அமெரிக்க வல்லரசு தன் கொலைகளுடன் ஒப்பிட்டு அமைதி காக்காமலும் பெரிய நாடான இந்தயாவின் சிறுபான்மை அரசின் வலியுறுத்தலுக்கு இரையாகாமலும் பேரினப் படுகொலை செய்த போர்க்கொலையாளி இராசபக்வேவையும் உடன் வந்தவர்களையும் கைது செய்து வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மனித நேயம் மிகுந்த அமெரிக்கர்கள் தங்கள் நாட்டு அரசை வலியுறுத்தி ஆவன செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 20 Jan 2011 05:51:55 PM IST
Last Updated : 20 Jan 2011 05:55:25 PM IST
வாஷிங்டன், ஜன.20: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச மீது போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையை துவங்கவேண்டும் என்று அமெரிக்காவை, மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.இலங்கை அதிபர் திடீர் பயணம்: 10 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு ராஜபட்ச வந்துள்ள நேரத்தில் இந்த கோரிக்கையை அம்னஸ்டி எழுப்பியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.இலங்கை அதிபர் ராஜபட்சவின் திடீர் பயணம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அதிபரின் தனிப்பட்ட பயணம் என்று கொழும்புவிலுள்ள அதிபரின் அலுவலக தலைமை இயக்குநர் பண்டுல ஜெயசேகரா குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் வாஷிங்டனில் அம்னஸ்டி அமைப்பின்ர் ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குநர் சாம் ஜரிபி கூறியதாவது:இலங்கை பாதுகாப்புப் படை வீரர்களால் ஏராளமான மக்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல புலிகள் அமைப்பினரும் மனித உரிமையை மீறியுள்ளனர். அங்கு ஏராளமான அளவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்துள்ளன.எனவே அதிபர் ராஜபட்ச மீதான போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிடவேண்டும்.போர்க்குற்றங்களில் ஈடுபடும் நாடுகளிடம் விசாரணை நடத்துவதற்கும், அவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கும் சர்வதேச சட்டத்தின் கீழ் அமெரிக்கா உரிமை பெற்றுள்ளது. இதன்படி ராஜபட்ச மீதான விசாரணையைத் துவங்கவேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
ஆமா இதை நான் வலியுறுத்துகிறேன்.
By கோயில்ராஜ்
1/20/2011 6:39:00 PM
1/20/2011 6:39:00 PM
இந்த கொடிய கொலைகாரன் அமெரிக்காவிலேயே கைது செய்யப்பட்டு மரணதண்டனை வழங்கவேண்டும்,
By தஞ்சை ராஜு
1/20/2011 6:08:00 PM
1/20/2011 6:08:00 PM