சனி, 25 டிசம்பர், 2010

seminar on save thamizh from grandha unicode : யுனிகோட் தமிழைக் காக்க டிசம்பரில் கருத்தரங்கம்

யுனிகோட்  தமிழைக் காக்க டிசம்பரில் 

கருத்தரங்கம்


Vote this article
Up (0)
Down (0)
சென்னை: தமிழ் யுனிகோட் எழுத்துருவில் தமிழையும், கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழைக் கெடுக்க நடக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி டிசம்பர் மாதம் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கணிணி மூலமாக ஒருங்குறியில் தமிழையும் கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழுக்குக் கேடு விளைவிக்க மேற்கொண்டு வரும் சிலரின் முயற்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் பொருட்டுத் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழுவிற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் தமிழ்க்காப்பு அமைப்புகள் திசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தமிழ்க்காப்பு அரங்கம் நிகழ உள்ளது.

இதில் பங்கேற்க ஒருங்குறியில் தமிழ்க்காப்பு என்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் நவம்பர் 25 ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே

thamizhkkaappu@gmail.com என்ற மின்முகவரிக்குத் தங்கள் பெயர், முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். நாளும் இடமும் முடிவான பின்னர்த் தெரிவிக்கப்பெறும்.

தொடர்பிற்கான பேசி எண்கள்:

98844 81652 (இலக்குவனார் திருவள்ளுவன்)
94452 37754 (அன்றில் பா.இறையெழிலன்) என்று அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்தவர்: Aravamuthan
பதிவு செய்தது: 14 Nov 2010 8:11 am
ஆங்கில அறிஞர்கள் கண்டிப்பாக உதைக்க வரமாட்டார்கள். ழ என்பதை zha என்று எழுதுவது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முறை. தமிழ் சொற்களை துல்லியமாக உச்சரிக்க, ஆங்கிலத்தில் transliteration வழிமுறை 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது என்பதை தமிழ் பற்றிய ஆங்கில நூல்களைப்படித்து அறிந்துகொள்ளுங்கள். அதற்கு மாறாக, ga, dha, za, fa என்பவற்றை தமிழ் எழுத்து மூலமாகவோ, கூடுதல் குறியீடுகள் மூலமாகவோ தெரிவிக்கும் முறை இங்கு இல்லை. எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டால், திரு ரமண சர்மாவின் முயற்சி நன்மை தரும்.


பதிவு செய்தவர்: இராமசாமி
பதிவு செய்தது: 13 Nov 2010 9:51 pm
தமிழில் உள்ள ‘ழ’ எனும் எழுத்தினை ஆங்கிலத்தில் எழுதவேண்டி 27ஆவது எழுத்தாக ஒரு எழுத்தை சேர்க்க வேண்டும் என்றால் ஒப்புக் கொள்வார்களா ஆங்கில அறிஞர்கள்? உதைக்க வர மாட்டார்கள்? அது போலத்தான் (உண்மையான) தமிழர்களும் இந்த கிரந்த எழுத்து திணிப்பினை ஏற்க மாட்டார்கள்.

[ கருத்தை எழுதுங்கள் ]

பதிவு செய்தவர்: sgk
பதிவு செய்தது: 13 Nov 2010 8:01 am
குறுகிய மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டுகிறோம். உலகத்தில் உள்ள இடங்களின் பெயர்கள், கண்டுபிடிப்புகள், பொருட்களின் பெயர்கள், ஏன், முஸ்லிம் கிருத்துவ நண்பர்களின் பெயர்களையும் சரியாக எழுதுவதற்கு தொல்காப்பியரின் எழுத்துகள் போதாது. இலக்கியத் தமிழுக்கு இவை வேண்டாம்தான். ஆனால், நடைமுறைத் தமிழுக்கு முன்னேற்றம் கருதி இவை தேவையாகும். மற்ற திராவிட மொழிகளில் இவை உண்டு. செல்பேசி வேண்டும், பற்பசை வேண்டும், கார் வேண்டும்,.. நவீன வாழ்க்கைக்கு, உலகத்துடன் ஒத்து வாழ புதிய எழுத்துகளும் தேவைதாம்.


பதிவு செய்தவர்: காதிர்
பதிவு செய்தது: 13 Nov 2010 2:58 am
தமிழகம் விரைந்து செயல் பட வேண்டிய நேரம்.


பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 13 Nov 2010 2:49 am
முதலில் தமிழ் நாட்டில் ஒழுங்காக தமிழைப்பேசுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக