வியாழன், 23 டிசம்பர், 2010

gase against the g.o. of employment priority to tamil students : தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: அரசு உத்தரவை எதிர்த்து வழக்கு

இவ்வாறு வழக்கு  தொடுப்பவர்களுக்குக்கடுந்தண்டனை விதிக்க வேண்டும். ஆங்கிலத்தை விரும்புபவர்கள் ஆங்கில நாட்டிற்குச் செல்லலாம். தமிழ்  வழி படித்தவர்கள் ௮௦ விழுக்காடு   முன்னுரிமை கோரி வழக்கு தொடுக்க வேண்டும். அப்பொழுததான் நீதி கிடைக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: அரசு உத்தரவை எதிர்த்து வழக்கு

First Published : 23 Dec 2010 01:05:50 AM IST


சென்னை, டிச. 22: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணி நியமனங்களில் 20 சதவீத முன்னுரிமை அளிக்கும் அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மணலியைச் சேர்ந்த எம்.ஆர். விஜயலட்சுமி என்பவர், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மூலம் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:  நான் பி.ஏ., எம்.ஏ., பி.எட்., ஆகிய படிப்புகளை ஆங்கில வழியில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழ் வழியில் படித்து வந்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு, 30.9.10-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.  அரசின் இந்த உத்தரவு சட்ட விரோதமானது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் ஆங்கில வழி வகுப்புகள் அதிகமாக உள்ளன. ஆங்கில வழிப் பள்ளிகள், கல்லூரிகள் அதிகரித்ததற்கு அரசுதான் காரணம். அப்படியிருக்கும் போது, அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதென்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 16 ஆகியவற்றுக்கு எதிரானது. அரசின் உத்தரவால் என்னைப் போல் ஆங்கில வழியில் படித்த பலர் பாதிக்கப்படுவார்கள். எனவே, அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.  இந்த வழக்கு நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பான அந்த சட்டத்தை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியிடம் கூறி, வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக