சனி, 25 டிசம்பர், 2010

govt.aid to 10th failed students: அரசு நிதியுதவி பெற 10-ம் வகுப்பு தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்

விவரம் தவறாக  இருக்கிறது. பட்டியல் பிரிவினருக்குச் சலுகை அளிக்கும் முறையில்தான் வரம்பு  இருக்கும். எனவே, குறிப்பிட்ட ௪௫ அல்லது ௪௦ அகவையைக் கடந்திருக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அகவை வரம்பைக் குறிப்பிட்டிருந்தால் மாறி அமைந்திருக்கும். எனவே, சரிபார்த்துத் திருத்தமாகச் செய்தியை வெளியிட வேண்டுகின்றேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
அரசு நிதியுதவி பெற 10-ம் வகுப்பு தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்

First Published : 25 Dec 2010 02:26:08 AM IST


சென்னை, டிச. 24: பள்ளி இறுதித் தேர்வு (10-ம் வகுப்பு) தவறியவர்கள் அரசின் நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சம்பத் கூறியிருப்பது: பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ. 100 நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு, பள்ளிகளில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 10-ம் வகுப்பு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறாதவர்களாக இருந்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். மேலும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 வயதையும், மற்றவர்கள் 40 வயதையும் கடந்து இருக்க வேண்டும்.  இந்த நிதியுதவியைப் பெற விரும்புகிறவர்கள், அதற்கான சான்றிதழ்களுடன், சென்னை நந்தனத்தில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 31-ம் தேதிக்குள் நேரில் வந்து பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக