இராகுல் மீது கொஞ்ச நஞ்சம் மதிப்பு வைத்துள்ளவர்களும் அதை மாற்றிக் கொள்ளும் வகையில் பொய் மூட்டையை அவிழ்க்கிறாரே! இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து இவரும் சோனியா காந்தியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டனம் தெரிவித்துள்ளார்கள் எனில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் படுகொலைகளை முடிக்கவில்லை என்பதற்காகத்தானே! படை வீரர்களையும் படுகொலை புரிய நாசகாரக் கருவிகளையும் வெடிகுண்டுகளையும் படை ஊர்திகளையும் படைக்கலன்களையும் தந்ததுடன் உலகே சிஙக்ளத்திற்கு எதிராகத் திரும்புகையில் சிங்களத்தூதுவராக உலகெங்கும் அலைவானேன். எப்படியோ வேறு வழியின்றி இலங்கையில் நடைபெறுவதைப் படுகொலை என்று ஒத்துக் கொண்டாரே! சிங்களர்களும் ஆரியர்களும மலையாளிகளும் சினம் கொள்ளப் போகிறார்கள்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ராகுல் காந்தி
First Published : 23 Dec 2010 03:50:13 AM IST
சென்னை, டிச.22: இலங்கை அரசு தமிழர்களை நடத்தும் விதம் திருப்தியளிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழகத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி புதன்கிழமை வந்தார். சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள், காந்தியவாதிகள், பத்திரிகையாளர்கள், விவசாயிகள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பினருடன் சென்னையில் புதன்கிழமை அவர் கலந்துரையாடினார். ஆனால், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் ஹோட்டலுக்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 11.55 மணி முதல் 12.55 வரை ஒரு மணி நேரம் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ஒரு பிரிவினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகளும் சரியாக நடைபெறவில்லை என்றும் ராகுலிடம் கூறப்பட்டுள்ளது. இதற்கு அவர்களிடம் ராகுல் காந்தி அளித்த பதில்: ÷ இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து நானும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டனம் தெரிவித்துள்ளோம். போரின் போது அங்குள்ள நிலையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தொடர்ந்து கண்காணித்து வந்தார். இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதம் எங்களுக்கும் திருப்தியளிக்கவில்லை. இதுதொடர்பாக, இலங்கை அரசிடமே தெரிவித்துள்ளோம். இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று அந்த நாட்டு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இலங்கை தனி நாடு என்பதால் இதில் நமக்கும் ஓர் எல்லை உண்டு. தமிழர்களுக்கு 80 ஆயிரம் வீடுகள் கட்டித் தர ரூ.2,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளையும் இந்திய அரசு அங்கு மேற்கொண்டு வருகிறது. இலங்கைத் தமிழர் விஷயத்தில் தனி அக்கறை செலுத்துவேன். தில்லி சென்றதும் பிரதமர் மன்மோகன்சிங்கின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று, தமிழர்களுக்கு உரிய நியாயம்கிடைக்க நடவடிக்கைகளை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் ராகுல். அரசே மது விற்பதை விரும்பவில்லை மதுவினால் ஏற்படும் தீமைகள் அதிகமாக உள்ளதால் அதை சுகாதாரப் பிரச்னையாக பார்க்க வேண்டும் என்றும், மதுவிலக்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மூலம் அரசே மதுவை விற்பனை செய்வது குறித்தும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளித்த ராகுல், எனக்கு குடிப்பழக்கம் இல்லை. இது தனிமனித ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் மற்றவர்கள் குடிக்கக் கூடாது என்று வலியுறுத்த முடியாது. ஆனால், அரசே மது விற்பதை நான் விரும்பவில்லை. மதுவிலக்கு தொடர்பாக தேசிய அளவில் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் மூலம் ஏழைகள், நகரங்களை விட்டு அப்புறப்படுத்துவது தொடர்பாகவும் ராகுலின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அதேபோல், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை தொடரக் கூடாது என்றும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புதிய காப்புரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும், திருட்டு வி.சி.டி., டி.வி.டி.களைத் தடுக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அவர் தில்லிக்கு வந்து தன்னை நேரில் சந்திக்குமாறு கூறியுள்ளார். பான்யன் அமைப்பின் நிறுவனர் வந்தனா, பரத நாட்டியக் கலைஞர் ஷோபனா ரமேஷ், சுற்றுச்சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன், சமூக ஆர்வலர் நாராயணன், தக்கர் பாபா வித்யாலய சமிதியின் இணைச் செயலாளர் ஏ.அண்ணாமலை, பத்திரிகையாளர்கள் டி.என்.கோபாலன், ஞானி, நடிகர்கள் நாசர், ஜெயம் ரவி, நடிகைகள் ரேவதி, ரோகிணி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். நேர்மையானவர்கள் அரசியலுக்கு வாருங்கள் சமூக அக்கறை உள்ளவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கு காங்கிரஸின் கதவுகள் திறந்தே உள்ளன என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர், சிந்தனையாளர்கள், திரைப்படத் துறையினரிடம் சென்னையில் புதன்கிழமை அவர் பேசியது: சமூகநலனில் அக்கறை கொண்டவர்கள் அரசியலுக்கு வராத காரணத்தாலேயே, தவறானவர்கள் கைகளில் அதிகாரம் செல்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு நேர்மையானவர்கள் வரவேண்டும் என்ற நோக்கத்திலேயே இளைஞர் காங்கிரஸýக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் ஜனநாயக நடைமுறைகளை உறுதிப்படுத்தியுள்ளேன். ஆனாலும், தவறானவர்கள் அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை என்றார் ராகுல் காந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக