வெள்ளி, 21 ஜனவரி, 2011

singhala looted : இலங்கை கடற்படை அட்டூழியம்: மீனவர்களிடம் மீன்கள் பறிமுதல்

இன்றைய நிலவரம் என நாளும் சிங்கள அட்டூழியங்கள் குறித்துச் செய்திகள் வந்தாலும அசையா உறுதி கொண்டது இந்தியம். தமிழர்களின் கொலை கொள்ளை குறித்து அதன் மனம் சலனம் அடையாது. நாம் பெற்ற பேறு அது! அதற்குத்தான் வால் பிடிக்கின்றன தமிழகக் கட்சிகள்! கச்சத் தீவைத்தாரை வார்த்த இந்தியா ,  தமிழின அழிப்பைப் பாராட்டி. இராமேசுவரத்தையும்  சிங்களத்திற்குப் பரிசாகக் கொடு்த்தாலும் கொடுக்கும். 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை கடற்படை அட்டூழியம்: மீனவர்களிடம் மீன்கள் பறிமுதல்

First Published : 21 Jan 2011 01:19:29 AM IST


ராமேசுவரம், ஜன. 20: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் இறால் மீன்களைப் பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர் என்று வியாழக்கிழமை மீனவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:ராமேசுவரத்தில் இருந்து ஜனவரி 19-ம் தேதி சுமார் 400 விசைப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் இந்தியா, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது 4 போர் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டி அனுப்பினர்.பின்னர் தங்கச்சிமடம் செல்வம், ரமேஷ் ஆகியோருக்குச் சொந்தமான விசைப் படகுகளைப் பிடித்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த விலை உயர்ந்தஇறால் மீன்களைப் பறித்துக் கொண்டனர். பின்னர் மீனவர்களிடம் இனிமேல் இந்தப் பகுதியில் மீன் பிடிக்க வரக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பலத்த நஷ்டத்துடன் மீனவர்கள் கரையை நோக்கித் திரும்பினர் என அந்த மீனவர்கள் வேதனையுடன் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக