முப்படைத் தலைவர்களும் மாறி மாறிச் சென்று சிஙகளத்திடம் அடிபணிவதுதான் இந்திய இறையாண்மையா? தமிழர்களைக் கொன்றொழிப்பதுதான் சிங்கள இறையாண்மையா? இவ்வாண்டில் இரண்டிற்கும் முடிவு ஏற்படட்டும்! மனித நேயம் மலரட்டும்! உண்மையான மக்களாட்சி இந்தியாவிலும் இலங்கையிலும் ஏற்படட்டும்! தமிழ் ஈழத் தனியரசு உலகோரால் ஏற்கப்படட்டும்! தமிழ்ஈழக் கொடிகள் பன்னாட்டு அவைகளில் பறக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு,ஜன.16: இந்திய விமானப் படையின் தலைமை தளபதி பி.வி. நாயக் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அவர் கொழும்பு சென்றார். இலங்கை விமானப்படை தலைமை தளபதி ரோஷன் குணதிலக அவரை வரவேற்றார். இலங்கையில் உள்ள முப்படைத் தளபதிகளுடனும் மூத்த ராணுவ அதிகாரிகளுடனும் பி.வி. நாயக் ஆலோசனைகள் நடத்துவார். அதிபர் மகிந்த ராஜபட்ச, அவருடைய சகோதரரும் ராணுவ அமைச்சருமான கோதபய ராஜபட்ச ஆகியோரையும் அவர் சந்திப்பார். பி.வி. நாயக் என்ன காரணத்துக்காக இந்தப் பயணம் மேற்கொண்டிருக்கிறார், 4 நாள்களுக்கு அவருக்கு அங்கு என்ன வேலை என்ற விவரங்கள் தெரியவில்லை.
கருத்துகள்
People who do not have ability(or do not want) to protect its own fishermen against srilanka probably has gone to advise them and ask them if they need more help.
By Karthik
1/17/2011 9:36:00 AM
1/17/2011 9:36:00 AM
நான் அனுப்பிய செய்தியை படியுங்கள். சீன உளவுத்துறை பதினெட்டு மைல் தூரத்திற்கு அப்பால் அனலை தீவில் உள்ளார்கள். அனலை தீவில் வாழ்ந்த பூர்வகுடி தமிசர்கள் அனைவரும் கட்டாயமாக அப்புரப்படுதுகின்ரர்கள்.
By esan
1/17/2011 6:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
1/17/2011 6:33:00 AM