வெள்ளி, 24 டிசம்பர், 2010

periyar: விடுவிக்கப்படுவாரா பெரியார்?

விடுவிக்கப்படுவாரா பெரியார்?

First Published : 24 Dec 2010 03:19:41 AM IST


பெரியாருக்குச் சொந்தமான இடம் விற்பனை தொடர்பான கிரயப் பத்திரம். திருச்சி பெரியார் மாளிகையில் பராமரிப்பின்றிக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் பெரியார் பய
திருச்சி, டிச. 23: திருச்சியின் மையப் பகுதியான புத்தூரிலுள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறது அந்த வேன். உண்மையில் அது ஒரு வரலாறு. தந்தை பெரியாருடைய வரலாற்றின் ஓர் அங்கம்.  அந்த நாள் 19.08.1973. தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பெரியாருக்காக வாங்கிய வேனை அவருக்கு வழங்க அவருடைய தொண்டர்கள் எடுத்த விழா அது. விழாவில், பெரியாரிடத்தில் தங்கத்திலான வேன் சாவியை அளித்தார் முதல்வர் மு. கருணாநிதி. பெரியார் வேனிலிருந்து இறங்காமலேயே உரையாற்ற ஏதுவாக படுக்கை, கழிப்பறை வசதிகள் அந்த வேனில் செய்யப்பட்டிருந்தன. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல அந்த வேனுக்கு வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு. பெரியார் 19.12.1973}ல் சென்னை தியாகராய நகரில் தன்னுடைய கடைசி உரையை நிகழ்த்தியதும் உரையின் பாதியிலேயே வலியால் வாய்விட்டு அலறியதும் அதோடு மரணப் படுக்கைக்குச் சென்றதும் அந்த வேனிலிருந்துதான். வரலாறு இப்போது குப்பையாகக் கிடக்கிறது.  அதே திருச்சியின் சுந்தர் நகர்ப் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது "பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்' (சர்வீஸ் என்றால், சோஷியல் சர்வீஸ் அல்ல; வாகனங்களுக்கான வாட்டர் சர்வீஸ்). நகரில் அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.  பெரியாரின் சொத்துகள் இன்றைக்கு எப்படியெல்லாம் பாதுகாக்கப்படுகின்றன; எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இரு சின்ன உதாரணங்கள் இவை.  பெரியார் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர் எனினும் தன்னுடைய சொத்துகளைச் செலவிட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர் அல்லர்; மிக எளிமையான வாழ்க்கையை வரித்துக்கொண்டவர். பெரியாருக்கு வாரிசுகள் இல்லாதபோதும் அவர் சிக்கன வாழ்க்கை வாழ்ந்ததற்கும் சொத்துகளைப் பேணி பராமரித்ததற்கும் மூன்று காரணங்கள் உண்டு: 1. இந்தச் சொத்துகள் யாவும் தமிழ்ச் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும். 2. திராவிடர் கழகம், பொதுப்புத்தியை உடைக்கும் கருத்துகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல பொருளாதாரம் எந்தக் காலத்திலும் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. 3. இந்தச் சொத்துகளில் தொண்டர்களின் } பொதுமக்களின் நிதியும் இருக்கிறது. இந்தக் காரணங்களால்தான் பெரியார் தனது இயக்கத்தின் பெயரில் எல்லா சொத்துகளை வாங்கியதன் காரணம்.  ஆனால், இப்படியெல்லாம் பெரியார் பார்த்து பார்த்து சேர்த்த } பராமரித்த சொத்துகள் பலவும் விற்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இப்போது பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக, பெரியாருடைய எழுத்துகள் காப்புரிமை தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொடர்ந்த வழக்கில், ""சொத்துகளுக்கான உரிமை கோரும் ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் அவை பொதுச் சொத்துகளாக } மக்கள் சொத்துகளாகவே கருதப்படும்'' என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னர் இந்த விற்பனை முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகப் பெரியாருக்கு நெருக்கமாக இருந்த பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.  ""தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பேரூராட்சி, சின்ன கடைவீதியில் 1950}களில் பெரியாரால் வாங்கப்பட்ட இடம் (புல எண்: 183/1; பட்டா எண்: 53) இப்போது விற்கப்பட்டுவிட்டது. இதேபோல, திருச்சி மாவட்டம், இடையாற்றுமங்கலம், மேலவாளாடி; சென்னை, ஷெனாய் நகர்; ஏற்காடு எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரியாராலும் பெரியாரின் தொண்டர்களாலும் வாங்கப்பட்ட சொத்துகள் பலவும் இப்போது விற்கப்பட்டுவிட்டன அல்லது அவற்றை விற்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன'' என்கிறார் பெரியாரின் வழக்குரைஞரான எஸ். துரைசாமி.  ""தமிழகத்தில் சின்ன கிராமங்களில்கூட "பெரியார் படிப்பக'ங்கள் இருக்கும். பெரியார் மீது கொண்ட மதிப்பினால் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமான சொத்துகளை பெரியார் பெயரிலும் இயக்கத்தின் பெயரிலும் வாங்கினர். இந்தச் சொத்துகளில் பெரும் பகுதியானவை கை மாறிவிட்டன. எஞ்சியிருக்கும் பெரிய சொத்துகளும் முற்றிலும் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன'' என்று கூறும் துரைசாமி, பெரியார் "விடுதலை' பத்திரிகையை நடத்திய - சென்னையில் அவர் வாழ்ந்த } சிந்தாதிரிப்பேட்டை, மீரான் சாகிப் தெருவிலிருந்த கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, இப்போது "பெரியார் பிளாஸô' என்ற பெயரில் வணிக வளாகமாக மாற்றப்பட்டுவிட்டதையும் பெரியார் தன் இறுதிக் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்த திருச்சி "பெரியார் மாளிகை' பல்வேறு நிறுவனங்கள் இயங்கும் இடமாக மாறிவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.  இது ஒருபுறமிருக்க, ""பண மதிப்புக்கு அப்பாற்பட்ட - இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பயன்பட வேண்டிய - பல தலைமுறைகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டிய பெரியாரின் நினைவுகள் பொதிந்த அவருடைய சொத்துகள் - அவருடைய எழுத்துகள், உரைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன'' என்கிறார் பசு. கெüதமன்.  பெரியாருடைய எழுத்துகள், பேச்சுகள் சேகரிப்பாளர்களில் முக்கியமானவர் இவர். "ஈ.வெ. ராமசாமி என்கிற நான்' நூலின் தொகுப்பாசிரியரும்கூட.  ""திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி "விடுதலை' இதழில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் - விளம்பரங்களின்படி, பெரியார் நடத்திய "குடிஅரசு' மற்றும் "விடுதலை' இதழ்களின் பல ஆண்டு பிரதிகள் அவரிடத்தில் -  திராவிடர் கழகத்தினிடத்தில் இப்போது இல்லை; குறிப்பாக "குடிஅரசு' இதழின் 8 ஆண்டுத் தொகுப்புகள் (1925 - 28; 1946 } 48) இல்லை. பெரியாருடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகளின் ஒரு பெரும் பகுதி - இன்னும் அச்சேறாதவை - அவற்றின் கதி என்னவென்றே தெரியவில்லை.  பெரியாருடைய பேச்சுகள் அடங்கிய ஒலிப்பேழைகளில் பெரும் பகுதியானவை அழிந்துவிட்டன. மிகச் சொற்பமான பதிவுகள் மட்டுமே தற்போது திராவிடர் கழகத்தின் வசம் இருக்கின்றன. அவையும் அரசியல் சூழல்களுக்கேற்ப பயன்படுத்துவதற்கு வசதியாக, அவர்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.  பெரியார் அணிந்திருந்த மரகதக் கல் மோதிரம் இப்போது நடிகர் சத்யராஜிடம் இருக்கிறது; திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் அன்புப் பரிசாக!  பெரியார் தொடர்பான அனைத்துக்கும் உரிமை கோரும் வீரமணியின் பொறுப்பில் பெரியாரின் எழுத்துகள், உரைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் இப்படித்தான் பாதுகாக்கப்படுகின்றன'' என்கிறார் கெüதமன்.  இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்கிறார் பெரியாருடன் மிக நெருக்கமாக இருந்தவரும் பெரியாரியல் சிந்தனையாளருமான வே. ஆனைமுத்து. குறிப்பாக, ""பெரியாருடைய பேச்சுகளையும் எழுத்துகளையும் அரசு நாட்டுடைமையாக்க வேண்டும்'' என்று அவர் கோருகிறார்.  இன்று பெரியார் நினைவு நாள். தந்தை பெரியார் மறைந்து 37 ஆண்டுகளாகியும் இன்னும் பெரியாருடைய படைப்புகளையும், அவர் தொடர்பான சொத்துகளையும் அரசு ஏன் நாட்டுமையாக்கிப் பராமரிக்காமல் தவிர்க்கிறது என்கிற துரைசாமி, கெüதமன் போன்றோரின் கேள்விகளுக்கு, தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து உருவானவர் என்று அடிக்கொரு தரம் கூறிக் கொள்ளும் முதல்வர்தான் பதிலளிக்க வேண்டும்!
கருத்துகள்

பகுத்தறிவுன்ர பேர்ல, மக்கள மூடனாக்கி, பெரியார் சொத்தயும் நாட்டையும் கொள்ள அடிக்கிற திருட்டு கூட்டத்த, நாட்டைவிட்டு வெரட்டியடிக்க மக்கள் தயாரா இருக்காங்க.
By பெரியார்பித்தன்
12/24/2010 4:16:00 PM
வார்த்தைக்கு, வார்த்த தந்தை பெரியார் என்று சொன்ன அவரது தனயர்கள் எல்லாம், இப்ப எங்கே ஒழிந்து போனார்கள்? அப்ப..... நீங்க பண்றதெல்லாம் மாய்மாலம்தானா? அவர வச்சு வித்து ஒங்க வைத்த கழுவுரீங்களா? இப்படி அவர் பேர சொல்லி ஊர ஏமாத்தி பொழப்பு நடத்துரதேல்லாம் ஒரு பொழப்பா?
By Periyarnesan
12/24/2010 4:05:00 PM
The name of Periyar, his party's name and principles are now commercially being used by Mr. Veeramani etc. They actually not interested in awakening people or even their own partymen. Their "Paguththarivu" concept has become a joke and entertainment among our people. Karunanidhi himself not showing much interest in such issues. If any such pay attention on such issues that is seasonal.
By Parasuraman
12/24/2010 3:04:00 PM
இவர்கள் ஈரோட்டு பெரியாரின் வேனை மட்டும் குப்பைக்குள் போ டவில்லை .புதுசு புதுசாக பல கழகங்களை கட்சிகளாக ஆக்கி காசு பார்க்கும் காரியத்தில் அல்லவா பெரியாரை யூஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் /கருப்பு நிறத்தை வுடைகளில் மட்டும் காட்டட்டும் மனசை வெள்ளையாக்கி .இனியாவது பெரியார் பேரை கெடுக்காமல் இருந்தால் போதும். .
By பி.டி.முருகன்
12/24/2010 2:59:00 PM
இவர்கள் ஈரோட்டு பெரியாரின் வேனை மட்டும் குப்பைக்குள் போ டவில்லை .புதுசு புதுசாக பல கழகங்களை கட்சிகளாக ஆக்கி காசு பார்க்கும் காரியத்தில் அல்லவா பெரியாரை யூஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் /கருப்பு நிறத்தை வுடைகளில் மட்டும் காட்டட்டும் மனசை வெள்ளையாக்கி .இனியாவது பெரியார் பேரை கெடுக்காமல் இருந்தால் போதும். .
By பி.டி.முருகன் திருச்சி
12/24/2010 2:57:00 PM
கன்னடுதுகரன் பெரியாருக்கு இவ்வளவு மரியாதையை தேவையா? வீரமினியும் அந்த குள்ள பொம்பளையும் சேந்து கூத்து அடிக்கிற கொடுமை .. இதுக்கும் மேல திருடன் சொத்தை திருடரங்கோ
By இந்தியன்
12/24/2010 11:57:00 AM
கி வீரமணி என்ற கொடியர்தான் பெரியாரின் கொள்கையை சிதைத்தது . எல்லரோகும் ஜால்ரா அடிப்பவராக மாறி விட்டார். திராவிட கழகத்திற்கு கேட்ட நேரம் என்றால் அது கி வீரமணி என்ற ஜால்ரா தான். எனக்கு ஒரு அனுபவம் நான் BE முடித்து ME cse படிபதற்காக ஒரு நேர் காணலுக்காக தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரிக்கு சென்று இருந்தேன் ,அந்த பெரிய மனிதர் பிரின்சிபால் மற்றும் பல கருப்பு சட்டைக்கர்கள் இருந்தன . அவைகள் என்னிடம் வெட்க்கம் இல்லாமல் 2 லட்சம் கொடு, 1 லட்சம் கொடு என்று பேரம் பேசினார்கள். நான் உண்மையில் அடைந்த சோகதிருக்கு அளவே இல்லை.. உண்மையாக சொல்ல வேண்டுமானால் பெரியாரின் அணைத்து சொத்துகளையும் நாட்டு உடைமை ஆக்க வேண்டும் ,கி வீரமணியை நடுரோட்டில் பிச்சை எடுக்க அனுப்ப வேண்டும். .... இப்படிக்கு ஒரு பகுத்தறிவாளன்.
By பாரதி
12/24/2010 10:44:00 AM
ஏன் எந்த பகுத்தறிவுவாதியும் தங்கள் கருத்தை பதிவு செய்யவில்லை - பெரியார்நேசன், அச்சரபாக்கம் மா பா மற்றும் விவேகாநந்தன் என்கிற பெயரில் சிலர் பார்பனர்களை திட்டுவார்கள் அல்லது சங்கராச்சாரியாரை திட்டுவார்கள் இவர்கள் வீரம் எங்கே போனது ஓ நீங்கள் செய்யும் தவறை சொன்னால் உங்களுக்கு தாங்க முடியாதே. விமர்சனங்களை தாங்கும் சக்தி உங்களுக்கு கிடையாதே. மிரட்டினாலே அஞ்சி ஓடும் ஒரு சமூகத்தை திட்டினால் தான் நீங்கள் வீரர்கள் அல்லவா.
By கோ க
12/24/2010 8:09:00 AM
அவருக்கு ரொம்ப பெரிய லிஸ்ட்டே இற்கு பதில் சொல்ல இதுக்கெல்லாம் பதில் சொல்ல என்ன இது சி பி ஐ கேள்வியா.
By prabu
12/24/2010 7:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக