தமிழரல்லாத வேறு யாரும் கைது செய்யப்பட்டால் உடனே இந்தியத்தூதரகம் தலையிட்டுத் தளையிட்டமையை (கைது செய்தமையை) விலக்கி விடுதலைக்கு வழி வகுக்கும். ஆனால் தமிழர் என்பதால் எப்படிப் போனால் என்ன ன்று உயி்ர் காக்கும் நடவடிக்கையைப் புறக்கணிக்கிறது. சிங்களக் கொடுமை பாரறிந்தது. மறித்து மறைத்து வைக்கப்பட்டவரோ பெண். எனவே, அவருக்கு எவ்வகையிலும் ஊறு நேராமல் காக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அவர்களே நேரடியாகத் தலையிடவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 21 Jan 2011 03:28:52 PM IST
Last Updated : 21 Jan 2011 07:16:36 PM IST

சென்னை, ஜன.21- பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழியை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. அவரை விடுதலை செய்ய பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் வைகோ கூறியிருப்பதாவது:பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பேத்தியும், தமிழ் அறிஞர் இறைக்குருவனாரின் மகளுமான கயல்விழி, ஜனவரி 19-ம் தேதி, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகின்ற கயல்விழி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்ப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களைச் சந்திப்பதற்காகவும், உரிய ஆவணங்களுடன், இலங்கைக்குச் சென்று இருந்தார். தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், இலங்கை ராணுவம் அவரைக் கைது செய்துள்ளது. தற்போது, அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.கயல்விழியின் உயிருக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சுகிறோம். எனவே, பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, கயல்விழியைப் பாதுகாப்பாகத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்


By thakshinamoorthi
1/21/2011 10:00:00 PM
1/21/2011 10:00:00 PM


By குசும்பன்
1/21/2011 9:55:00 PM
1/21/2011 9:55:00 PM


By Tamilan
1/21/2011 5:01:00 PM
1/21/2011 5:01:00 PM


By மனோகரன்
1/21/2011 4:46:00 PM
1/21/2011 4:46:00 PM


By தஞ்சை ராஜு
1/21/2011 4:41:00 PM
1/21/2011 4:41:00 PM


By kannan
1/21/2011 4:07:00 PM
1/21/2011 4:07:00 PM