அப்படி என்றால் அதற்குக் காரணமான கருணாவைப் பிடித்துத் தூக்கிலிடுங்கள். தமிழர்கள், சிங்களர்கள் இரு தரப்பாரின் உள்ளங்களும் குளிரும். வஞ்சகனுக்குக் கிடைக்கும் தண்டனையால் நீதித் தேவதை மனம் மகிழ்வாள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 22 Dec 2010 03:30:35 PM IST
Last Updated : 22 Dec 2010 03:34:50 PM IST
கொழும்பு, டிச.22- விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 போலீஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அந்த அமைப்பின் முன்னாள் தளபதியும் தற்போதைய அமைச்சருமான கருணாதான் காரணம் என்று இலங்கை காவல்துறை அதிகாரி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.1990-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என்றும், அச்சம்பவத்துக்கு புலிகள் தலைவர் பிரபாகரனும் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்தான் காரணம் என்றும் கருணா கூறியிருந்தார். ஆனால், அதற்கு கருணாதான் முழுப் பொறுப்பு என்று பொத்துவில் மஹாகலுகொல்ல காவல் நிலையத்தின் அப்போதைய பொறுப்பு அதிகாரியாக இருந்த அஜித் தர்மபால என்பவர் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."அம்பாறை பஸ் நிலையத்திற்கு, விடுதலைப் புலிகளால் நிராயுதபாணியாக 600 போலீஸார் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா என்னுடன் தொடர்புகொண்டு பேசினார். ஆனால், போலீஸார் அனைவரும் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு கருணாதான் உத்தரவிட்டுள்ளார். இதற்கு போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன." என்று அஜித் தர்மபால கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக