சனி, 22 ஜனவரி, 2011

Fine for students who extended pongal leave:பொங்கலுக்கு மேலும் ஒருநாள் விடுப்பு எடுத்த மாணவிகளுக்கு அபராதம்: இந்து முன்னணி கண்டனம்

உடனடியாகக் கல்லூரிக்குப் பெருமளவு தண்டத் தொகை விதித்தும் அதன் சலுகைகளை நிறுத்தியும் நடிவடிக்கை எடுக்க வேண்டும். போக்கி நாளுக்கு விடுமுறை விடப்படுவது நிறுத்தப்பட்டதால் அதனையும் சேர்த்துப் பொங்கல் திருநாளுக்கு 1 வார விடுமுறை அளிக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
பொங்கலுக்கு மேலும் ஒருநாள் விடுப்பு எடுத்த மாணவிகளுக்கு அபராதம்: இந்து முன்னணி கண்டனம்


சென்னை, ஜன.21- திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் பொங்கல் பண்டிகைக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை எடுத்த மாணவிகள் 500 பேருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதன் மாநில அமைப்பாளர் நா. முருகானந்தம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் பொங்கல் பண்டிகைக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை எடுத்த மாணவிகள் 500 பேருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிக்கு உள்ளே அனுமதிக்காமல் மன உளைச்சலும் கொடுத்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜனவரி 24ஆம் தேதி பெற்றோருடன் வந்து மீண்டும் கல்லூரியில் சேர வேண்டும் என்று கூறியதுடன், விடுதி மாணவிகள் 50 பேரையும் வெளியேற்றி, அம்மாணவிகள் பெற்றோருடன் வந்து சந்திக்கும்படியும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஒரு நாள் விடுமுறை எடுத்த மாணவிகளை வகுப்புக்குச் செல்லவிடாமல், ஒருநாள் முழுவதும் அலையவிட்டதுடன் அடுத்த ஒரு வாரம் வகுப்பிற்கு வருவதற்கும் அனுமதிக்காமல் தண்டித்துள்ள கல்லூரி நிர்வாகத்தின் போக்கு விசித்திரமானது. கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது இது முதல்முறையில்லை. பூ, பொட்டு வைப்பவர்களைத் தண்டிப்பதும், சபரிமலைக்கு மாலை போடும் மாணவர்களைக் கேலி செய்வதும், பள்ளி, கல்லூரிகளில் அனுமதி மறுப்பதும் தொடர்ந்து நடந்து வருவதை எதிர்த்து இந்து முன்னணி போராடி வருகிறது.திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி செய்துள்ளதை மனிதாபிமானம் உள்ள எவரும் சகித்துக் கொள்ளமாட்டார்கள். கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் இந்துப் பண்டிகைகளை எந்த அளவு உதாசீனமாக எண்ணுகிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. பொங்கல், தமிழர்களின் வாழ்வில் இணைந்த பண்டிகை. இந்நிலையில் விடுமுறைக்கு கூடுதலாக ஒரு நாள் விடுப்பு எடுத்ததற்கு மனதளவில் பாதிக்கும் அளவுக்கு மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது கண்டிக்கத்தக்கது.இதுபோல மதக் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தைக் கல்வித் துறை உடன் ரத்து செய்து, அரசே அக்கல்லூரிகளை எடுத்து நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.மாணவிகளின் மனதிற்கும், கௌரவத்திற்கும் ஊறு விளைவித்த கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் நா. முருகானந்தம் கூறியுள்ளார்.
கருத்துகள்

அவங்க தப்பு பண்ணீட்டாங்க. தமிழ் புத்தாண்டுக்கு (அப்படின்னு சொல்லி) லீவு எடுத்து இருந்தா கலைஞர் அரசாங்கமே அவங்களுக்கு லீவு கொடுத்து ஊக்கத்தொகையும் கொடுத்து இருப்பாங்க
By கிங் விஸ்வா
1/21/2011 10:15:00 PM
பொங்கல் தமிழர்களின் திருநாள். இதனை கிருஸ்துவர்கள் எதிர்கிறார்கள். ஆகையால் இவர்கள் தமிழர்கள் அல்ல என்பது தெளிவாகிறது.தமிழ் நாட்டில் முதல்வரும் பிற அரசியல் தலைவர்களும் தமிழர்களுக்குத்தான் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். கிருஷ்த்துவர்களும் முஸ்லீம்களும் பொங்கல் திருநாளை கொண்டாடுவதில்லை. இவர்களை எப்படி தமிழர்கள் என்று கூற முடியும்.
By மு.நாட்ராயன்
1/21/2011 8:13:00 PM
இதைசற்று மாற்றி யோசித்துப்பாருங்கள்.ஒரு ஹிந்து கல்விசாலையில் ,ஒரு கிருஸ்தவ மாணவியோ அல்லது ஒரு முஸ்லிம் மாணவியோ துன்புருத்தப்பட்டிருந்தால் ,ஒரு கட்சி விடாமல் அனைத்து கட்சிகளும் அவர்களுக்காக போராட்டத்தில் இறங்கியிருப்பார்கள் .ஆனால் ஹிந்து மாணவ, மானவிகலேன்றால் நாதியற்றவர்கள்.ஹிந்துக்களுக்கு மதப்பற்று வரும்வரை இப்படித்தான் ஏமாற்றப்படுவார்கள்.
By ரமேஷ்
1/21/2011 6:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக