சட்ட மன்றத் தேர்தல் வரை குண்டு வீச வேண்டா எனச் சொன்னதால் குப்பிகளை வீசுகிறார்கள் போலும். அவை வெறும் குப்பிகளா? அல்லது அமிலக் குப்பிகளா?
தமிழர்கள் உயிர்பற்றிக் கவலைப்படாமல் சிங்கள இறையாண்மை பற்றிக் கவலைப்படும் இந்திய மேலாண்மை இருக்கும வரை இந் நிலை தொடரும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர்கள் உயிர்பற்றிக் கவலைப்படாமல் சிங்கள இறையாண்மை பற்றிக் கவலைப்படும் இந்திய மேலாண்மை இருக்கும வரை இந் நிலை தொடரும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஆறுகாட்டுத் துறை மீனவர்கள் 12 பேர் 3 கண்ணாடி இழைப்படகுகளில் சென்று கோடியக்கரைக்கு தென்கிழக்குப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை நோக்கி மதுபாட்டில்களை வீசினர். மீனவர்கள் படகுக்குள் மறைந்துகொண்டதால் அவர்கள் மீது பாட்டில்கள் விழவில்லை. ஒரு படகில் இருந்த வலைகள் சேதமடைந்தன.இந்த தாக்குதலையடுத்து மீன் எதுவும் பிடிக்காமல் மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பினர். இதுகுறித்து யாரிடமும் புகார் எதுவும் அளிக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்


By dinesh
1/19/2011 4:18:00 PM
1/19/2011 4:18:00 PM