வியாழன், 23 டிசம்பர், 2010

raghul about politics : சமூக அக்கறையுள்ளவர்கள் அரசியலுக்கு வராவிட்டால் மோசமானவர்கள் தொடர்வார்கள்: இராகுல்

சமூக அக்கறை உள்ளவர்கள் வராததால்தான் தானும் தன் தாயும் தங்கள் கூட்டமும் அரசியலில்  இருந்து ஆட்டிப் படைப்பதாக உண்மையைக் கூறியுள்ளமைக்கு நன்றி.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சமூக அக்கறையுள்ளவர்கள் அரசியலுக்கு வராவிட்டால் மோசமானவர்கள் தொடர்வார்கள்: ராகுல்

First Published : 22 Dec 2010 03:03:23 PM IST


சென்னை, டிச.22, சமூக அக்கறையுள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்; இல்லாவிட்டால் மோசமானவர்கள் அரசியலில் இருப்பதைத் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.தமிழகத்தில் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை நடந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பின்னர் மெரீடியன் ஹோட்டலில் நடந்த அறிவுஜீவிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "சமூக அக்கறையுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், இல்லாவிட்டால் மோசமானவர்கள் அரசியலில் தொடர்ந்து இருப்பதைத் தடுக்க முடியாது" என்றார். நல்லவர்கள் அரசியலில் ஈடுபடாவிட்டால் இந்தியாவை வல்லரசாக்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகிவிடும் என்றும் அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவர் விழுப்புரம் புறப்பட்டுச் சென்றார்.
கருத்துகள்

யோக்கியர் சொல்லி விட்டார். செம்பினை எடுத்து உள்ளே வையுங்கள்.
By ரவி
12/22/2010 10:07:00 PM
FIRST YOU QUIT THE POLITICS THEN OTHERS FOLLOW YOU
By ramasamy
12/22/2010 9:24:00 PM
அருமையான கருத்து. ராகுல் has a bright future
By அபிஷ்டு
12/22/2010 8:58:00 PM
இந்த இரண்டில் நீங்கள் எந்த ரகம்? உங்கள் குடும்பம் எந்த ரகம்? உங்கள் சின்னம்மா பெரியம்மா என்ன ரகம்? (1 .76 லட்சம் கொடிகளின் பங்காளர்கள்)
By ராஜேஷ்
12/22/2010 7:53:00 PM
மிஸ்டர் ராகுல் கெட்டவுங்க யார் யாருன்னு நீங்களே சொல்லீருங்க அவங்களையெல்லாம் ஜெயிலில் போட்டுடுவோம்
By ramesh
12/22/2010 5:57:00 PM
மிஸ்டர் ராகுல் உங்க அம்மாவிடம் சொல்லி பிரைம் மினிஸ்டர் ஐ பேச சொல்லுக. மனுஷன் வாய திறக்க மாட்டேன்கிராறு.ஒன் ஜி டூ ஜி அப்படியே பத்து ஜி வரை சொல்லி கொடுக்கவும்
By ramesh
12/22/2010 5:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக