த்தை சுவீட‌னில் க‌ழிப்ப‌த‌ற்காகவும் தானே?

இராம்: நீங்க‌ள் அந்த ஆளை சிறையில் அடைத்தது நல்லது. இல்லை என்றால் அவ‌ர் ந‌ம‌க்கு மிக‌ப்பெரிய‌ தொந்த‌ர‌வாக‌ இருந்திருப்பார். எங்களுக்கும் அவ‌ரது சத்தத்தை மூடி மறைத்துகொண்டிருந்தது கூச்சமாக இருந்தது.

இராச‌ப‌க்சே: அதற்காக நான் ப‌ல‌ ச‌ட்ட‌ங்க‌ளை வ‌ளைக்க ‌வேண்டியிருந்தது, ஆனால் அது எல்லாம் இல‌ங்கையின் ந‌ல‌னிற்காக‌த்தானே. புத்த‌ர் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் என‌து நாட்டில் அர‌சிய‌லமைப்பு என்று எதுவும் இல்லை. அப்ப‌டியிருக்க‌ இப்போது ம‌ட்டும் எத‌ற்கு ஒரு அர‌சிய‌ல‌மைப்பு? என்ன‌ தான் இருப்பினும் நாங்க‌ள் ஒரு பௌத்த‌ நாடு தானே. எங்க‌ள‌து ம‌த‌க் கொள்கைக‌ளை பாதுகாப்ப‌து எம‌து முக்கிய‌ க‌ட‌மை தானே.

இராம்: ச‌ரியான‌ க‌ருத்து. புதிய‌ வ‌ர‌லாறு எழுதுவ‌த‌ற்கு முன்ன‌ர் ப‌ழைய‌ வ‌ர‌லாற்றை முற்றிலுமாக‌ துடைத்து எறிந்துவிடுங்க‌ள். அற‌த்தின் வ‌ழியாக‌ நாம் ந‌ட‌ப்ப‌து போல‌ காட்டிக்கொள்வ‌து மிக‌ முக்கிய‌மான‌ ஒன்று. ஏனென்றால் இந்த‌ (அற‌த்தின் வ‌ழி) த‌ள‌த்தில் எல்லோரும் ச‌ற்று குழ‌ம்பியே உள்ளார்க‌ள். மிக‌வும் ச‌த்த‌மான‌, உறுதியான‌ குர‌லே இறுதியில் எளிதாக‌ ம‌க்க‌ளைச் சென்ற‌டையும்.

இராச‌ப‌க்சே: குர‌ல் ம‌ட்டும் போதாது இராம், நம் மீது விம‌ர்சன‌ம் வைத்து ந‌ம்மைக் கீழே இற‌க்க‌ முய‌ல்ப‌வ‌ர்க‌ளை அமைதி ப‌டுத்த‌ ந‌ம‌க்கு துப்பாக்கியும் தேவை. ப‌டுகொலை என்ற‌ மிக‌ப்பெரிய‌ த‌ணிக்கை முறையை நான் ப‌ல‌ முறை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌ தேவை உள்ள‌து. உதார‌ண‌த்திற்கு அட‌ம்பிடித்த‌ அந்த‌ முட்டாள் பயல் ‘ச‌ண்டே லீட‌ர்’ இல‌சாந்த‌ விக்ர‌முதுங்காவிற்கும் இதே த‌ணிக்கை முறையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌தாயிற்று.

இராம்: இதை எல்லாம் நீங்க‌ள் தொலைபேசியில் கூற‌க்கூடாது. நாம் பேசுவ‌தை எல்லாம் யாரோ ஒருவ‌ர் ப‌திவு செய்தால் என்ன‌வாகும் என‌ நினைத்துப்பாருங்க‌ள்?

இராச‌ப‌க்சே: நான் இந்த‌ தொலைபேசி ப‌திவு ஒரு இர‌ண்டாம் த‌ர‌ த‌மிழ் ந‌டிக‌னை வைத்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌து என‌க் கூறி ம‌றுத்துவிடுவேன். இப்பொழுது கொழும்பில் எங்க‌ளிட‌ம் எந்த‌ ஒரு ஒலி/ஒளி ஆதாரத்தையும் சிதைத்து போலியென மாற்றக்கூடிய ஆற்றல் படைத்த நிபுணர்கள் உள்ளனர்

இராம்: ஹா,ஹா..! நீரா ராடியா என்ற‌ பெரு முதலாளிகளின் வ‌ர்த்த‌க‌ த‌ர‌கு பெண்ம‌ணியுடனான தங்கள் தொலைபேசி உரையாடல் வெளிவ‌ந்த போது இந்திய‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளான‌ ப‌ர்கா த‌த்தும், வீர் சிங்க்வீயும் எப்ப‌டி அதை பொய் என்று ம‌‌றுத்தார்க‌ளே, அவ்வளவு நேர்மையாக உள்ள‌து உங்க‌ள‌து ம‌றுப்புரையும். நான் கூட ஒரு தொலைக்காட்சி நிக‌ழ்ச்சியின் போது அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் வெளுத்து வாங்கி விட்டேன். அது என‌க்கு ந‌ன்றாக‌ இருந்த‌து. தாக்குத‌தல்தான்‌ பாதுகாப்பி‌ற்கான‌ சிறந்த வ‌ழிமுறை !.

இராச‌ப‌க்சே: நான் கூட‌ அந்த‌ நிக‌ழ்ச்சியைப் ப‌ற்றி கேள்விப்ப‌ட்டேன். அதில் நீங்க‌ள் பிர‌பு சாவ்லாவை ம‌ட்டும் க‌ண்டுகொள்ளாம‌ல் விட்ட‌தையும் நான் க‌வ‌னித்தேன். ப‌ர்கா, வீர் சிங்வீயை விட‌ மிக‌ மோச‌மான‌ ஆள் பிரபு சாவ்லா என கேள்விப்படுகிறேன். நீங்க‌ள் செய்த‌து புத்திசாலித்த‌ன‌மான‌ வேலை. அப்புறம், இந்தியாவில் உள்ள‌ பிர‌ப‌ல‌மான‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் யாராவ‌து வேலை இழ‌ந்தால் அவ‌ர்க‌ளை உட‌னே இல‌ங்கைக்கு அழைத்து ஊட‌க‌விய‌லை சொல்லித்த‌ரும் க‌ல்லூரிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ளாக‌ ப‌ணியம‌ர்த்த‌வேண்டும் என‌ என‌து ஊட‌க‌ ஆலோச‌க‌ர் என‌க்கு ஆலோச‌னை கூறினார். அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் திற‌மைக‌ளை வைத்துக்கொண்டு நாம் ந‌ம்மை காத்துக்கொள்ள‌வும் முடியும், நமக்கு ஆதரவாக அவர்களை வைத்து பிரச்சாரம் செய்யவும் முடியும். ஒரே க‌ல்லில் இர‌ண்டு மாங்காய்க‌ள்.

இராம்: உங்க‌ள் காலடியிலேயே நான் கிடக்கும் போது மற்றவர்களெல்லாம் எத‌ற்கு அதிப‌ர் அவ‌ர்க‌ளே?

இராச‌ப‌க்சே: இத‌ற்கு எல்லாம் ம‌ன‌வ‌ருத்த‌ம் அடையாதீர்க‌ள் இராம். இவ்வ‌ள‌வு நாட்க‌ளாக‌ என‌க்கு நீங்க‌ள் மிக‌ விசுவாச‌மாக‌ இருந்து வ‌ந்துள்ளீர்க‌ள். இந்திய‌ ஊட‌க‌ங்கள் உங்கள் மேல் கொண்டுள்ள‌ ந‌ம்ப‌க‌த்த‌ன்மை, ம‌ரியாதையைக் கொண்டு நான் இதுவ‌ரை செய்த‌ ப‌டுகொலைக‌ளையும் ,குற்ற‌ங்க‌ளையும் வெளியே தெரியாம‌ல் மூடி ம‌றைத்து விட்டீர்க‌ள். ஆனால் உண்மை என்ன‌வெனில் உங்க‌ளுக்கு இப்பொழுது வ‌ய‌தாகிவிட்ட‌து. முன்பிருந்த‌தை போல‌ இப்பொழுதெல்லாம் உங்க‌ள‌து குர‌ல் அறை முழுக்க‌ க‌ணீரென‌ கேட்ப‌து இல்லை.

இராம்: அது உண்மை தான். ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நான் கூறிய‌ வார்த்தைக‌ளையே நான் என்னுள் விழுங்க வேண்டியிருந்ததால் அவை எல்லாம் என‌து குர‌ல் நாள‌ங்களை பாதித்துவிட்ட‌ன‌. எப்ப‌டி இருப்பினும் இந்தியாவில், அதாவ‌து புது தில்லியைப் பொருத்த‌வ‌ரை நான் தான் இருப்ப‌திலேயே தூய்மையான‌ க‌றைப‌டியாத‌ ஊட‌க‌விய‌லாள‌ன்.

இராச‌ப‌க்சே: உங்களுடைய சொந்த நலனையெல்லாம் எப்படித்தான் உங்களால் ஊடகவியல் நேர்மையாக மாற்றி பிடிபடாமல் தப்பிக்க முடிகிறதோ? என்ன‌தான் இருப்பினும் இந்து முனிவ‌ர்க‌ளின் கருத்துப்ப‌டி இது “க‌லியுக‌ம்” தானே

இராம்: இந்த‌ வேலையை எல்லாம் என‌து ஆரவாரமான ஆங்கில‌ம் செய்கின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே. நான் பேசும் போதும், எழுதும் போதும் ப‌ய‌ன்ப‌டுத்தும் சிக்க‌லான‌ வ‌ரிக‌ளை இந்த‌ முட்டாள்க‌ள் எல்லாம் வேத வாக்காக என்றே நினைக்கின்றார்க‌ள். நான் நினைக்கின்றேன் அங்கு உள்ள‌ பெரும்பாலானவ‌ர்க‌ள் என்னை முன்னாள் வைசிராயின் ம‌றுபிற‌வி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

இராசபக்சே: நீங்க‌ள ”மவுண்டு ரோட் மகாவிசுணு” அவதாரம் என்ற‌ல்ல‌வா நான் நினைத்தேன். ஹா,ஹா,ஹா.

இராம்: ஐயோ கடவுளே நான் ஒரு மார்க்சிசுடு கட்சியின் (சி.பி.எம்) உறுப்பினன்! நீங்க‌ள் கூறுவ‌து ந‌கைச்சுவையாக‌ இல்லை அதிப‌ர் அவ‌ர்க‌ளே. அந்த ‌ வ‌ரியை நான் வெறுக்கின்றேன்.

இராச‌ப‌க்சே: க‌ட‌வுளின் அவ‌தார‌மாக‌ இருப்ப‌த‌ற்கு வெட்க‌ப்ப‌டாதீர்க‌ள். நானும் கூட‌ என்னை போர்க்க‌ட‌வுளான‌ துட்ட‌கெமுனுவின் ம‌றுபிற‌வியாக‌க் கூறிக்கொள்வ‌தில்லையா என்ன‌. மார்க்சிசுட்டுக‌ள் கூட‌ க‌ட‌வுள்க‌ளாக இருக்க‌‌லாமே; இதை நாம் ந‌வீன‌ கால‌ வ‌ர‌லாற்றில் இருந்து தெரிந்துகொள்ள‌வேண்டும். ஆனால் உங்கள் மார்க்சிச‌ம் எனக்கு தலைகால் புரியவில்லை, அந்த வானவில்லில் நீங்கள் எந்த நிறத்தில் இருக்கிறீர்கள்? மஞ்சளா, ஊதாவா? க‌ண்டிப்பாக‌ நீங்க‌ள் சிக‌ப்பு நிற‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் கிடையாது என்றே நினைக்கிறேன்.

இராம்: நான் க‌ண்டிப்பாக‌ இந்த‌ உண்மையை ஒப்புக்கொள்ள‌ வேண்டும் அதிப‌ர் அவ‌ர்க‌ளே. என‌து ஆன்மாவிற்குள் என்னுடைய வ‌ர்த்த‌க‌ இலாப‌த்திற்கும் மார்க்சியத்தின் பாலுள்ள அறிவுபூர்வமான கவர்ச்சிக்கும் இடையே மிக‌ப்பெரிய‌ ச‌ண்டை போர் வ‌ருகின்ற‌து. ஒரு அற்ப முன்னாள் சோச‌லிச‌வாதியான‌ உங்க‌ளால் இதெல்லாம் புரிந்து கொள்ள‌முடியாது !.

இராச‌ப‌க்சே: என்னால் ச‌ரியாக‌ புரிந்துகொள்ள‌ முடிகின்ற‌து இராம். உங்க‌ள‌து ஆன்மா இலாப‌த்திற்கும் மார்க்சியத்துக்கும் இடையில் முரண்படும் போது, உங்க‌ளிட‌ம் உள்ள‌ பிராமணன் அந்த இர‌ண்டு பக்கங்களிடமும் எவ்வ‌ள‌வு இலாப‌ம் பார்க்க‌முடியுமோ என்பதை கவனமாக கணித்து அதை பெறும் வேலையை செய்துகொண்டிருக்கின்ற‌து.

இராம்: நீங்க‌ள் ஒரு சாதிய‌வாதீ அதிப‌ர் அவ‌ர்க‌ளே. ஒரு ந‌ல்ல‌ பௌத்தரான‌ நீங்க‌ள் இதுபோல‌ல்லாம் பேச‌க்கூடாது. அது ஒரு ச‌ரியான‌ சோச‌லிச‌மோ, மார்க்சிய‌மோ அ‌ல்ல‌ !

இராச‌ப‌க்சே: இப்பொழுது நீங்க‌ள் கூற‌வ‌ருவ‌தை நான் ச‌ரியாக‌ புரிந்துகொண்டேன் இராம். இது போன்ற‌ குழப்பங்களிலிருந்து நீங்க‌ள் வெளியேவ‌ர‌ வேண்டும். நீ ஒரு சாண‌க்கிய‌னைப் போல‌ ந‌ட‌ந்தால், பேசினால். நீ ஒரு சாண‌க்கிய‌ன்! உங்கள் முதுமையை இப்போது நான் கணிக்கிறேன். உங்கள் ப‌த்திரிகைப் பேர‌ர‌சை இளைஞ‌ர்க‌ளிட‌ம் கொடுப்பதற்கு மறுப்பது, உங்கள் நண்பர்களை பாதிக்கக்கூடிய செய்திகளை வெளியிடாமல் மூடி மறைப்பது அதே நேரம் ஊடக நேர்மைக்கு வகுப்பெடுக்கும் ஒரு ‘மடமாக’ உங்களை நிலை நிறுத்திக்கொள்வது.

இராம்: நீங்க‌ள் எத்த‌னை கால‌ம் உங்க‌ள் பௌத்த‌ நாட்டிற்கு அதிபராக‌ இருக்கின்றீர்க‌ளோ, அதுவ‌ரை நானும் என‌து ப‌த்திரிகைக்கு ஆசிரியராக‌ இருக்க‌ விரும்புகின்றேன். இந்த ஒரு சின்ன‌ இல‌ட்சிய‌த்தைத் தான் நான் கொண்டுள்ளேன். இது எல்லாம் உங்க‌ள‌து ஆசிர்வாத‌மும், வாழ்த்துக‌ளும் இருந்தால் தான் ந‌ட‌க்கும்.

இராச‌ப‌க்சே: இனிய‌ இர‌வு இராம், உங்களின் மேம்படுத்தப்பட்ட‌ விவரணத்தை (Updated Curriculam Vitae) நான் குறிப்பிட்ட‌ அந்த‌ விபிசன விருதிற்காக‌ அனுப்ப‌ ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள்.

இராம்: இனிய‌ இர‌வு அதிப‌ர் அவ‌ர்க‌ளே. உங்க‌ள‌து கெட்ட‌ க‌ன‌வுக‌ள் எப்பொழுதும் ப‌லிக்காம‌லே இருக்கவேண்டும்.

முற்றும்…..

நன்றி
வினவு இணையம்

இந்த புனைவை எழுதிய ச‌த்ய‌ சாக‌ர் ஒரு எழுத்தாள‌ர், இய‌க்குந‌ர். இவ‌ர் தில்லியில் வ‌சித்துவ‌ருகின்றார். இவ‌ரை நீங்க‌ள் sagarnama@gmail.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வரியில் தொட‌ர்பு கொள்ள‌லாம் ்
World newsSports

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக