இத்திட்டச் செயற்பாடு முடிவுறும் நிலையில் அமைச்சரின் அறிக்கை வந்துள்ளது. பொருட்கள் வாங்க செல்லும்போது நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் 2011- ஆம் ஆண்டுக்குப் பொருள் வழங்க இலவசமாக உள்தாள் ஒட்டி வழங்குவார்கள் என அமைச்சர் அறிவித்துள்ள முறை சரியானது. ஆனால், இந்த வாரம் முழுவதும் உள்தாள் வழங்குவதையே பணியாகக் கொண்டு யாருக்கும் உணவுப் பொருள்கள் வழங்கவில்லை. பொருள் வழங்கும் பொழுது தாள் வழங்கும் எளிய முறையைப் பின்பற்றாமல் இதனை மட்டுமே பணியாகக் கொண்டு நெடும் வரிசைகள் கடைகள் முன் உள்ளவற்றைக் காணாலாம. திட்டமிட்டுச் செயற்படுத்தாமையால் தேவையற்ற அலைச்சலும் பணிச்சுமையும் மக்களுக்கும் பணியாளர்களுக்கும். காலக் கெடு இல்லாமல் அவரவர் பொருள்களை வாங்க வருமபொழுது உள்தாளைக் கொடுக்க நடவடிக்கை எடுக்கட்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, டிச.23: தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் 2010-ம் ஆண்டுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க ஏதுவாக அனைத்து குடும்ப அட்டைகளிலும் உள்தாள் இணைத்து வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகள் அனைத்தும் 2010-ம் ஆண்டு வரை அத்தியாவசியப் பொருட்கள் வழங்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க ஏதுவாக அனைத்து குடும்ப அட்டைகளிலும் உள்தாள் இணைத்து வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செல்லும்போது நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் 2011-ம் ஆண்டுக்கு பொருள் வழங்க இலவசமாக உள்தாள் ஒட்டி வழங்குவார்கள்.குடும்ப அட்டைக்கு உள்தாள் இணைப்பதற்கு சுழற்சி முறையை பின்பற்றப்பட மாட்டாது. அவ்வாறு உள்தாள் ஒட்டும் போது உள்தாள் இணைக்கும் பதிவேட்டில் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் / வயது வந்த குடும்ப உறுப்பினர் கையொப்பம் / விரல் ரேகை பெற்றுக் கொள்ளப்படும்.உடல்நல குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக நியாயவிலை அங்காடிக்கு உள்தாள் இணைக்க நேரில் வர முடியாத நிலையில் உள்ள குடும்ப அட்டைதாரர் குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவரிடம் குடும்ப அட்டையை கொடுத்து அனுப்பினாலும் அனுமதி கடிதம் இல்லாமலேயே கொண்டு வரும் நபரிடம் உள்தாள் வழங்கும் பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு அந்த குடும்ப அட்டையில் உள்தாள் இணைத்து வழங்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக